பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 8.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

- ரோஜா - லண்டன் 93 ரோஜா மலர்கள் ரோஜா: மிக அழகான மலர்களுள் ரோஜா ஒன்று. ரோஜாப் பூக்களால் அழகிய மலர்மாலைகளைக் கட்டுகின்றனர். இம் மலர் மிகுந்த மணமுள்ளது. இளஞ் சிவப்பு நிறத்தில் மட்டுமின்றி, சிலப்பு, மஞ்சள், வெள்ளை ஆகிய நிறங்களிலும் ரோஜாப் பூக்கள் உண்டு. ஆனால் அவற் றிற்கு அவ்வளவு மணமில்லை. ரோஜாச் செடி குற்றுச்செடியாக வளரும். தரை, சுவர், மரம் முதலியவற் றில் கொடியாகப் படருவதும் உண்டு. ரோஜாவில் சுமார் 200 வகைகள் உள்ளன. ரோஜாச் செடியில் சிறு முட்கள் இருக்கும். இதனால் ஆடு மாடு முதலியன இச் செடிகளை நெருங்குவதில்லை. வேலி அல்லது மரத்தைத் தொற்றிக்கொண்டு படரவும் முட்கள் உதவுகின்றன. இலைகள் சிறியவை. இலையின் ஓரம் பல் பல்லாகப் பிளவுபட்டிருக்கும். பூக்கள் தனியாகச் சிறு கிளைகளின் துனிகளில் பூக்கும். கொடியாக வளரும் வகைகளில் கொத்துக் கொத்தாகக் காணப்படும். பூக்களில் அடுக் கடுக்காகப் பல இதழ்கள் அமைந்திருக்கும். பூக்களில் சிறியதாக ஒருவகைப் பொய்க் கனி உண்டாகிறது. இது உண்பதற்கு ஏற்றதல்ல. மித வெப்ப நாடுகளிலும் குளிர்ந்த பகுதிகளிலும் ரோஜாச் செடிகள் வளரு கின்றன. இந்தியா, ஆப்பிரிக்கா, பிரான்ஸ் ஆகிய இடங்களில் ரோஜாச் செடிகள் செழித்து வளருகின்றன. பெரும்பாலும் பதியம் போட்டும், வெட்டுக் கம்புகளை நட்டும் ரோஜாச் செடிகளைப் பயிர்செய் கிறார்கள். ரோஜாப் பூவிலிருந்து நறுமணப் பொருளான அத்தரும், பன்னீரும் தயாரிக் கிறார்கள். ரோஜாப் பூவுடன் சர்க்கரையும் தேனும் கலந்து குல்கந்து செய்வார்கள். இது மிகவும் சுவையாக இருக்கும். பூவும் விதையும் மருந்தாகவும் மருந்தாகவும் பயன்படுகின் றன. லட்சுமணபுரி (Lucknow) : உத்தரப் பிரதேசத்தின் தலைநகரம் லட்சுமணபுரி. இந்தியாவின் வரலாற்றுப் புகழ்பெற்ற நகரங்களுள் இது ஒன்று. இந் நகரின் மக்கள்தொகை 8,26,000 (1971). கங்கையின் துணையாராகிய கோமதி ஆற்றின் கரையில் இந் நகரம் உள்ளது. இது 18ஆம் நூற்றாண்டில் அயோத்தி நவாபின் தலைநகராக இருந்தது. இங்குப் பல அழகிய மாளிகைகளும் கட்டடங்களும் இருக்கின்றன. இந் நகரில் பல்கலைக்கழகம் ஒன்று உள்ளது. அழகிய பல பூங்காக் களும் உள்ளன, தங்கம், வெள்ளி சரிகை வேலைகளுக்கு இந் நகரம் பெயர் பெற்றது. இங்கு தயாரிக்கப்படும் கைவேலைப்பாடு மிக்க வெள்ளிப் பாத்திரங்கள், அழகிய மண் பாண்டங்கள், பொம்மைகள் முதலியன வும் புகழ்பெற்றவை. லண்டன்: உலகின் மிகப் பெரிய நகரங்களுள் லண்டன் ஒன்று. இது கிரேட் லண்டனில் உள்ள நாடாளுமன்றக் கட்டடம்