பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 9.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

36

வானவியல் - வானவில்

அறிய முடியவில்லை. நாளடைவில் நேரத்தை அறிய நிழல் கடிகாரம், நீர்க் கடிகாரம் ஆகியவற்றைச் செய்து கொண்டான். பருவகாலத்தை அறியப் பஞ்சாங்கத்தை வருத்தான். வேளாண்மை வேலைகள் பலவற்றுக்கான காலத்தைத் தேர்ந்தெடுக்க இந்தப் பஞ் சாங்கம் உதவியது. அக்காலத்தில் பெரும்பாலும் மதகுருக்களே வானவியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். அவர்கள் நட்சத்திரங்களையும் கோள்களையும் கவனித்து, வருங்காலத்தைப் பற்றித் தெரிவித்தனர்.

பண்டைக்காலத்தில் பாபிலோனியர், எகிப்தியர், சீனர்கள், இசேக்கர், இந்தியர் ஆகியோர் வானவியலில் சிறந்து விளங் கினர்கள். கி.மு. 2ஆம் நூற்றண்டைச் சேர்ந்த கிரேக்க வானவியல் அறிஞர் ஹிப்பார்க்கஸ் (Hipparchus) 850 நட்சத்திரங்களின் பெயர்ப் பட்டியல் ஒன்றை வகுத்தார். கி.பி. 2ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த டாலமி (த.க.) என்னும் கிரேக்க வானவியல் அறிஞர் பூமியே பிரபஞ்சத்தின் மத்தியில் உள்ளது என்றும், இதைச் சுற்றியே சூரியனும் பிற கிரகங்களும் சுழல்வதாகவும் சுழல்வதாகவும் கூறினார். இதுவே கிறிஸ்தவ சமயக் கொள்கையாக இருந்தது. 11ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த இந்திய அறிஞர் இரண்டாம் ஆ ரியபட்டர் மகா சித்தாந்தம்' என்னும் நூலை இயற்றினார். சூரியனை மையமாக வைத்து வகுத்த வானவியல் முறையை இந்தியாவில் அக்காலத்திலேயே அறிந்திருந்தனர் என்று இந் நூலிலிருந்து தெரிகிறது.

16ஆம் நூற்றாண்டில் கோப்பர் நிக்கஸ் (த.க.) என்னும் விஞ்ஞானி வானத்தை ஆராய்ந்து, சூரியனே மையத்தில் உள்ளது என்றும், அதை பூமி யும், மற்றக் கிரகங்களும் கற்றி வருகின்றன என்றும் கூறினார், அவர் கூறியது கிறிஸ்தவ மதக் கொள்கைக்கு மாறுபட்ட தாக இருந்ததால் தொடக்கத்தில் அதற்கு எதிர்ப்பு இருந்துவந்தது. ஆனால் வேறு சில விஞ்ஞானிகளும் கிரகங்கள் நகரு வதைக் கூர்ந்து கவனித்து, கோப்பர்நிக்கஸ் கொள்கைக்கு ஆதரவு தெரிவித்தனர். இவர்களுடைய ஆராய்ச்சி நவீன வான வியலுக்கு வழிவகுத்தது. 1608-ல் தொலைநோக்கி அமைக்கப் பட்டது. காலிலீயோ (த.க.) தாம் அமைத்த தொலைநோக்கியின் வழியாக வானத்தை ஆராய்ந்து, சந்திரனில் மலைகள் இருப்பதையும், சூரியனில் கரும் புள்ளிகள் காணப்படுவதையும் அறிந்தார். விஞ்ஞானி நியூட்டன் (த.க.) கிரகங்களிடையே உள்ள கவர்ச்சி விசையைக் குறிப்பிட்டார். தொடர்ந்து பலர் செய்த ஆராய்ச்சியினால் சூரிய மண்டலத்தின் அமைப்பு எளிதில் விளங்கியது. சூரி யனைச் சுற்றி பூமியும், பிற கிரகங்களும் சுழல்கின்றன என்னும் உண்மையை அறிந்தனர். நட்சத்திரக்கூட்டங்கள், ஆகாய கங்கை, பிரபஞ்சம் ஆகியவை பற்றிப் புதிய தகவல்களையும் விஞ் ஞானிகள் தெரிவித்தனர்.

வானவியல் பல வழிகளில் நமக்குப் பயன்படுகிறது. துல்லியமான நேரத்தைக் காட்டும் கடிகாரங்களை அமைக்கவும். ஆண்டு விவரக் குறிப்பு (Calendar ) கணிக்கவும் இந்த இந்த விஞ்ஞானம் உதவு கிறது. கப்பல்கள், விமானங்கள் ஆகிய வற்றின் போக்குவரத்துக்கு ஏற்ற கால அட்டவணைகளை எளிதில் வகுக்கலாம். வானிலை அறிவிப்புக்குத் தேவையான தகவல்களைச் சேகரிக்க வானவியல் பற்றிய அறிவு இன்றியமையாதது. நட் சத்திரங்களின் தன்மை, பூமிக்கும் நட் சத்திரங்களுக்கும் இடையே உள்ள தொலைவு, இவை தோன்றிய வரலாறு, பிரபஞ்சத்தின் அமைப்பு, விண்வெளிப் பயணம் முதலியன பற்றிய விஞ்ஞான அறிலைப் பெறுவதற்கு வானவியல் பெரிதும் உதவுகிறது.

இன்று விண்வெளியில் ராக்கெட்டுகளையும், செயற்கைக் கிரகங்களையும் பல கருவிகளுடன் அனுப்பி, கிரகங்களைப் பற்றி மேலும் ஆராய்ந்து வருகிறர்கள். பார்க்க: கிரகங்கள்; சூரிய மண்டலம்; நட்சத்திரம்.

வானவில்: மழைக்காலத்தில் சில சமயங்களில் காலை அல்லது மாலை

வானவில்

வானவில்