பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 9.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

விஞ்ஞானம்

விஞ்ஞானம் : சர்க்கரை இனிக்கிறது; வெயில் சுடுகிறது; பால் வெண்மையாகத் தோன்றுகிறது; இடி இடிக்கிறது; ஒலி கேட்கிறது. இவை போன்ற இயற்கை நிகழ்ச்சிகளில் ஒற்றுமை எதுவும் தோன்ற வில்லை. ஆனால் மனிதன் இயற்கை நிகழ்ச்சிகளை உற்றுநோக்கி, அவற்றைப் பற்றிய உண்மைகளையும் காரண காரியத் தொடர்புகளையும் ஆராய்ந்தறிவதில் நெடுங்காலமாக ஈடுபட்டு வந்திருக் கிறான். அதன் பயனாக, உலகிலுள்ள எத்தனையோ பொருள்களின் இயல்புகளும், அமைப்புகளும் கண்டறியப்பட்டுள்ளன.

ரெயில் தண்டவாளம் அமைக்கும் பொழுது, இரண்டு தண்டவாளங்க ளுக்கிடையே சிறிது இடைவெளி விடு கிறார்கள். கோடை காலத்தில் இந்த இடைவெளி தெரிவதில்லை. காரணம், வெப்பத்தில் தண்டவாளம் நீண்டு இடை வெளியை அடைத்துவிடுகிறது. வெப்ப மானியில் உள்ள பாதரசம் வெப்பம் அதிகரிக்கும்பொழுது ஏறுகிறது. வெப் பத்தினால் பாதரசம் விரிவடைவதே இதற்குக் காரணம். காற்றடைத்த பலூனை வெயிலில் சிறிது நேரம் வைத்தால், அது உடைந்துவிடுகிறது. பலூனிலுள்ள காற்று சூடாகி விரி வடைவதால் பலூன் வெடித்து விடுகிறது. இந்நிகழ்ச்சிகளின் மூலம் வெப்பத்தினால் இரும்பு போன்ற உலோகங்களும், திர வங்களும், வாயுக்களும் விரிவடைகின்றன என்ற உண்மையை அறிகின்றோம். ஆகவே, பொதுவாக வெப்பத்தினால் பொருள்கள் விரிவடைகின்றன என் கிறோம். இப்படிக் கூறுவதன் மூலம் நாம் பெற்ற ஓர் அறிவை ஒழுங்கு செய்கிறோம். இவ்வாறு, உலகில் எக் காலமும் பலவிதமான நிகழ்ச்சிகள் நடை பெறுகின்றன. அவற்றைக் கவனித்து, வகைப்படுத்தி, அவற்றினிடையே உள்ள உறவுகளை அறிந்து, நெறிப்படுத்திய அறிவின் தொகுதியே விஞ்ஞானம் ஆகும்.

விலங்குகள், தாவரங்கள், வானம், காற்று, பருவம் முதலியன பற்றிப் பலப்பல உண்மைகள் விஞ்ஞானி களின் அரும்பெரும் முயற்சிகளினால் தெரியவந்துள்ளன. முதலில் உண்மைகள் எனக் கருதப்பட்டவை பின்னர் தவ றென நிரூபிக்கப்பட்டுள்ளன; வேறு சில விஞ்ஞான விதிகள் திருத்தம் பெற் றுள்ளன. எடுத்துக்காட்டாக, அணுவைப் பகுக்க இயலாது என்ற டால்ட்டனின் (த.க.) கொள்கை மாறிவிட்டது. இன்று அணுவையும் பகுத்து, அணு சக்தியைப் பயன்படுத்துகிறார்கள். ஒலி யானது, ஒளியைப் போலவே, நேர்