பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 9.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

வானவில் - வானளாவி

நேரத்தில் வானத்தில் அழகிய வானவில் தோன்றுகிறது அல்லவா? அல்லவா? மழைத்துளி கனின் மீது சூரிய ஒளி விழுத்து ஒளிக் கோட்டமடைவதாலும், பிரதிபலிப்ப தாலும் இந்த வானவில் உண்டாகிறது.

சூரிய ஒளி வெண்மையாகத் தோன்றி லும். அதில் சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் பச்சை, நீலம், கருநீலம், ஊதா ஆகிய ஏழு நிறங்கள் அடங்கியுள்ளன. ஒரு பட்டகத்தின் (Prism) வழியே செல்லும் சூரிய ஒளி, அதன் மறுபுறம் இந்த ஏழு நிறங்களாகப் பிரித்து செல்லும் (பார்க்க: ஒளி). மழைத்துளி ஒவ்வொன்றும் ஒரு பட்டகத்தைப் போல் செயல்படுகின்றது. சூரியனின் ஒளிக்கதிர் ஒன்று, ஒரு மழைத்துளியில் புகும்பொழுது. அது பல நிறக்கதிர் களாகப் பிரிக்கப்படுகிறது. மேலும், நீர்த்துளியின் பின்புறமானது ஒரு கண் ணடிபோல் செயல்பட்டு, அந் நிறக்கதிர் களைப் பிரதிபலிக்கிறது. இவ்வாறு பிரதி பலிக்கப்படும் திறக்கதிர்கள், நீர்த்துளியை விட்டு வெளியேறும்பொழுது, ஒவ்வொரு நிறமும் ஒவ்வோரு கோணத்தில் கோட்ட மடைந்து தனித்தனிப் பாதையில் செல் கின்றன. இவ்வாறு, ஏராளமான நீர்த் துனிகளால் சூரியனின் ஒளிக்கதிர்கள் கோட்டமடைந்து மீளுவதால் ஏற்படும் நிறமாேைய வானவில்லாகத் தோன்று கிறது.

சாதாரணமாக வானவில்லின் வெளி விளிம்பில் சிவப்பு நிறமும், உள்விளிம்பில் ஊதா நிறமும் காணப்படும். இவ்விரண் டுக்குமிடையில் மற்ற நிறங்கள் அமைத் திருக்கும். சில சமயம் வெளி விளிம்பில் ஊதாவும், உள் விளிம்பில் சிவப்பும் அமைந்த இரண்டாவது வானவில் ஒன்றும் மங்கலாகத் தோன்றுவதுண்டு.

வானவில் தோன்றுவதற்கு மழைத் துளிகள் விழுந்துகொண்டிருக்க வேண்டும்; வெயிலும் இருக்கவேண்டும். மழைத் தூரல் தின்றால் வானவில் மறைந்து விடும். மேலும், வானத்தில் சூரியன் பூமியிலிருந்து 42 கோணத்திற்கு உட் பட்ட நிலையிலிருந்தால்தான், மழைத் துளியிலிருந்து வெளிப்படும் ஒளி பூமிக்குத் திரும்பும்; அப்பொழுதுதான் நாம் வான வில்லைப் பார்க்க முடியும். சூரியன் 425 கோணத்திற்கு மேலே இருந்தால் மழைத் துளியிலிருந்து வெளிவரும் ஒளி பூமியை எட்டாது. ஆகவே, காலையில் மேற்கு வானத்திலும், மாலையில் கிழக்கு வானத் திலும் மட்டுமே வானவில் காணப்படும்.

சூரியன் தாழ்வாக இருந்தால் வான வில் பெரிதாகத் தெரியும். சூரியன் உதிக்கின்ற அல்லது மறைகின்ற நேரத்தில் தோன்றும் வானவில் அரைவட்ட அளவிற்குக் காணப்படும். நீர் வேகமாக விழும் அருவிகளின் அருகே தோன்றும் நுண்ணிய நீர்த்துளிகளின்மீது சூரிய ஒளி விழும் போது அங்கு வானவில்லின் நிறங்கள் வில் போலவே தோன்றுகின்றன. மிக அரிதாகச் சந்திர ஒளியினாலும் வானவில் உண்டாவதுண்டு. இதன் நிற அமைப்பும் சூரிய வானவில்லைப் போன்ற தேயாகும். ஆனால் சூரியனைவிடச் சந்திரனின் ஒளி மங்கலாக இருப்பதால், சந்திரனால் உண்டாகும் வானவில்லும் மங்கலாகவே தெரியும்.

வானளாவி (Skyscraper) : பல மாடிகளைக் கொண்ட உயரமான கட்டடங்களுக்கு வானளாவிகள் என்று பெயர். இக்காலத்தில் பல நாடுகளிலுள்ள மூக்கிய தகரங்களில் தொழில்களும், வாணிகமும் மிக விரைவாகப் பெருகி வருகின்றன. அவற்றின் தேவைக்கு ஏற்ப அலுவலகங் களுக்கும், குடியிருக்க வீடுகளுக்கும் புதிய கட்டடங்கள் தேவைப்படுகின்றன. ஆனால், புதிய கட்டடங்களுக்குப் போதிய அள வில் நிலம் கிடைப்பதில்லை. எனவே, குறைந்த அளவு நிலத்தில் பெருமளவு பயன்பெறும் நோக்கத்துடன் பல அடுக்கு களைக் கொண்ட வானளாவிகளைக் கட்டுகிறார்கள். இதனால் குறைந்த நிலப் பரப்பில் அதிகமான மக்கள் வாழ முடி கிறது.

வானளாவி மிக உயரமாக இருப்ப தால், அக் கட்டடத்தின் பாரம் முழு வதையும் அதன் அடித்தளம் தாங்கி நிற்க

நியூ யார்க் நகரிலுள்ள பல வானளாவிகள்