பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 9.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வரிக்குதிரை

17

வரிக்குதிரை

வரிகளை மூன்று வகைகளாகப் பிரிப்பார்கள். சொத்து மதிப்பு அல்லது வருமானம் எந்த அளவுக்கு இருந்தாலும், விதிக்கும் வரி ஒரே அளவாக இருந்தால், அது சமவிகித வரி எனப்படும். ஒரு பெரிய மாளிகைக்கும், ஒரு சிறிய வீட்டுக்கும் ஒரே அளவு வரி விதிப்பது இவ்வகையைச் சேர்ந்தது. சொத்துகளின் மதிப்பு அல்லது வருமானங்களின் அளவு, உயர்வதற்கு ஏற்ப அதிகமான வரி வசூலிப்பதற்கு 'வளர் விகித வரி' (Progressive tax) என்று பெயர். குறைவான வருமானங்களின் மீதும் கூடுதலான வரி விதிக்கப்படும்பொழுது அதைத் 'தேய்வு விகித வரி' ( Regressive tax ) என்கிறார்கள். விற்பனை வரியைத் (Sales tax) தேய்வு விகித வரி எனலாம்.

வசூலிக்கும் முறையைப் பொறுத்தும் வரிகளை நேர்முக வரி (Direct-tax ) மறைமுக வரி ( Indirect-tax ) என இருவகையாகப் பிரிப்பர். வருமான வரி நேர்முக வரிக்கு எடுத்துக்காட்டு. வருமானம் பெறுகின்றவர் தம்முடைய வருமானத்தின் அளவிற்கு ஏற்ப அரசுக்கு நேரடியாக வருமான வரியைச் செலுத்துகிறார்கள். இந்த வரி, வரி கொடுப்பவரின் வருமானத்தைப் பொறுத்து அமையும். கொடுப்பவருடைய சக்தியைக் கணக்கிடாமல் நிருணயிக்கப்படும் வரி மறைமுக வரி எனப்படும். விற்பனை வரி இதற்கு எடுத்துக்காட்டு. பொருள்களை யார் வாங்கினாலும் விற்பனை வரி கொடுக்கவேண்டும். அவ்வாறே ஏற்றுமதி, இறக்குமதிப் பொருள்களின்மீது விதிக்கப்படும் சுங்கவரிகளும், உள்நாட்டிலேயே உற்பத்தியாகும் மண்ணெண்ணெய், ரப்பர், புகையிலை, எஃகு, மதுவகைகள் முதலியவற்றின் மீது விதிக்கப்படும் கலால் வரிகளும் (Excise duties ) மறைமுக வரிகளாகும்.

இந்தியாவில் வரிகள் மத்திய அரசு, மாநில அரசு, உள்ளாட்சி (நகராட்சி, ஊராட்சி) என்ற மூன்று படிகளில் வசூலிக்கப்படுகின்றன. மத்திய அரசும், மாநில அரசுகளும் விதிக்கும் வரிகளைப் பற்றி இந்திய அரசியலமைப்பு நிருணயம் செய்துள்ளது. உள்ளாட்சி வரிகளுக்கு இத்தகைய அரசியலமைப்பு நிருணயம் இல்லை. ஆனால், மாநில அரசாங்கம் அவ்வப்போது இதைச் சட்டம் மூலமாகவும், நிருவாக அமைப்பு மூலமாகவும் தீர்மானிக்கிறது.


வரிக்குதிரை: விலங்குக்காட்சிசாலையில் வரிக்குதிரையைப் பார்க்கலாம். இது குதிரை இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு. இதன் உடலில் வரி வரியாகப் பட்டைகளிருக்கும். அதனால் இதற்கு வரிக்குதிரை என்று பெயர். ஆப்பிரிக்காக் கண்டத்தில் மட்டுமே வரிக்குதிரை வாழ்கிறது. முன்பு அக்கண்டத்தில் எண்ணற்ற வரிக்குதிரைகளிருந்தன. ஆனால் ஏராளமான வரிக் குதிரைகளை அவற்றின் இறைச்சிக்காகவும் தோலுக்காகவும் மக்கள் வேட்டையாடிக் கொன்றுவிட்டனர். சிங்கங்களும் ஆயிரக்கணக்கில் இவற்றைக் கொன்று அழித்து விட்டன. எனவே இப்போது மிகச் சில வரிக்குதிரைகளே எஞ்சியுள்ளன.

வரிக்குதிரையின் அடிப்படை நிறம் வெண்மை. இதன்மேல் கறுப்பு அல்லது கரும்பழுப்பு நிறப் பட்டைகளிருக்கும். அடிவயிறு, தொடையின் உட்புறம் நீங்கலாக மற்ற எல்லா இடங்களிலும் இப்பட்டைகளிருக்கும். கால் முழுவதுங்கூட இப்பட்டைகள் இருக்கும். வரிக்குதிரை திறந்த புல்வெளிகளில் வாழும். அவ்விதச் சூழ்நிலையில் இதன் நிறம் பகைவர்களின் கண்ணுக்கு எளிதில் படாதவாறு மறைக்க உதவுகிறது.

வரிக்குதிரை சுமார் 1½ மீட்டர் உயர மிருக்கும். இதன் காதுகள் சற்று நீளமானவை. பிடரிமயிர் குட்டையாக இருக்கும். வாலில் மயிர் நெருக்கமாக இல்லாமல் முனையில்மாத்திரம் குச்சமாக இருக்கும். வரிக்குதிரைகள் பொதுவாகச் சிறு சிறு கூட்டங்களாக வாழும். ஒவ்வொரு கூட்டத்திற்கும் ஓர் ஆண் தலைமை தாங்கி வழிநடத்தும்.

வரிக்குதிரை சிறிய ஒலியைக் கூடத் தெளிவாகக் கேட்கும் திறனுடையது. நல்ல பார்வையும் உண்டு. மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடக்கூடியது. இவ்வளவு திறமைகளிருந்தாலும் இது மிகவும் அச்சமுள்ள பிராணி. சிறிய சத்தம் கேட்டாலும் விரைந்து ஓடிவிடும். சிற்சில சமயங்களில் தன் பகைவரோடு இது முரட்டுத்தனமாகச் சண்டையிடுவதும்-