பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 8.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ரைட் சகோதரர்கள் - ரொட்டி ரைட் சகோதரர்கள் : காற்றைவிட இலேசான வாயுக்களை நிரப்பிய மிகப் பெரிய பலூன்களின் உதவியால் நூறு ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் வானத்தில் பறந்து வந்தார்கள். பின்னர் பலூன்களில் ஒருவகை எந்திரத்தை இணைத்துப் பறக்கலாயினர். இதற்கு ஆகாயக் கப்பல் (த.சு.) என்று பெயர். ஆனால் முதன்முதலாக ஓர் எஞ்சினைப் பொருத்தி, விரும்பிய திசையில் ஓட்டிச் செல்லக்கூடிய விமானத்தை அமைத்த பெருமை ரைட் சகோதரர்களைச் சேரும். அமெரிக்காவைச் சேர்ந்த இவர்களின் முழுப் பெயர்கள் வில்பர் ரைட் (Wilbur Wright, 1867-1912), ஆர்வில் ரைட் (Orville Wright, 1871-1948) 6TGOT LIGOT. வட கரோலினாவில் கிட்டி ஹாக் (Kitty Hawk) Greirob கிராமமே இவர் களுடைய பரிசோதனைகளுக்கு ஏற்ற இடமாக அமைந்தது. அங்கு 1903-ல் இவர்கள் ஒரு விமானத்தைச் செய்து, பெட்ரோலில் இயங்கும் ஓர் எஞ்சினை அதில் பொருத்தினார்கள். முதன் முதலில் இந்த விமானம் தரையிலிருந்து சுமார் 3 மீட்டர் உயரம் கிளம்பி, 12 விநாடிகளே பறந்தது; அது 36 மீட்டர் தூரம்தான் சென்றது. 1905-ல் ரைட் சகோதரர்கள் வேறொரு விமானத்தை அமைத்து அதில் 39 நிமிடங்கள் பறந் தனர்; இந்த விமானம் 38,000 மீட்டர் தூரம் சென்றது. இந்த அரிய சாதனைகளை மக்கள் முதலில் பொருட்படுத்தவில்லை.அமெரிக்க அரசாங்கமும் ஆதரவு காட்டவில்லை. 1908-ல் பிரெஞ்சு நாட்டினர் இவர்களு டைய பறக்கும் எந்திரத்தைப் பாராட்டிப் பரிசனித்தனர். அதன் பிறகே அமெரிக்க அரசாங்கம் இதன் முக்கியத்துவத்தை உலகின் முதல் விமானம்: ஆர்வில் ரைட் விமானத்தை இயக்குகிறார். தரையிலிருந்து எழும்பிப் பறந்து செல்லும் விமானத்துடன் ஓடுபவர் வில்பர் ரைட் வில்பர் ரைட் ஆர்வில் ரைட் 91 உணர்ந்தது. 1909-ல் ரைட் சகோதரர் கள் தங்கள் பெயரில் தொழிற்சாலை ஒன்றை அமைத்து ஆகாயவிமானம் தயாரிக்கத் தொடங்கிப் பெரும்புகழ் பெற்றனர். ரைன் ஆறு (Rhine) : ஐரோப்பாக் கண்டத்தில் பாயும் முக்கியமான ஆறு களுள் ஒன்று ரைன், மற்ற ஆறுகளைவிட இதுவே போக்குவரத்துக்கு மிகவும் பயன் படுகிறது. ரைன் ஆற்றின் நீளம் 1,320 கிலோமீட்டர். சுவிட்ஸர்லாந்தில் ஆல்ப்ஸ் மலைத் தொடரில் ரைன் ஆறு தோன்றுகிறது. பிரான்ஸுக்கும் மேற்கு ஜெர்மனிக்கு மிடையே எல்லையாக ஓடி, பிறகு மேற்கு ஜெர்மனி, நெதர்லாந்து நாடுகளினூடே பாய்ந்து, வட கடலில் கலக்கிறது. கடலில் கலக்குமுன் பல துணையாறுகள் இதனுடன் சேருகின்றன. சில ஆறுகளுடனும் பல நகரங்களுட னும் ரைன் ஆறு பல கால்வாய்களால் இணைக்கப்பட்டுள்ளது. முக்கிய நகரங்கள் பல இந்த ஆற்றின் கரையில் அமைந் துள்ளன. ரொட்டி (Bread) : சத்துள்ள ஓர் உணவுப்பொருள் ரொட்டி. இது கோதுமை, ரை, பார்லி, சோளம் முதலிய தானியங்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. கோதுமை மாவிலிருந்து தயாரிக்கும் ரொட்டியே மிகச் சிறந்தது; நல்ல சுவை யுள்ளது. இதில் புரதச் சத்து அதிகம். கோதுமை மாவைச் சலித்து எடுத்துப் பெரிய தொட்டிகளிலிடுவார்கள். மாவைக் குறிப்பிட்ட அளவு எடைபோட்டு, அதற் கேற்ற அளவில் நீர், ஈஸ்ட்டு (த.க.). சர்க் கரை அல்லது உப்பு முதலிய பொருள் களைச் சேர்த்துக் கலக்குவார்கள். அதை நன்றாகப் பிசைந்து எஃகுத் தொட்டி களிலிட்டு நொதிக்க வைப்பார்கள். வேண்டிய அளவு நொதித்ததும் தேவை