பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 9.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

வாக்குரிமை

சுண்டெலி ஆகியவற்றைக் கொல்வதற்குப் பூனைகளை வளர்ப்பது வழக்கம்.

ஆடு. மாடு, எருமை முதலிய விலங்குகள் பால் கொடுக்கின்றன. செம்மறியாட்டிலிருந்து கம்பளிக்கான ரோமம் கிடைக்கிறது. இறைச்சி, தோல் ஆகியவற்றுக்கும் இவ்விலங்குகள் பயன்படுகின்றன. உழுவதற்கும், வண்டியிழுப்பதற்கும் மாடு, எருமை ஆகியவை உதவுகின்றன. ஒட்டகம், அல்பாக்கா, லாமா ஆகியவை பாலைவனங்களில் மனிதனுக்குப் பயன்படுகின்றன.

குதிரை நமக்குப் பல வழிகளில் உதவுகிறது. உழுவதற்கு மேல்நாடுகளில் குதிரையையே பெரும்பாலும் பயன்படுத்திவந்தனர். முற்காலத்தில் குதிரைப்படை முக்கியமானதாக இருந்தது. இன்றும் காவல்துறையில் குதிரைப் படைப் பிரிவு உள்ளது. வண்டியிழுக்க மட்டுமின்றி, விளையாட்டுகளிலும் பந்தயங்களிலும் குதிரையைப் பயன்படுத்துகிறார்கள். கழுதை, ஒட்டகம் ஆகியவை பொதி சுமக்க உதவும் பிற விலங்குகள். திபெத்தில் வளர்க்கப்படும் கவரிமா, வட துருவப் பகுதிகளில் காணப்படும் பனிமான், தென் அமெரிக்க மலைப்பகுதிகளில் வாழும் லாமா முதலியவையும் பொதி சுமக்கப் பயன்படுகின்றன. இறைச்சிக்காகப் பன்றியை வளர்க்கிறார்கள். யானையையும் காட்டிலிருந்து பிடித்துப் பழக்குகிறார்கள்; பிறகு அது பல வேலைகளுக்கு உதவியாக இருக்கிறது. வளர்ப்பு விலங்குகளில் பெரும்பாலானவற்றைப் பற்றித் தனிக் கட்டுரைகள் உள்ளன.


வாக்குரிமை: நாடாளுமன்றம், சட்டமன்றம், நகராட்சி மன்றம். ஊராட்சி மன்றம் ஆகியவற்றுக்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்குத் தேர்தல்கள் நடைபெறுகின்றன. இத்தேர்தல்களில் நாட்டின் குடிகள் தங்கள் வாக்குகளை வழங்கிப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இவ்வாறு வாக்களிப்பதற்குக் குடிகளுக்கு உள்ள உரிமையை 'வாக்குரிமை' என்கிறேம்.

நாட்டை ஆள்வதற்குரிய எல்லா அரசியல் அதிகாரங்களும் நாட்டின் குடிகளுக்கே உண்டு என்பது குடியரசின் தத்துவம். குடிமக்கள் தங்கள் அரசியல் அதிகாரத்தை வாக்குரிமை மூலம் செலுத்துகின்றனர். இந்த உரிமையைப் பயன்படுத்தித் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்துத் தங்கள் சார்பில் அரசை நடத்தி வர அவர்களுக்கு அதிகாரம் அளிக்கின்றனர். எனவே, மக்களாட்சி நடைபெறும் நாட்டில் வாக்குரிமை மிக இன்றியமையாத ஒன்றாகும்.

வாக்குரிமை என்பது ஒரு நாட்டுக் குடிமக்களின் மிகச் சிறந்த உரிமையாகும். வாக்குரிமை மூலமாக அவர்கள் தங்கள் நாட்டின் எதிர்காலத்தையே மாற்றி யமைத்துவிடலாம். எனவே, தேர்தலில் உரிமைமட்டு வாக்களிப்பது குடிகளின் உரிமை மட்டுமன்று; அவர்களுடைய கடமையுமாகும். சோம்பலினாலும், அலட்சியத்தினாலும் தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பவர், தம்முடைய மிகச் சிறந்த உரிமையைப் புறக்கணிப்பவராவார். ஏராளமானவர்கள் இவ்வாறு புறக்கணித்தால் நேர்மையற்றவர்கள் அரசாங்கத்தைக் கைப்பற்றி நாட்டுக்குக் கேடு சூழ இடம் ஏற்படும். ஆகவேதான், பெல்ஜியம், ஆஸ்திரேலியா, செக்கோஸ்லோவாக்கியா, மெக்சிக்கோ முதலிய சில நாடுகளில் தேர்தலில் எல்லோரும் வாக்களித்தாக வேண்டும் என்ற சட்டம் உள்ளது. வாக்களிக்காதவர் தக்க காரணம் காட்டவில்லை யென்றால் அபராதமோ சிறைத் தண்டனையோ விதிக்கப்படுகிறது.

தொடக்கத்தில் சொத்துரிமை, கல்வியறிவு போன்ற சில தகுதிகள் உடையவர்களுக்கே வாக்குரிமை வழங்கப்பட்டது. நெடுங்காலமாகப் பெண்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டு வந்தது. ஆனால், இன்று ஒரு குறித்த வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் யாவருக்கும் வாக்குரிமை அளிப்பதே வழக்கமாக இருக்கிறது. இந்தியாவில் 21 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வாக்குரிமை உண்டு. சில நாடுகளில் 18 வயது முதலே வாக்களிக்கலாம்.

ஒரு நாட்டிலுள்ள குடிகளுக்கு மட்டுமே வாக்குரிமை உண்டு. அவர்கள் வாக்குரிமை பெறுவதற்குரிய வயதை அடைந்தவர்களாகவும், வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரைப் பதிவு செய்துகொண்டவர்களாகவும் இருக்க வேண்டும். அயல் நாட்டுத் தூதரகங்களில் பணிபுரியும் அயல்நாட்டவர்களுக்கும், வேறு காரியங்களுக்காகத் தாற்காலிகமாகத் தங்கியிருக்கும் வெளிநாட்டினருக்கும் வாக்குரிமை கிடையாது. சிலர் ஒரு நாட்டின் குடிகளாக விரும்பி வந்து தங்கி இருப்பார்கள். அவர்கள் சில ஆண்டுகள் குடியிருந்த பிறகே அந்த நாட்டின் நிலையான குடிகளாக முடியும் என்று ஒவ்வொரு நாட்டிலும் சட்டம் உண்டு. இந்தக் காலக்கெடு முடியும் வரையிலும் அவர்களுக்கு வாக்குரிமை கிடையாது. நாட்டின் குடிகளிலும் சித்த சுவாதீன மற்றவர்களும், கடுமையான குற்றங்