பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 9.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

38 வானளாவி - வானிலையியல்

நியூ யார்க் நகரிலுள்ள 'உலக வாணிக மைய'க் கட்டடம்

வேண்டும். எனவே, தரையில் பாறை தட்டுப்படும் வரையில் ஆழமாகத் தோண்டி, அப் பாறைகளை அடித்தள மாகக் கொண்டு கடைக்கால் அமைத்து வானளாவிகளை எழுப்புகிறார்கள். லண்டன் போன்ற இடங்களில் பூமியை மிகுந்த ஆழமாகத் தோண்டினாலும் பாறை இருப்பதில்லை. களிமண் தரை யாக இருக்கிறது. அங்கு உயர்ந்த கட்ட டங்களைக் கட்டினால், அதன் பளுவினால் கட்டடம் தரையில் அழுந்தி விடக்கூடும். எனவே அவ்விடங்களில், கட்டடத்தின் பரப்பளவைவிட அதிகமான பரப்பளவில் ஆழமாகத் தோண்டி. வலுவாக்கிய கான்கிரீட் (த.க.) மூலம் கடைக்கால் அமைத்து இன்று வானளாவிகளைக் கட்டுகிறார்கள். மேலும், எஃகுச் சட்ட கத்தை (Steel skeleton) அமைத்தே வானளாவிகளை எழுப்புகிறர்கள். பல அடுக்குகலின் சுவர், தரை ஆகிய வற்றின் பெரும்பளுவைத் தாங்கி நிற்கக் கூடிய தன்மை எஃகுச் சட்ட கத்திற்கு உண்டு. மேலும், கடுமையான வேசுத்தில் காற்று வீசினால், எஃகுச் சட்டகம் சிறிது வளைந்து கொடுக்குமே தவிர உடைந்து தகர்ந்துவிடாது. எனவே, எஃகுச் சட்டகம் வானளாவிகளுக்குப் பாதுகாப்பாக இருக்கிறது.

வானளாவிகளைக் கட்டுவதால் பல தொல்லைகளும் ஏற்படுகின்றன. ஒரே இடத்தில் பல வானளாவிகளைக் கட்டுவதால், குறிப்பிட்ட நேரத்தில் அவ்விடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். வானளாவிகளின் நிழல் நெடுந் தூரத்திற்கு விழுவதால், அப்பகுதியிலுள்ளவர்களுக்குச் சூரிய வெளிச்சம் கிட்டாமல் போகும்; காற்றோட்டமும் அவர்களுக்குத் தடைபடும்.

வானளாவிகளை முதன்முதலில் கட்டத் தொடங்கியவர்கள் அமெரிக்கர்களே யாவர். சிக்காகோ நகரத்தில் 1884-ல் முதல் வானளாவியான உள்நாட்டு இன்ஷூரன்சுக் கட்டடத்தைக் (Home Insurance Building) கட்டினர். பின்னர் நியூ யார்க்கிலும், வேறுபல நாடுகளில் முக்கிய நகரங்களிலும் வானளாவிகள் பல எழுப்பப்பட்டன. இன்று (1975) உலகிலுள்ள வானளாவிகளில் மிக உயரமானது அமெரிக்காவில் சிக்காகோ நகரில் உள்ள சியர்ஸ் டவர் கட்டடம்; இதன் உயரம் 443 மீட்டர்; 110 மாடிகளை உடையது. நியூ யார்க்கி லுள்ள எம்பயர் ஸ்டேட் கட்டடம் 380 மீட்டர் உயரமும், 102 மாடிகளையும் உடையது. இந்தியாவில்'டெல்லி, பம்பாய், கல்கத்தா, சென்னை முதலிய நகரங்களில் வானளாவிகள் உள்ளன.

வானிலையியல் (Meteorology): வானொலியில் வானிலை அறிக்கையைக் கேட்கிறோம். ஓர் இடத்தின் வெப்பதிலை. பெய்துள்ள மழையின் அளவு முதலிய வற்றைக் கூறுவதுடன் அடுத்த 48 மணி நேரத்தில் வானிலை எவ்வாறிருக்கும் என்பதையும் கூறுகிறார்கள். இதற்கு வாயுமண்டலத்தில் நிகழும் மாற்றங் களைத் தெரிந்துகொள்ளவேண்டும். அதைப் பற்றிய விஞ்ஞானமே வானிலையியல்.

பண்டைக்கால முதல் மக்கள் வானிலை மாற்றங்களைக் கூர்ந்து கவனித்து, வானிலை பற்றி ஒருவாறு அறிந்து வந்தார்கள். ஆனால், 17ஆம் நூற்றாண்டில் வெப்ப மானியும் (த.க.) பாரமானியும் (த.க.) உருவாக்கப்பட்ட பின்னரே இந்த விஞ் ஞானத்துறையில் முன்னேற்றம் ஏற் பட்டது.

வானிலை நிலையங்கள் வானிலை பற்றிய தகவல்களைச் சேகரித்து அனுப்புகின்றன. சில நிலையங்கள் பெரிய நகரங்களில் அமைக்கப்பட்டுள்ளன. வேறுசில நிலை யங்கள் உயர்ந்த மலைகளின் மீதும், மற்றும் சில பனிக்கண்டத்தின் நடுவிலும் உள்ளன. நடுக்கடலில் நங்கூரம் பாய்ச்சப் பட்டுள்ள கப்பல்களிலும் வானிலை நிலை யங்கள் செயல்படுகின்றன. இவற்றில் விஞ்ஞானிகள் தங்கி ஆய்வு செய்கிறார்கள். பனி சூழ்ந்த துருவப் பகுதிகளில் உள்ளவை தானியங்கு நிலையங்களாகும். அதாவது, இவை தாமே வானிலையியல் தொடர்பாகத் தகவல்களைப் பதிவு செய்து செய்திகளை அனுப்பிவருகின்றன.