பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 9.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

மிகத் தொலைவிலிருந்து ஒலிபரப்பப்படும் பேச்சு முதலியவற்றையும் அவை பேசப் படும் அதே நேரத்தில் கேட்கலாம். இது ஒரு விந்தை . ஏனெனில் ஒலி அலைகள் விநாடிக்கு 330 மீட்டர் தூரமே செல் கின்றன. ஒளி அலைகள் தாம் விநாடிக்கு 3,00,000 கிலோமீட்டர் வேகத்தில் செல் கின்றன. இந்த வேகத்தில் செல்லும்படி ஒலி அலைகளை மாற்றிவிட்டால், நிகழ்ச்சி களை உடனுக்குடன் கேட்கலாமல்லவா? இசை, பேச்சு, நாடகம் முதலிய நிகழ்ச்சி கள் நடைபெறும்பொழுது உண்டாகும் ஒலியை ஒலிபரப்பு அறையில் மைக்ரா போன் என்னும் சாதனம் ஏற்று, மின் அலைகளாக மாற்றுகிறது. இந்த அலைகளை அப்படியே ஒலிபரப்ப முடியாது. இவை வலுவாக்கப்படுகின்றன. பின்னர் ஒலி பரப்பு நிலையத்தில் தோற்றுவிக்கப்படும் ஊர்தி அலைகளுடன் ( Carrier waves ) மின் அலைகளையும் சேர்த்து மாற்றியமைத்து வானத்தில் மின்காந்த அலைகளாக, அதா வது ரேடியோ அலைகளாக அனுப்பு கிறார்கள். இவையே ஒளியின் வேகத்தில் செல்கின்றன. வாயுமண்டலத்தில் மிக உயரத்தி லுள்ள மின்னணு மண்டலம் ரேடியோ அலைகளைப் பிரதிபலிப்பதால் அவை பூமிக்குத் திரும்புகின்றன. பிரதிபலிக்கப் பட்ட அலைகளை நம் வீட்டிலுள்ள வானொலிப் பெட்டி ஏரியல் மூலம் ஏற் கிறது. வானொலிப் பெட்டியில் ரேடியோ அலைகள் ஊர்தி அலைகளாகவும், ஒலி அலை களாகவும் பிரிக்கப்படுகின்றன. ஒலி அலைகள் ஒலிபெருக்கிக்குச் செல்கின்றன.

வானொலிப் பெட்டியின் பல்வேறு உறுப்புகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன

டிரான்சிஸ்ட்டர் வானொலிப் பெட்டி

ஒலியின் அளவைக் கூட்டவோ குறைக்கவோ முடியும். ரேடியோ நிலையம் ஒவ்வொன்றும் அதற்குரிய அலைநீளத்தில் (அலைவரிசை யில்) நிகழ்ச்சிகளை ஒலிபரப்புகின்றது. இருவேறு நிலையங்கள் ஒரே அலை நீளத்தில் ஒலிபரப்புவதில்லை. இதற்காக சர்வதேச உடன்பாடு ஏற்பட்டிருக்கிறது. வானொலிப் பெட்டியின் முகப்பிலுள்ள பண் சுற்றின் (Tuner) முள்ளைத் திருப்பினால் வானொலிப் பெட்டியைக் குறிப்பிட்ட ஒரு நிலையத்தின் நிகழ்ச்சி களை ஏற்பதற்குச் சரியான அலைநீளத்தில் வைக்கலாம். வானொலிப் பெட்டியில் எலக்ட்ரான் வால்வுகள், கண்டென்சர்கள் முதலிய பல உறுப்புகள் உள்ளன. ஆனால் இன்று வால்வுகளுக்குப் பதிலாகச் சிறிய டிரான் சிஸ்ட்டர்களைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். இதனால் சிறிய அளவில் வானொலிப் பெட்டிகளை இன்று தயாரிக்க முடிகிறது. தீப்பெட்டி அளவே உள்ள மிகமிகச் சிறிய வானொலிப் பெட்டிகளும் இன்று தயாரா கின்றன. மின்கலங்களைப் (த.க.) பொருத்தி இவற்றை எங்கும் எளிதில் எடுத்துச் செல்லலாம். வானொலியை மார்க்கோனி கண்டு பிடித்தார். தந்தி மூலம் செய்தி களை அனுப்ப, செய்திகளை அனுப்பும் இடமும் அது போய்ச் சேரும் இடமும் கம்பிகளால் இணைக்கப்பட்டிருக்கவேண் டும். ஆனால் கம்பி இணைப்பு எதுவுமின்றி நெடுந்தொலைவுக்குச் செய்திகளை அனுப்ப மின்காந்த அலைகளைப் பயன்படுத்தலாம்