பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 9.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

வான ஆராய்ச்சி நிலையம் - வானவியல்

35

திருந்ததாகக் காவியத்திலிருந்து தெரிய வருகிறது. இவர் வாழ்க்கையைப் பற்றியும் இராமாயண காவியத்தை இவர் இயற்றி யது பற்றியும் பல கதைகளும், ஆராய்ச்சி வரலாறுகளும் உண்டு.

வான்மீகி இயற்றிய இராமாயணம் 24,000 செய்யுள்களை உடையது. வான்மீகி இராமாயணத்தைத் தழுவித் தமிழ் மொழியில், தமிழரின் மரபுக்கு ஏற்றபடி. இக்காவியத்தைக் கம்பர் (த.க.) எழுதினர். பார்க்க: இராமாயணம்.

வான ஆராய்ச்சி நிலையம் (Obser- vatory) : பகலில் வானத்தில் சூரி யனையும், இரவில் சந்திரனையும் காண்கி றேம். இரவில் நூற்றுக்கணக்கான நட்சத்திரங்களையும் பார்க்கிறோம்; தொலை நோக்கி (த.க.) வழியாகப் பார்த்தால் மேலும் பல்லாயிரக் கணக்கான நட்சத் திரங்கள், கிரகங்கள் முதலியவற்றைக் காணலாம். இந்த வான்பொருள்களின் தன்மைகளை வான ஆராய்ச்சி நிலையம் ஆராய்கிறது. இந் நிலையத்தில் பெரிய தொலைநோக்கி, காமிரா முதலான பல கருவிகள் இருக்கும்.

வான ஆராய்ச்சி நிலையங்களைப் பெரும் பாலும் உயரமான மலைப்பகுதிகளில் அமைக்கிறார்கள். இதனால் மேகங்கள், பிரகாசமான விளக்குகள், தொழிற்சாலை களிலிருந்து வரும் புகை, தூசித் துகள்கள் முதலியன ஆராய்ச்சிக்கு இடையூறாக இருப்பதில்லை. மிகத் தெளிவாக வானத் தைக் காண்பதற்கு ஏற்ற சூழ்நிலை அங்கு இருக்கும்.

வான ஆராய்ச்சி நிலையங்களிலுள்ள தொலைநோக்கிகளில் மிகப்பெரிய லென்ஸ் கள் அல்லது ஆடிகள் உள்ளன. காலி போர்னியாவில் வில்சன் மலைமீதுள்ள


கோடைக்கானல் வானாராய்ச்சி நிலையம்

[இந்தியாவில் 17ஆம் நூற்றாண்டில் ஐயப்பூரில் கட்டப் பெற்ற 'ஐந்தர் மந்தர்' வானாராய்ச்சி நிலையம்]

தொலைநோக்கியில் சுமார் இரண்டரை மீட்டர் விட்டமுள்ள ஆடியும், பாலொமார் என்னுமிடத்திலுள்ள தொலை நோக்கியில் சுமார் ஐந்து மீட்டர் விட்ட முள்ள ஆடியும் பொருத்தப்பட்டுள்ளன. தொேைநாக்கி சக்திமிகுந்ததாக இருந் தாலும், எல்லா நட்சத்திரங்களையும் பார்க்க முடியாது. ஆகவே, தொலைநோக்கி யுடன் ஒரு தனிவகைக் காமிராவை இணைத்து, கண்ணுக்குத் தெரியாத நட்சத்திரங்களைப் போட்டோப் படம் எடுக்கிறார்கள்.

பதினேழாம் நூற்றாண்டில்தான் மேலை நாடுகளில் வான ஆராய்ச்சி நிலையங்களை நிறுவத் தொடங்கினர், அதே நூற் றண்டில் இந்தியாவில் ஜயப்பூர் மன்னர் ஜெயசிங், ஜயப்பூர், டெல்லி, உஜ்ஜயினி, காசி ஆகிய இடங்களில் சிறந்த வான ஆராய்ச்சி நிலையங்களை நிறுவினார். தமிழ் நாட்டில் கோடைக்கானலில் நவீன வானாராய்ச்சி நிலையம் ஒன்று உள்ளது. பார்க்க: வானவியல்.

வானவியல் (Astronomy) : வானத்தில் காணப்படும் சூரியன், சந்திரன், கிரகங்கள், நட்சத்திரங்கள், எரிநட்சத்திரங்கள், வால்நட்சத்திரங்கள், பிற ஒளிப் பொருள்கள் முதலியன பற்றி ஆராயும் விஞ்ஞானம் வானவியல்.

பண்டைக்கால மனிதன் இரவு, பகல் மாறிமாறி வருவதையும் பருவங்களின் (த.க.) காலத்தையும் கவனித்து வந்தான். ஆனால் அவற்றிற்கான காரணத்தை