பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 9.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

வானிலையியல் கருவிகள் சில வானிலையியல் வானொலி காற்று வேகமானி மேகமானி மழைமானி' காற்றுத் திசை காட்டி உறைபனிமானி ஈரப்பதன்மானி வெயில்மானி


இத்தகவல்கள் எவ்வாறு சேகரிக்கப் படுகின்றன. தெரியுமா? காற்றடிக்கும் திசை, வேகம் பற்றி அறிவதற்குக் காற்று வேகமானி (Anemometer) என்னும் கருவி உதவுகிறது. வெப்பநிலையை அறிய வெப்பமானி உள்ளது. அழுத்தத்தை பாரமானி பதிவு செய்கிறது. இவை தவிர மேகமானி, மழைமானி, வெயில்மானி முதலான கருவிகளும் உண்டு. பலூனில் பல கருவிகளை இணைத்து வாயுமண்டலத்தில் வெகு உயரம் வரை அனுப்பி,வாயுமண்டலத்தின் வெப்பம், அழுத்தம், ஈரநிலை முதலியவை பற்றிய தகவல்களைத் தெரிந்துகொள்கிறார்கள். இத்தகவல்களை ரேடியோ (Radio Sonde) சாண்டே என்னும் கருவி மிகச் சிறிய வானொலி மூலம் தரையிலுள்ள நிலையத்திற்கு அனுப்புகிறது.

வானிலை முன்னறிவிப்புக்கு ஏதேனும் குறிப்பிட்ட நிலப்பகுதியில் காணப்படும் வானிலையை அறிவதால் மட்டும் பயனில்லை. அத்துடன் நெருங்கிய தொடர்புடைய மிகப்பெரிய நிலப்பகுதிகளில் காணும் நிலைமையையும் அறிய வேண்டும். இதற்காக 1878ஆம் ஆண்டில் உலக வானிலையியல் நிறுவனம் (International Meteorological Organisation) அமைக்கப்பட்டது. இந்தியா உள்பட 125 நாடுகள் இதில் சேர்ந்துள்ளன. இன்று ராக்கெட்டுகளையும் செயற்கைக் கிரகங்களையும் (த.க.) வாயுமண்டலத் தில் மிக உயரம் அனுப்பி ஆராய்ந்து வருகிறார்கள்.


செயற்கைக் கிரகம் துல்லியமாகப் படம் பிடித்து அனுப்புவதால் வானிலை முன்னறிவிப்புக்கு உதவும் முக்கியத் தகவல்கள் கிடைக்கின்றன. விஞ்ஞானிகள் இவற்றை ஆராய்ந்து, மழை எங்கெங்கு என்ன அளவில் பெய்யுமென்றும், புயல் எந்தெந்தப் பகுதிகளில் எப்பொழுது வீசுமென்றும் கூறி எச்சரிக்கை செய்கிறார்கள்.

நகரத்திலுள்ளவர்கள் வானிலை அறிக்கை பற்றி அவ்வளவாக அக்கறை கொள்வதில்லை. ஆனால் பெரும்பாலான மக்களுக்கு அவர்களுடைய வாழ்க்கையை பாதிக்கும் அளவுக்கு, வானிலை அறிக்கை முக்கியத்துவம் உள்ளதாக விளங்குகிறது. வானிலையைப் பொறுத்தே விமானிகள் விமானத்தை ஒட்டிச்செல்ல முடியும்; மாலுமிகள் கப்பல்களைச் செலுத்த முடியும். வேளாண்மைத் துறையில் உள்ளவர்களுக்கு விதை விதைப்பது முதல் அறுவடை செய்வது வரை, வானிலை பற்றிய தகவல் இன்றியமையாதது. வானிலை சீராக இருந்தால் தான் மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் செல்வார்கள். 'புயல் வீசக்கூடும்' என்று எச்சரிக்கும் வானிலை அறிவிப்புகளால் உயிர்ச் சேதத்தையும், பொருள் தவிர்க்க சேதத்தையும் பெருமளவில் தவிர்க்கலாம். இதனால் வாழ்க்கையோடு ஒட்டிய அறிவியல் துறையாக வானிலையியல் இன்று கருதப்படுகிறது.

வானொலி: வானொலிப் பெட்டியில் பல நிகழ்ச்சிகளைக் கேட்கிறேம்.