பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 9.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
வாஸ்க்கோட காமா


காரியத்தை முடிக்கும் உறுதியும் அஞ்சா நெஞ்சமும் பெற்றிருந்தார். இவருடைய நினைவாக அமெரிக்க மாநிலம் ஒன்றுக்கும், அமெரிக்காவின் தலைநகருக்கும் 'வாஷிங்க் டன்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. வாஸ்க்கோட காமா ( Vasco da Gama, 1469 - 1524) : ஐரோப்பாவிலிருந்து இந்தியா விற்குச் செல்வதற்குக் கடல் வழியை முதன் முதலில் கண்டு பிடித்தவர் வாஸ்க்கோ ட காமா ஆவார். ஆப்பிரிக்கா வின் தென் முனையாகிய நன்னம்பிக்கை முனையைச் (Cape of Good Hope ) சுற்றிச் சென்று இவர் இந்தியா சேர்ந்தார். வாஸ்க்கோ ட காமா போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்தவர். இவர் தம் இளமையிலிருந்தே கடல் பயணத்தில் மிகவும் ஆர்வமுடையவராக இருந்தார். கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டு பிடித்த பிறகு, பல ஐரோப்பிய நாடுகள் புதிய நாடுகளைக் கண்டுபிடிப்பதில் தீவிர மாக முனைந்தன. இந்தியாவிற்குச் செல்வ தற்குக் கடல்வழி ஒன்றைக் கண்டு பிடிக்கும்படி வாஸ்க்கோ ட காமாவைப் போர்ச்சுகல் மன்னர் கேட்டுக்கொண்டார். அதன்படி 1497 ஜூலை 8-ல் போர்ச்சுகல் நாட்டிலுள்ள லிஸ்பன் துறைமுகத்தி லிருந்து வாஸ்க்கோ ட காமா புறப் பட்டார். நான்கு கப்பல்களில் பலர் இவருடன் சென்றனர். கடல்வழியாகச் சென்று ஆப்பிரிக்காவின் தென்முனையை அடைந்தார். பின் அங்கிருந்து சிறிது தொலைவு கிழக்குக் கரையோரமாக வடக்கே சென்றார். பின் கீழ்த்திசையை நோக்கிச் சென்று, 1498 மே மாதம் 3 ஆம் நாள் இந்தியாவின் மேற்குக் கரையைச் சேர்ந்த கோழிக்கோடு துறைமுகத்தை அடைந் தார். அங்கிருந்த மன்னர் வாஸ்க்கோ ட காமாவை வரவேற்று உபசரித்தார். அங்குச் சில மாதங்கள் தங்கிய பின், 1499-ல் இவர் போர்ச்சுகல் திரும்பினார். போர்ச்சுகல் மன்னர் இவருக்குப் பெருஞ் செல்வமும் சலுகைகளும் வழங்கிப் பாராட்டினார். வாஸ்க்கோ ட காமா மீண்டும் 1502, 1503 ஆகிய ஆண்டுகளில் இந்தியாவுக்குச் சென்றார். போர்ச்சுகேசியர் இந்தியாவில் குடியேறுவதற்கு வேண்டிய ஏற்பாடு களைச் செய்துவிட்டுத் தாயகம் திரும் பினார். 1524 வரை ஓய்வாக இருந்தார். அவ்வாண்டில், இந்தியாவிலிருந்த போர்ச்சுகேசியக் குடியேற்றங்களுக்கு அரசப் பிரதிநிதியாக (Viceroy) இவரை மன்னர் நியமித்தார். அந்த ஆண்டில் இந்தியா சென்ற வாஸ்க்கோ ட காமா 1க்கிரமாதித்தன் கதைகள் வாஸ்க்கோ ட காமா மூன்று மாதங்கள் அப்பதவியை வகித்த பின் நோயுற்று, கொச்சியில் காலமானார். விக்கிரமாதித்தன் கதைகள் : விக்கிர மாதித்தன் கதைகள் சிலவற்றை நீங்கள் கேட்டிருப்பீர்கள். விக்கிரமாதித்த னின் வீர தீரச் செயல்கள் நமக்கு வியப்பை உண்டாக்கக் கூடியவை. அவனுக்குத் துணையாக இருந்து, அவன் உயிரைக் காத்துவந்த வேதாளத்தின் திறமையும் மிக வியப்பானது. நாடெங் கும் இக்கதைகள் வழங்கிவருகின்றன. உச்சயினியைத் தலைநகராகக் கொண்டு விக்கிரமாதித்தன் ஆட்சி செலுத்து கிறான். அவனுடைய தம்பி. பட்டி என்பவனே அவனுக்கு அமைச்சன். எல்லாக் கலைகளிலும் வல்லவன் விக்கிர மாதித்தன். அவனுடைய அறிவுத் திறனைக் கண்டு வியந்த இந்திரன் அவனுக்கு ஒரு தங்கச் சிம்மாசனத்தை வழங்கி, அதில் அமர்ந்து ஆயிரம் ஆண்டுகள் அரசு புரிக' என வாழ்த்து கிறான். பட்டியும் இதுபோல் தன் அறிவுத் திறனால் காளியிடம் வரம் பெற்று, நீண்ட ஆயுளைப் பெறுகிறான். இருவரும் ஒரு வருக்கொருவர் உதவியாக இருந்து நடத்தும் தீரச்செயல்களே இக்கதை களாகும். இறுதியில், சாலிவாகனன் என்னும் அரசனால் விக்கிரமாதித்தன் கொல்லப்படுகிறான். விக்கிரமாதித்தன் என்ற பெயரில் வட நாட்டில் பல அரசர்கள் ஆட்சி புரிந் திருக்கின்றனர். இவர்களுள் எந்த விக்கிர மாதித்தனைப் பற்றியவை இக்கதைகள் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், வரலாற்றில் கூறப்படும் எந்த