பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 9.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

34

வான்கோழி - வான்மீகி

இவற்றைக் கிழங்குப் பகுதியோடு வெட்டி, நட்டுப் பயிர் செய்வர். வாழை ஒரு தடவையே பூக்கும்: காய்க்கும்; பிறகு பட்டுப்போகும். எனவே குலையை அறுத்த பின் வாழையை அடியோடு வெட்டிவிடுவார்கள்.

வாழை நமக்குப் பல வழிகளில் பயன் படுகிறது. பூ. காய், மரத்தினுள்ளிருக்கும் தண்டு ஆகியவற்றைக் சமைக்கலாம். இலை உண்கலமாகப் பயன்படுகிறது. காய்ந்த இலை சருகு எனப்படும். இதைக்கொண்டு தொன்னை செய்கின்றனர். வாழைப்பட்டையிலிருந்து நார் எடுத்து மாலை தொடுக்கலாம். பட்டையை உணர்த்திப் பதனிட்டுப் பொட்டலங்கள் செய்வர்.

பழம் மிக ருசியானது. இதில் கார்போ ஹைடிரேட், புரதம், கொழுப்பு தாதுப் பொருள் முதலிய உணவுச்சத்துகளும் A, B, C வைட்டமின்களும் அடங்கியுள்ளன. நாள்தோறும் உணவுக்குப் பிறகு வாழைப் பழம் சாப்பிடுவது மிக நல்லது. இறைவனுக்குப் படைக்கும் பழங்களுள் வாழைப்பழம் முக்கியமானது. திருமணம் போன்ற மங்கல விழாக்களில் வாழை மரங்களால் அழகிய வளைவுகள் அமைப்பது வழக்கம்.


வான்கோழி: வளர்ப்புப் பறவைகளுள் ஒன்று வான்கோழி. இதன் இறைச்சிக்காக இதைப் பல நாடுகளில் பண்ணை வைத்து வளர்க்கிறார்கள்.

வட அமெரிக்காக் கண்டத்தில் இப் பறவைகள் காட்டுப் பறவைகளாக வாழ்ந்தன அந்நாட்டிற்குச் சென்று குடியேறிய ஸ்பானியர்கள் இவற்றைத் தம் நாட்டிற்குக் கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து அவை பிற நாடுகளுக்குப் பரவின. அமெரிக்காவில் இவை இன்றும் காட்டுப் பறவைகளாகவே வாழ்கின்றன.

வளர்ப்பு வான்கோழிகள் உருவில் சற்றுச் சிறியவை. ஆண் பறவை சுமார்

புதர் வான்கோழி

புதர் வான்கோழி

காட்டு வான்கோழி

காட்டு வான்கோழி

ஒரு மீட்டர் நீளமிருக்கும். பெண் இதனைக் காட்டிலும் சிறியது. வான்கோழியின் இறகுகள் பொன்னிறமாக இருக்கும். அவற்றில் கருப்புக் கோடுகளும் ஊதா, பச்சைப் புள்ளிகளும் காணப்படும். இறகின் நுனி வெள்ளையாக இருக்கும். முற்றிலும் வெள்ளை இறகுகளைக் கொண்ட வான்கோழிகளும் உண்டு. வான்கோழியின் தலையிலும் கழுத்திலும் இறகுகள் இருப்ப தில்லை. தலையின்மீதும் கழுத்திலும் சிவப்பு நிறத் தசை வளர்த்திருக்கும். ஆண் பறவையின் மார்பில் சிறிய குஞ்சமொன்று இருக்கும். ஆண்பறவை பரபரப்படையும் போது சிறகுகளை விசிறிபோல விரித்துக் கொண்டு, கொக்கரித்த வண்ணம் அங்கு மிங்கும் வேகமாக நடக்கும். காய், கனி, கொட்டை, தானியம், புழு, பூச்சி முதலிய வற்றை வான்கோழி உண்ணும்.

காட்டு வான்கோழி உருவில் பெரியது. அடர்ந்த காடுகளில் இவை கூட்டங்கூட்டமாக வாழ்கின்றன. பெண் இடும் முட்டைகளை ஆண் பறவை கொத்தித் தின்று விடும். சிலசமயம் குஞ்சுகளைக்கூடத் தின்றுவிடுவதுண்டு. அதற்காகப் பெண் பறவை புதர்களுக்கிடையே மறைவான இடங்களில் கூடு கட்டுவது வழக்கம்.

வான்மீகி: உலகப் புகழ்பெற்ற இந்திய இலக்கியங்கனில் ஒன்று இராமா யணம் (த.க.). இந்த மகா காவியத்தை முதன்முதலில் சமஸ்கிருத மொழியில் எழுதியவர் வான்மீகி.

வான்மீகி தவ வலிமையுடைய முனிவர். வேதத்திலுள்ள செய்யுள்களின் சந்தத்தை அழகுடன் இசைக்கும் வகையில் முதன் முதலாகத் தம் காவியத்தில் இவர் அமைத்தார். எனவே ஆதிகவி என்றும் இவர் புகழப்படுகிறார்.

வான்மீகி சுமார் 2,300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் என்பர். வான்மீகி முனிவரின் ஆசிரமம் கங்கை ஆற்றின் கரையில் சித்திரகூட மலையில் அமைந்-