பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 9.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

லைபீரியா -


லேவன்ஹூக் தமது ஆராய்ச்சி பற்றிய குறிப்புகளை இங்கிலாந்திலுள்ள ராயல் கழகத்திற்கு அவ்வப்போது எழுதிவந்தார். 1695ஆம் ஆண்டில் இவரது ஆராய்ச்சிக் குறிப்புகள் தொகுக்கப்பட்டு நூல்களாக வெளிவந்தன.

லைபீரியா : ஆப்பிரிக்காவின் மேற்குக்கரையிலுள்ள ஒரு குடியரசு நாடு லைபீரியா. இந்நாட்டின் பரப்பு 99,400 சதுர கிலோமீட்டர். மக்கள்தொகை சுமார் 15,30,000 (1970).

நாட்டின் மத்திய பகுதி மலைப்பாங்கான பீடபூமி. பூமத்திய ரேகைக்கு அருகிலிருப்பதால் இந்நாட்டில் வெப்பம் அதிகம். மழையும் மிகுதியாகப் பெய்கிறது. அடர்ந்த காடுகள் வளர்ந்துள்ளன.

இந்நாட்டில் ரப்பர் பெருமளவில் பயிரிடப்படுகிறது. முக்கிய ஏற்றுமதிப் பொருள்களுள் ரப்பரும் ஒன்று. காப்பி, கோக்கோ , வாழை முதலியன மற்ற விளை பொருள்கள். இரும்புத்தாது ஏராளமாக வெட்டியெடுக்கப்படுகிறது. வெளிநாடுகளுக்கு இதனை ஏற்றுமதி செய்கின்றனர். வைரம், தங்கம் முதலியனவும் கிடைக்கின்றன.

மக்கள் அனைவரும் நீக்ரோக்களாவர். பெரும்பாலோர் கிறிஸ்தவ சமயத்தைச் சார்ந்தவர்கள். முக்கிய மொழி ஆங்கிலம். தலைநகரம் மன்ரோவியா. இது ஒரு சிறந்த துறைமுகம்.

அமெரிக்காவில் அடிமைகளாக இருந்து விடுவிக்கப்பட்ட நீக்ரோமக்களுக்காக

லைபீரியா

லைபீரியா

1822-ல் இந்நாடு உருவாக்கப்பட்டது. 1847-ல் சுமார் 3,000 நீக்ரோக்கள் இங்கு குடியேறினர். லத்தீன் மொழியில் 'விடுதலை' என்று பொருள்படும் லைபீரியா என்ற சொல்லே இந்நாட்டின் பெயராயிற்று. பிறகு இந்நாடு ஒரு குடியரசாக மாறியது. அன்று குடியேறிய நீக்ரோ மக்களின் சந்ததியினர் இன்று சுமார் 20,000 பேர் உள்ளனர். நாட்டின் நிருவாகம் பெரும்பாலும் இன்று இவர்களுடையது தான்.


வங்காள தேசம் ( Bangla Desh ) : இந்தியாவின் கிழக்கு எல்லையிலுள்ள ஒரு குடியரசு நாடு வங்காள தேசம். தெற்கில் வங்காள விரிகுடாவும் மற்ற பக்கங்களில் இந்திய மாநிலங்களான மேற்கு வங்காளம், ஆசாம், மேகாலயா, திரிபுரா ஆகியனவும் உள்ளன. தென்கிழக்கில் பர்மா உள்ளது. இந்நாட்டின் பரப்பு 1,43,000 சதுர கிலோமீட்டர். மக்கள் தொகை சுமார் ஏழு கோடி.

வங்காள தேசம் முழுவதும் தாழ்வான சமவெளியாகும். கங்கையாற்றின் கழி முகப் பகுதியில் இந்நாடு அமைந்துள்ளது. கங்கை, பிரம்மபுத்திரா ஆகிய ஆறுகள் இங்குப் பல கிளையாறுகளாகப் பிரிந்து கடலில் கலக்கின்றன. இவை போக்குவரத்துக்கும் நீர்ப்பாசனத்திற்கும் மிக உதவியாக உள்ளன. மேலும், இவற்றால் கொண்டுவந்து சேர்க்கப்படும் வண்டல்மண் படிந்து இந்நாடு மிகச் செழிப்பாக உள்ளது. நெல் முக்கியமான விளைபொருள். சணல் மிகுதியாகப் பயிரிடப்படுகிறது. உலகில் உற்பத்தியாகும் சணலில் 80% இங்குதான் விளைகிறது. புகையிலை, கரும்பு முதலியன மற்ற விளைபொருள்கள். காடுகளில் மூங்கில் அதிகம். நாட்டின் வட பகுதியிலுள்ள சில்ஹெட் மலைச்சாரலில் தேயிலை விளைகிறது.

மக்களில் பெரும்பாலோர் வேளாண்மையில் ஈடுபட்டுள்ளார்கள். கால்நடை வளர்த்தலும் மீன்பிடித்தலும் மற்ற முக்கியத் தொழில்கள். இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளுக்கு இங்கிருந்து மீன் பெருமளவில் ஏற்றுமதியாகிறது. கைத்தறித் தொழில்களும் இப்போது வளர்ச்சியடைந்து வருகின்றன. சிட்டகாங் நகரில் ஒரு பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையும் ரசாயன உரத்தொழிற்சாலையும் உள்ளன. நாராயண் கஞ்ச் என்னுமிடத்தில் கப்பல்கட்டும் தொழில் நடக்கிறது. காகிதம், சிமென்டு முதலியன தயாரிக்கும் ஆலைகளும் இந்நாட்டில் பல உள்ளன. சில்ஹெட்,