பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 9.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

என்று அவர் கண்டறிந்தார். வானொலி யில் இம்முறையே கையாளப்படுகிறது. வானொலி பல வழிகளில் நமக்குப் பயன் படுகிறது. விமானப் போக்குவரத்துக்கு வானொலி இன்றியமையாத சாதன மாகும். வானத்தில் பறக்கும் விமானங்கள் விமான நிலையத்துடன் தொடர்பு கொண்டு சரியான திசையில் செல்லவும், விமான நிலையத்தில் சரிவர இறங்கவும் வானொலி மூலம் கட்டுப்படுத்துகிறார்கள். இதுபோலவே, கப்பல்களிலும் வானொலி உதவுகிறது. ரேடியோ, தொலைபேசி, ரேடியோ போட்டோ ஆகியவை மூலம் உலகின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்குச் செய்திகள் அனுப்பவும் போட் டோக்களை அனுப்பவும் முடிகிறது. கல்வியறிவைப் பரப்புவதிலும் வானொலி சிறந்த சாதனமாக விளங்குகிறது. வாஷிங்க்ட ன், ஜார்ஜ் (George Washington, 1732 - 1799) : அமெரிக்க ஐக்கிய நாட்டின் முதல் குடியரசுத் தலைவ ராக இருந்தவர் ஜார்ஜ் வாஷிங்க் டன். இங்கிலாந்தை எதிர்த்து அமெரிக்கர் நடத்திய சுதந்தரப் போராட்டத்தில், அமெரிக்கப் படைகளுக்கு இவர் தலைமைத் தளபதியாக விளங்கி வெற்றி தேடித் தந்தார். 'அமெரிக்கக் குடியரசின் தந்தை ' என இவர் போற்றப்படுகிறார். அமெரிக்காவில் வர்ஜினியா மாநிலத் தில் வேக்பீல்டு என்னும் ஊரில் இவர் பிறந்தார். இவர் இளமையில் உரிய கல்வி கற்கவில்லை. தம் 11ஆம் வயதில் தந்தையை இழந்தார்; 15ஆம் வயதில் நில அளவை ( Survey ) செய்து கணக்கிடக் கற்றுக்கொண்டார். 1752-ல் ஜார்ஜ் வாஷிங்க்டன்


41 இவருக்கு அண்ணன் முறையாக இருந்த ஒருவர் இறக்கவே, அவருடைய 2,500 ஏக்கர் நிலம் இவருக்குக் கிடைத்தது. இவர் வர்ஜினியா மாநிலக் குடிப்படையில் (Militia ) சேர்ந்திருந்தார். 1754-ல் பிரெஞ்சுக்காரர்களும் சிவப்பிந்தியர்களும் சேர்ந்து மேற்கு எல்லையில் தாக்குதல் நடத்தினர். இவர் ஒரு படைக்குத் தலைமை தாங்கி அவர்களைத் தோற் கடித்தார். அதனால் இவருக்குச் செல் வாக்குப் பெருகியது. வர்ஜினியா நாடாளு மன்றத்திற்குத் தேர்வு பெற்றார். 1759-ல் செல்வமுள்ள ஓர் இளம் விதவையை மணந்தார். இச்சமயத்தில், அமெரிக்கக் குடி யேற்றங்களுக்கும் ஆங்கில ஆட்சியாள ருக்குமிடையே மனக் கசப்பு முற்றியது. பிரிட்டிஷ் ஆதிக்கத்தை ஒழித்துச் சுதந் தரம் பெறுவதற்காக 1775-ல் அமெரிக்க சுதந்தரப் போர் தொடங்கியது. அமெரிக்கப் படைகளுக்கு வாஷிங்க்டன் தலைமைத் தளபதியாகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். 1783 வரை போர் நடந்தது. சிறிதும் பயிற்சியில்லாத தம் படை வீரர் களுக்குத் தக்க பயிற்சியளித்துப் போரைத் திறம்பட நடத்தி, அமெரிக்கக் குடி யேற்றங்களுக்கு வாஷிங்க்டன் வெற்றி தேடித் தந்தார். விடுதலைபெற்ற 13 அமெரிக்கக் குடி யேற்றங்களும் ஒன்று சேர்ந்து 'அமெரிக்க ஐக்கிய நாடுகள்' என்னும் பெயரில் புதிய நாடு உருவாயிற்று. அதற்குப் புதிய அரசியலமைப்பு ஒன்றும் உருவாக்கப் பட்டது. அதன்படி, 1789-ல் முதல் குடியரசுத் தலைவராக வாஷிங்க்ட ன் தேர்ந்தெடுக்கப்பட்டார். மறுமுறையும் தேர்வு பெற்றார். மொத்தம் எட்டாண்டு கள் இப்பதவியை வகித்தார். இவர் தம் பதவிக்காலத்தில், நேர்மையான முறை யில் நிருவாகம் நடக்கும்படி செய்தார். சுதந்தரமாக இயங்கிவந்த 13 குடி யேற்றங்களையும் மத்திய அரசுக்குக் கட்டுப்பட்டு நடக்கும்படி செய்து, அமெரிக்க ஐக்கிய நாடுகள் வலுவான ஒரே நாடாக உருவாக வழி செய்தார். மக்களுடைய நன்மைக்காக ஓயாமல் உழைத்தார். 1797-ல் மூன்றாம் முறையும் இவரைக் குடியரசுத்த லைவராக்க மக்கள் விரும்பினர். ஆனால் இவர் அதற்கு இசையாமல் பதவி விலகினார். தம்முடைய சொந்த ஊராகிய மவுன்ட் வெர்னாமில் ஓய்வு கொண்டார். அங்கு 1799 டிசம்பர் 14-ல் காலமானார். வாஷிங்க்டன் நாட்டுக்குத் தொண்டு செய்வதைத் தமது கடமையாகக் கொண் டிருந்தார். தடைகள் வரினும் எடுத்த