பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 9.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வளர்ப்பு விலங்குகள்

21

களுடன் பட்டேலும் சிறை புகுந்தார். சிறையில் நோயுறவே விடுதலையானார்.

1939-ல் இரண்டாம் உலக யுத்தம் தொடங்கியது. காங்கிரஸ் தலைவர்களின் விருப்பத்திற்கு மாறாக, இந்தியாவைப் போரில் பிரிட்டன் ஈடுபடுத்தியது. இதை எதிர்த்துக் காங்கிரஸ் அமைச்சரவைகள் பதவி விலகின. காந்தியடிகள் தனியார் சத்தியாக்கிரகம் தொடங்கினார். பட்டேலும் அதில் ஈடுபட்டுச் சிறைப்பட்டார். 1941-ல் விடுதலையானார்.

'வெள்ளையனே வெளியேறு என்ற இயக்கத்தை 1942 ஆகஸ்டு 8-ல் காந்தியடிகள் தொடங்கினார். பட்டேல் உட்பட எல்லாத் தலைவர்களும் சிறைப்பட்டனர். அரசு கடுமையான அடக்கு முறையைக் கையாண்டும், இவ்வியக்கத்தை ஒடுக்க இயலவில்லை. இந்தியாவை வீட்டு வெளியேறுவதென 1945-ல் ஆங்கிலேயர் முடிவுசெய்தனர். அவ்வாண்டு ஜூன் 15-ல் பட்டேல் விடுதலையானார். 1947 ஆகஸ்டு 15-ல் இந்தியா சுதந்தரம் பெற்றது. ஜவாஹர்லால் நேரு இந்தியாவின் முதல் பிரதமராகவும் பட்டேல் துணைப் பிரதமராகவும், உள்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றனர்.

பட்டேல் 1950-ல் நோய்வாய்ப்பட்டு டிசம்பர் 15ஆம் நாள் காலமானார்.


வளர்ப்பு விலங்குகள் : நாய், பூனை. ஆடு, மாடு, குதிரை முதலிய விலங்குகளை வீட்டில் வளர்க்கிறேம். இவை நமக்குப் பல வழிகளில் உதவியாக இருக்கின்றன. இவ்வாறு, மனிதனால் வளர்க்கப்படுபவை வளர்ப்பு விலங்குகளாகும்.

விலங்குகளைப் பழக்கி வளர்க்கும் வழக்கம் நெடுங்காலமாக இருந்து வருகிறது. முதலில், உணவுக்காக மனிதன் காட்டு விலங்குகளை வேட்டையாடி வந்த காலத்திலேயே இவ்வழக்கம் இருந்ததெனக் கூறவாம். வேட்டையாடுவதில் தனக்கு உதவியாக இருக்க அவன் நாயைப் பழக்கியிருக்கலாம். பின்னர், ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குச் செல்லவும் தன் உடைமைகளைச் சுமந்து செல்லவும் மாடு, குதிரை முதலியவற்றைப் பயன்படுத்திக் கொண்டான். ஆடு, மாடு போன்ற கால்நடைகளிடமிருந்து பாஸ், இறைச்சி, தோல் முதலியன கிடைத்ததால் அவற்றைப் பெருமளவில் வளர்க்கத் தொடங்கினான். அதன் பின்னர் தானியங்களைப் பயிர் செய்யத் தொடங்கிய காலத்தில், நிலத்தை உழுவதற்கு மாடு, குதிரை முதலிய விலங்குகளைப் பயன்படுத்தலானான். இவ்வாறு, பழங்காலம் முதலே பழக்கிவந்ததன் விளைவாக இவ்விலங்குகளின் இயல்பு இன்று முற்றிலும் மாறிவிட்டது.


இன்று மிகச் செல்லமாக வளர்க்கப்படும் விலங்குகளுள் ஒன்று நாய். இது வீட்டைக் காக்கிறது; வேட்டையாடும் போது உதவுகிறது. வடதுருவப் பகுதியில் வாழும் எஸ்கிமோக்கள் (த.க.) ஸ்லெட்ஜ் என்னும் பனிச்சறுக்கு வண்டியை இழுத்துச் செல்லச் சில நாய்களைப் பயன் படுத்துகிறார்கள். பூனையை இப்போது பலர் அவ்வளவு விருப்பத்துடன் வளர்ப்பதில்லை. ஆனால் முற்காலத்தில் இதற்கு மதிப்பு அதிகம். எகிப்தில் பூனையைத் தெய்வமாகவே கொண்டாடி வழிபட்டு வந்தனர். தானியத்தை அழிக்கும் எலி,

வளர்ப்பு விலங்குகளில் சில

வளர்ப்பு விலங்குகளில் சில