பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 8.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

92 ரொடீஷியா - ரோம் யான அளவுக்கு மாவைச் சிறிது சிறிதாகப் பகிர்த்து கொள்வார்கள். பின்னர் அவற் றைப் பந்துபோலாக்கி வார்ப்பு எந்திரத்தி விட்டால் ரொட்டியை அதன் வடிவத்தில் பெறலாம். இவற்றைத் தட்டுகளில் வரிசையாக அடுக்கி, அடுப்பிலிட்டு பிஸ்கோத்து (த.க.) சுடுவதைப் போலவே கூடுவர். சிறு அளவில் வீட்டிலேயே ரொட்டி தயாரிக்கலாம். கண் ரொடீஷியா ஆப்பிரிக்காக் டத்தின் தென் பகுதியிலுள்ள நாடு ரொடீஷியா. இதன் பரப்பு 3,88,000 சதுர கி.மீ. மக்கள்தொகை 53,10,000 (1970). இவர்களுள் ஐரோப்பியரின் எண்ணிக்கை சுமார் 2.50,000. தலை நகரம் சாலிஸ்பரி. இந் நாடு மலைப்பாங்கான பீடபூமி யாகும். சாம்பசி. லிம்போப்பொ, சாபி முதலிய ஆறுகள் பாய்கின்றன. புகையிலை பெருமளவில் விளைகிறது. சோளம், கோதுமை, கரும்பு, பருத்தி, பழவகைகள் முதலியன மற்ற விளைபொருள்கள். மலைப் பகுதியில் தேயிலை பயிராகிறது. தேக்கு மரங்களும் அதிகம். கால்நடை வளர்த்தல் முக்கியத் தொழில்களுள் ஒன்று. குரோ மியம், இரும்பு, தங்கம், கல்நார், நிலக்கரி முதலியன இங்குக் கிடைக்கின்றன. சம ரொடீஷியா பிரிட்டனின் குடியேற்ற நாடாக இருந்தது. ஆட்சிப் பொறுப்பு யாவும் சிறுபான்மையினராக உள்ள ஐரோப்பியரிடமே இருந்தது. இந் நாட் டின் மக்களான நீக்ரோக்களுக்குச் உரிமை வழங்க ஐரோப்பியர் விரும்ப வில்லை. எனவே, பிரிட்டன் இதற்குச் சுதந்தரம் வழங்க மறுத்தது. ஆனால், ரொடீஷிய அரசாங்கம் 1965-ல் சுதந்தரம் அடைந்துவிட்டதாகச் சுயேச்சையாக அறி வித்தது. எனினும் உலகின் பிற நாடுகளும் ஐக்கியநாடுகள் சபையும் (த.க.) இதனை அங்கீகரிக்கவில்லை. ரோம்: இத்தாலி நாட்டின் தலை நகரம் ரோம். உலகின் பழமையான நகரங் களுள் இது ஒன்று. டைபர் (Tiber) ஆற்றின் கரையில் இந் நகரம் அமைந்துள்ளது. மக்கள்தொகை சுமார் 28 லட்சம்(1969). பழங் காலத்தில் பெரும் புகழ் பெற் றிருந்த ரோமப் பேரரசின் தலைநகராக ரோம் இருந்தது. அக் காலத்தில் கட்டப் பட்ட அரண்மனைகள், கோயில்கள், கட்டடங்கள் ஆகியவற்றின் சின்னங்களை இன்றும் இங்குக் காணலாம். முதல் நூற்றாண்டில் கட்டப்பட்ட கலாசியம் என்னும் பெரிய விளையாட்டு அரங்கத்தின் ரோம் நகரின் ஒரு தோற்றம் சின்னங்களும் இங்குக் காணப்படுகின்றன. ஓவியங்கள், சிற்பங்கள் முதலியவற்றை இந் தகரில் உள்ள பல கலைக்கூடங்களிலும் பொருட்காட்சிசாலைகளிலும் காணலாம். பீட்டர் இந் நகரிலுள்ள செயின்ட் கோயில் உலகின் மிகப் பெரிய கிறிஸ்தவக் கோயிலாகும். ரோம் பல்கலைக்கழகம் மிகத் தொன்மையானது. ரோமன் கத்தோலிக்க சபையின் தலை விளங்கும் நகராகவும் தனியரசாகவும் வாட்டிக்கன் (த.க.) இந் நகரின் ஒரு பகுதி யாக உள்ளது. கத்தோலிக்கர்களின் தலைமைக் குருவாகிய போப்பாண்டவர் இங்கு வாழ்கிறார். ரோம் நகரைக் காணச் செல்லும் வெளி நாட்டினருக்கு வழிகாட்டுவது இங்குள்ள மக்களின் முக்கியத் தொழில்களுன் ஒன்றாகும். ரோம் நகரிலுள்ள ' கலாசியம்'