பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 9.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வால்ரஸ்

எஸ்கிமோ (த.க.) மக்களுக்கு வால்ரஸின் இறைச்சி ஒரு முக்கிய உணவு. இதன் கொழுப்பிலிருந்து எண்ணெயும் எடுத்துக்கொள்வார்கள். இவ்விலங்கின் தோல் அவர்களுக்கு ஆடையாகப் பயன்படுகிறது. இவற்றின் தந்தங்கள் விலை மதிப்பு மிக்கவை.

வால்ரஸ் பொதுவாக அமைதியான இயல்புள்ளது. ஆனால் இதற்குத் தீங்கு செய்ய முற்பட்டால் தந்தங்களால் தாக்கும். இவ்விலங்குகள் பெருமளவில் வேட்டையாடப்பட்டதால் இவற்றின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது. எனவே இவற்றை வேட்டையாடுவதற்குப் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.


வால்வுகள் (Valves) : நம் வீட்டு அறைகளுக்குக் கதவுகள் இருக்கின்றன அல்லவா? இந்தக் கதவுகளைப் போன்றவை தாம் வால்வுகள். தண்ணீர்க் குழாய், பம்ப்பு (த.க.) பல வகை எந்திர சாதனங்கள் முதலியவற்றில் பாயும் நீர் அல்லது வேறு திரவங்கள், நீராவி, வாயுக்கள் போன்றவற்றைக் கட்டுப்படுத்தவும் நிறுத்திவைக்கவும் வால்வுகள் பயன்படுகின்றன. நம் உடலிலும் வால்வுகள் உள்ளன. இதயத்தின் அறைகளுக்கிடையே கதவுகளாகவும், இரத்தக் குழாய்களில் இரத்தம் ஒரே வழியில் பாயும் வகையிலும் வால்வுகள் அமைந்துள்ளன.

மிக எளிய அமைப்புடைய வால்வு தண்ணீர்க் குழாயில் இருப்பதாகும். இதில் கைப்பிடியுடன் இணைந்த தண்டின் அடிப்பகுதியில், திருகில் இருப்பதுபோல் மரை இருக்கும். கைப்பிடியைத் திருகினால் தண்டின் அடிப்பகுதியிலுள்ள தட்டையான தோல் அல்லது ரப்பர்ப் பகுதி சிறிதுசிறிதாகக் கீழ்நோக்கி வந்து நீர் வரும் துளையை அடைத்துவிடும். இதைப் படத்தில் காணலாம். வேறுவகை வால்வுகள் அமைந்த நீர்க்குழாய்களும் உண்டு.

தண்ணீர்க் குழாய்

தண்ணீர்க் குழாய் நீராவி எஞ்சினில் உள்ள வால்வு நழுவு வால்வு (Slide valve) எனப்படும். மோட்டார் வண்டிகளின் உள்ளெரி எஞ்சினிலுள்ள வால்வு, குதிவால்வு (Poppet valve) எனப்படும். மேலிழுக்கும் பம்ப்பு (Lift pump), மேலேற்றும் பம்ப்பு (Force pump) ஆகியவற்றில் இருப்பது தட்டை வால்வு (Flat valve). நீராவி எஞ்சின், உள்ளெரி எஞ்சின், பம்ப்பு ஆகிய கட்டுரைகளில் இந்த வால்வுகள் அமைந்துள்ள விதத்தையும், செயல்படும் விதத்தையும் படங்களுடன் விளக்கமாக அறிந்துகொள்ளலாம்.

நீராவி எந்திரங்களில் காப்பு வால்வு (Safety valve) முக்கியமான உறுப்பாகும். கொதிகலனிலுள்ள நீராவியின் அழுத்தம் அதிகமாகி விட்டால், அதைத் தாங்கமுடியாமல் கொதிகலன் வெடித்து விடும். அத்தகைய விபத்து நேரா வண்ணம் தடுக்கிறது காப்பு வால்வு. கொதிகலனிலுள்ள ஒரு சிறு துளையை இந்த வால்வு மூடிக்கொண்டிருக்கும், வால்வுடன் மேலே ஒரு வில் (Spring) இணைந்திருக்கும். இந்த வில், துளையை வால்வு அடைக்கும் வகையில் அழுத்தி வைத்திருக்கும். ஆனால் கொதிகலனுள்