பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 9.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

விஞ்ஞானம் கோட்டில் செல்லும் என முதலில் கருதிவந்தார்கள். ஆனால், பின்னர் ஒலி வளைந்து செல்லும் தன்மையுடையது எனக் கண்டறிந்தார்கள். விஞ்ஞான அறிவு இன்று மிகப் பெருமளவில் வளர்ந்து பெருகிவிட்டது; மேலும் வளர்ந்து வருகிறது. விஞ்ஞானத்தை இன்று கணிதம், பௌதிகம், ரசாயனம் மருத்துவம், வானவியல், உயிரியல் எனப் பல துறைகளாகப் பகுத்துள்ளனர். இக்காலத்தில் விஞ்ஞானத்தைப் பொது வாக இருபெரும் பிரிவுகளாகப் பிரித் துள்ளனர். விஞ்ஞான உண்மைகளின் அடிப்படையில் விதிமுறைகளை வகுப்பது 'தூய விஞ்ஞானம்' (Pure science) எனப் படும். கணிதம், பௌதிகம், உயிரியல் போன்றவை இவ்வகையில் அடங்கும். தூய விஞ்ஞானிகள் வகுக்கும் விதி முறைகளை நடைமுறையில் பயன் படுத்துவது 'பயன்முறை விஞ்ஞானம்' (Applied science) எனப்படும். பொறியியல், மருத்துவம், வேளாண்மை போன்றவை இவ்வகையைச் சேர்ந்தவை. விஞ்ஞானம் பலவகைகளிலும் முன் னேறி இன்று மனித வாழ்வோடு நெருங்கி ஒன்றிவிட்டது. மக்களின் நோயற்ற வாழ்வுக்கும், நாகரிக வாழ் வுக்கும் விஞ்ஞானம் அடிப்படையாக விளங்குகிறது. வானொலி, தொலைபேசி, தந்தி , சினிமா, பலவகை அடுப்புகள், குளிர்ப்பதனப்பெட்டி, மாவு - அரிசி அரைக்கும் எந்திரங்கள், மோட்டார் வண்டிகள் போன்ற எத்தனையோ சாத னங்கள் விஞ்ஞானத்தினால் புதிதாக உருவாக்கப்பட்டு, அன்றாட வாழ்வில் பயன்பட்டுவருகின்றன. அணைகள் கட்ட வும், அவற்றின் மூலம் மின்சார உற்பத்தி செய்யவும் விஞ்ஞானிகள் அறிந்துள்ளனர். கார், ரெயில், கப்பல், விமானம் முதலிய ஊர்திகளும் விஞ் ஞானத்தின் சாதனைகளே. நோய்களைக் குறைத்து நாம் நீண்ட ஆயுளுடன் வாழச்செய்கிறது மருத்துவம். இவ்வாறு நன்மை செய்யும் விஞ் ஞானத்தைத் தீமைக்கும் சிலர் பயன் படுத்துகின்றனர். மின்சார உற்பத்திக்கும், தொழிற்சாலைகளை இயக்கவும் பயன் படும் அணுசக்தியை அணுகுண்டுகளைத் தயாரித்து அழிவுக்கும் பயன்படுத்து கின்றனர். விரைவான பயணத்திற்கும், வெள்ளம், நிலநடுக்கம் போன்றவற்றால் அவதியுறும் மக்களுக்கு உணவும் மருந்தும் கொண்டு செல்லவும் பயன்படும் விமா னங்களை, குண்டுகளை வீசி நாடு நக ரங்களை நாசமாக்கவும் பயன்படுத்து கிறார்கள். - விடுகதை நாம் வாழும் பூமியை ஆராய்வதுடன் விஞ்ஞானிகள் நிற்கவில்லை. இப்பொழுது, வேறு கோளங்களை ஆராய்வதிலும் ஈடு பட்டிருக்கிறார்கள். இம்முயற்சியில் மனி தன் விண்வெளிப்பயணம் (த.க.) மேற் கொண்டு, சந்திரனுக்கும் சென்று திரும்பி விட்டான். அதுபோல், செவ்வாய், வெள்ளி முதலிய கிரகங்களுக்குச் சென்று வரவும் இப்பொழுது திட்டமிட்டுவரு கிறார்கள். விடுகதை : விடுகதை கூறி விளை யாடுவதில் குழந்தைகளுக்கு விருப்பம் அதிகம். குழந்தைகளுடன் பெரியவர் களும் இதில் கலந்துகொள்வதுண்டு. முதலில் ஒரு குழந்தை ஒரு விடு. கதையைச் சொல்ல, மற்றொரு குழந்தை அதற்கு விடை கூறும். விடை தெரிய வில்லையென்றால் அக்குழந்தை ' மாற்று விடுகதை' ஒன்றைச் சொல்லி மடக்க முயலும். முதல் குழந்தைக்கு விடை தெரியவில்லையென்றால், அது தன்னுடைய கதையின் விடையைக் கூறி, மாற்றுக் கதையின் விடையைத் தெரிந்து கொள்ள முற்படும். இத்தகைய விடுகதை விளையாட்டு மிகத் தொன்மை வாய்ந்தது. மிகப் பழமையான நூலாகிய தொல்காப்பி யத்திலும் விடுகதை பற்றிக் கூறப்பட் டுள்ளது. பழம்பாடல்கள், கதைகள் முதலிய இலக்கியங்களால் மட்டுமின்றி, வாய்மொழியாகவும் இவை பரவியிருக் கின்றன. எல்லா நாடுகளிலும் எல்லா மொழிகளிலும் விடுகதைகள் உண்டு. தொன்றுதொட்டு வழங்கிவரும் விடு கதைகள் மட்டுமின்றி, இன்றைய விஞ் ஞான உலகுக்கேற்பப் புதுப் புது விடு கதைகளும் உருவாகிவருகின்றன. இவை யெல்லாம் குழந்தைகளின் சிந்தனையைத் தூண்டும் இனிய பொழுதுபோக்கு விளை சில விடுகதைகள் ஊருக்கெல்லாம் ஒரே விளக்கு - சூரியன் செம்பு நிறையக் கெம்பு - மாதுளம்பழம் சின்னக் கிணற்றில் கிண்ணம் தண்ணீர் - இளநீர் உயரக் கிளையில் உரல் கட்டித் தொங்குகிறது - பலாப்பழம் கழுத்து உண்டு, தலை இல்லை; கை உண்டு, விரல் இல்லை; உடல் உண்டு, உயிரில்லை - சட்டை உலர்ந்த கொம்பிலே மலர்ந்த பூ - குடை ஊசி முனையில் ஓய்யார சங்கீதம் - கிராமபோன் வெளிச்சத்திலே பிறந்ததை இருட்டிலே பார்க்கிறோம் - சினிமாப் படம்