பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 9.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

விக்டோரியா நீர்வீழ்ச்சி - விசிறி

விக்கிரமாதித்தனுக்கும் இந்தக் கதை களுக்கும் தொடர்பில்லை எனக் கூறலாம். ஏனெனில்,இக்கதைகள் யாவும் வெறும் கற்பனையேயாகும். கதை களில் வரும் நிகழ்ச்சிகள் மனிதனுடைய ஆற்றலுக்கு அப்பாற்பட்டவை.

சோமதேவ பட்டர் என்பவர் வட மொழியில் இயற்றிய கதாசரித சாகரம் என்னும் நூலிலிருந்து விக்கிரமாதித்தன் கதைகள் எழுதப்பட்டதாகக் கூறுவர். தமிழ், தெலுங்கு, இந்தி, வங்காளி, மராத்தி ஆகிய மொழிகளிலும் இக் கதைகள் உள்ளன. ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

விக்டோரியா நீர்வீழ்ச்சி : உலகி லுள்ள பெரிய நீர்வீழ்ச்சிகளுள் ஒன்று விக்டோரியா நீர்வீழ்ச்சி. இது தென் ஆப்பிரிக்காவில் சாம்பசி (Zambezi) ஆற்றில் உள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த நாடாய்வாள ரான லிவிங்ஸ்ட்ட ன் (த.க.) இந் நீர் வீழ்ச்சியைக் கண்டறிந்தார். அப்போது பிரிட்டன் அரசியாக இருந்த விக்டோரியா வின் நினைவாக இதற்கு விக்டோரியா நீர்வீழ்ச்சி எனப் பெயரிட்டார்.

இந்த நீர்வீழ்ச்சியின் உயரம் சுமார் 100 மீட்டர். இவ்வளவு உயரத்தி லிருந்து நீர் விழும்போது பேரிரைச்சல் எழுகிறது. இந்த இரைச்சல் சுமார் 30 கிலோமீட்டர் தொலைவிற்குக் கேட்கிற தாம்! நீர் விழும்போது உண்டாகும் சிறுசிறு நீர்த்துளிகள் எப்போதும் ஒரு பெரிய மேகம்போலக் காட்சி அளிக் கின்றன. சூரிய ஒளியில் இந்த நீர்த் திவலைகளில் அழகிய வானவில் காட்சிகள் தோன்றுகின்றன. சந்திர ஒளியிலுங்கூட இந்த அழகிய காட்சி தோன்றுவதுண்டு.

நீர்வீழ்ச்சிக்கு எதிரில் ஆற்றின் குறுக்கே உயரமான பெரிய பாலம் அமைத்துள்ள னர். ரெயிலில் செல்லும்போது இந்நீர் வீழ்ச்சியின் அழகைக் கண்டு மகிழலாம். நீர் வீழ்ச்சியிலிருந்து மின்சக்தி உற்பத்தி செய்கின்றனர்.

விசிறி : வெயில் கடுமையாக இருக்கும்போது மின்விசிறியின்கீழ் உட் கார விரும்புகிறோம். விசிறியினால் உண் டாகும் காற்றோட்டத்தில் வியர்வை நீங்குகிறது; உடலுக்கு இதமாக இருக் கிறது. மின்விசிறி இல்லாத இடங்களில் ஓலையினால் செய்த விசிறிகளைப் பயன் படுத்துவார்கள். பனையோலை, தென்னை யோலை, காகித அட்டை, துணி, தோல், மூங்கில் சிம்பு, சந்தனக் கட்டை, வெட்டி வேர். மயிலிறகு முதலியவற்றைப்

பயன்படுத்திப் பலவிதமான விசிறிகள் செய்வதுண்டு. வேண்டும்போது விரித்துப் பயன்படுத்தி, மற்ற நேரங்களில் மடித்து வைக்கக்கூடிய மடிப்பு விசிறிகளும் உள்ளன. சந்தனக் கட்டை, வெட்டிவேர் விசிறிகளால் வீசும்போது காற்றுடன் நறுமணமும் கமழும். இந்தியா, எகிப்து, இத்தாலி, கிரீஸ், ஜப்பான் முதலிய நாடுகளில் சமயத் தொடர்புள்ள சடங்குகளின் போது விசிறியைப் பயன்படுத்துவது வழக்கம். ஜப்பானில் இன்றும் இவ்வழக்கம் உள்ளது. சிறந்த வேலைப்பாடுகளுடன் பல வண்ணங் களில் அழகான மடிப்பு விசிறிகளைச் செய்வதில் ஜப்பானியர் கைதேர்ந்தவர்கள்.

'பங்க்கா ' என்பதும் ஒருவகை விசிறி. துணியினாலோ வெட்டிவேர் தட்டி முதலியவற்றாலோ நீள்சதுர வடிவில் 'பங்க்கா' செய்வார்கள். இதை உத்தரத் தில் கட்டித் தொங்கவிட்டு, இதனுடன் ஒரு கயிற்றை இணைத்து, சிறு கப்பிகளின் (Pulleys) வழியே கயிற்றை இழுக்கும் போது, பங்க்கா முன்னும் பின்னும் அசைந்து காற்றோட்டம் உண்டாக்கும். மின்சாரம் வருவதற்கு முன்பு அலுவ லகங்களிலும் 'பங்க்கா 'க்கள் இருந்தன. கோயில்களில் பயன்படுத்தப்படும் கவரி, வெண்சாமரம் முதலியனவும் விசிறியின் வகைகளே. முற்காலத்தில் இவை அரச சபைகளில் பயன்படுத்தப்பட்டன.

மின் விசிறி 19ஆம் நூற்றாண்டின் இறுதி யில் கண்டுபிடிக்கப்பட்டது. மின்சாரத் தினால் விசிறியினுள் உள்ள மோட்டார் சுழலும்போது, அதனுடன் இணைந்த அலகுகளும் சுழன்று காற்றோட்டம் உண் டாகிறது. இன்று பலவகையான மின் விசிறிகள் உள்ளன. மேசை விசிறி (Table fan), நிலை விசிறி (Pedestal fan), உயரே கூரையில் பொருத்தும் விசிறி (Ceiling fan) முதலியன உள்ள ன. சிறு மின்கலங்களைக் (Cells) கொண்டு இயங்கும் சிறு கைமின்விசிறியும் உள்ளது.

காற்றோட்டத்தை ஏற்படுத்துவதற்கு மட்டுமல்லாமல் தூசியும் வெப்பமும் நிறைந்த காற்றை வெளியேற்றுவதற் கான வெளியேற்ற விசிறிகளும் (Exhaust fans) உள்ளன. மோட்டார் கார் களில் எந்திரங்களைச் சூடேறாமல் காப்பது மின் விசிறியின் முக்கியமானதொரு பயனாகும். எந்திரம் சூடடையாமல் தடுப்பதற்குக் காரில் குளிர்விக்கும் அமைப்பு (Radiator) ஒன்று உள்ள து. இதற்குப் பின்புறம் விசிறி அமைக்கப் பட்டிருக்கும். விசிறியினால் ஏற்படும் காற்றோட்டம் குளிர்விக்கும் அமைப்பில் பட்டு, வெப்பத்தைத் தணிப்பதில் உதவி