பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 9.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
பலவகை விசிறிகள்

பலவகை விசிறிகள்

செய்கிறது. இதுபோலவே, தொழிற் சாலைகளில் உலர்த்தவும் குளிர்விக்கவும் பலவிதமான விசிறிகள் பயன்படுகின்றன.

விசுவக்க திர்க ள் (Cosmic Rays) : எலும்பு முறிவைக் கண்டுபிடிக்க எக்ஸ் கதிர்களைக் (த.க.) கொண்டு போட்டோ எடுக்கிறார்கள். ஏனென்றால் தோல், தசை நரம்பு போன்றவற்றை ஊடுருவிச் செல்லும் திறன் எக்ஸ்-கதிர்களுக்கு உண்டு. யுரேனியம், தோரியம், ரேடியம் முதலிய கதிரியக்கத் தனிமங்களும் இத் தகைய கதிர்களை வெளிவிடுகின்றன. இந்தக் கதிர்கள் எல்லாவற்றைக் காட்டி லும் சக்திவாய்ந்த ஒருவகைக் கதிர் களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை தாம் விசுவக்கதிர்கள். 1926ஆம் ஆண்டில் இந்தக் கதிர்களைக் கண்டுபிடித் தார்கள்.

வானவெளியிலிருந்து வரும் இக்கதிர் களுக்குப் பிரதம விசுவக்கதிர்கள் (Primary cosmic rays) என்று பெயர். விசுவக்கதிர்கள் அதிக மின்சாரம் கொண்டவை. பூமியிலிருந்து உயரே போகப் போக இவற்றின் செறிவு அதிகம். புவியின் காந்தமண்டலம் இக்கதிர்களைப் பாதிக்கின்றது. பிரதம விசுவக்கதிர்களில் பெரும்பாலும் புரோட்டான்களே காணப்படுகின்றன. இவை ஒளி செல்லும் வேகத்தில் பாய்கின்றன. வாயுமண்ட லத்தின் மேற்பகுதியை வந்தடைந்ததும் காற்றில் அடங்கிய வாயுக்களின் அணுக் களுடன் இவை மோதுகின்றன. அதன் கதிர்கள்

விளைவாக இவற்றிலிருந்து நியூட்ரான்கள், புரோட்டான்கள், எலக்ட்ரான்கள், முதலிய கதிர்கள் வெளிப்படுகின்றன. பிர தமக் கதிர்களின் சக்தியில் ஓரளவை இவை பெறுகின்றன. இவ்வாறு தோன்றும் கதிர்களுக்குத் துணை விசுவக்க திர்க ள் (Secondary cosmic rays) என்று பெயர். இவை மேலும் மேலும் காற்றிலுள்ள அணுக்களைப் பிளந்து கொண்டே செல்கின்றன. துணை விசுவக்கதிர்கள் மட்டுமே பூமியை எட்டுகின்றன. இவை பூமியிலுள்ள எல்லாப் பொருள்களையும் தாக்குகின்றன. இக்கதிர்கள் கனமான பாறைகளையும் துளைத்துக்கொண்டு செல்லக்கூடியவை. நீரிலும், தரையினடியிலும் இக்கதிர்கள் ஊடுருவிச் சென்றிருப்பதாகக் கண்டு பிடித்திருக்கிறார்கள். இக்கதிர்களினால் மனிதனுக்கும், மற்ற உயிர்களுக்கும் அவ்வளவாகத் தீங்கு எதுவும் ஏற்படுவ தில்லை . விசுவக்கதிர்கள் எங்கிருந்து வரு கின்றன? அவற்றின் மிகுதியான சக்திக்குக் காரணம் என்ன? அவற்றின் மூலம் இப் பிரபஞ்சத்தின் தன்மையை நாம் அறிய முடியுமா? இவை போன்ற கேள்வி களுக்கு விடை காண விஞ்ஞானிகள் முயன்று வருகிறார்கள். இதற்காக ராக் கெட்டுகளையும், செயற்கைக் கிரகங் களையும் (த.க.) விண்வெளியில் செலுத்தி விசுவக்கதிர்களை மேலும் ஆராய்ந்து வருகிறார்கள். பார்க்க: கதிரியக்கம்.