பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 9.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

விண்வெளி யாட்டாக அமைகின்றன. விடையைக் கண்டுபிடிக்கும் முயற்சியால் சிந்தனைத் திறன் பெருகும்; அறிவு வளரும். விண்வெளிப் பயணம் : விண்வெளி யில் வெகு தொலைவில் பயணம் செய்வது மனிதனின் கனவாகவே இருந்து வந்தது. ஏனெனில் வாயுமண்டலத்திற்கு (த.க.) அப்பால் காற்றே இல்லை. காற்று இல்லாத இடத்தில் விமானம் பறக்க முடியாது. நாளடைவில் ராக்கெட்டுகள் (த.க.) உருவாக்கப்பட்டதுமே விண்வெளிப் பயணம் சாத்தியமாயிற்று. விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தொடக்கத்தில் பலூன்கள், ஆகாய விமானங்கள் இவற்றைக் கொண்டு விண்வெளியில் நெடுந்தொலைவு செல்ல முடியும் எனக் கண்டார்கள். திரவ ஆல்கஹாலும், திரவ நிலைக்கு மாற்றப் பட்ட ஆக்சிஜனும் கலந்த கலவையை எரியச் செய்து எழுப்பப்படும் உந்து விசையைக் கொண்டு ராக்கெட்டுகளை மிக வேகமாகச் செலுத்தலாம் என்று ரஷ்யா வில் சியோல்க்கோவிஸ்கி (Tsiol kovsky) என்பவரும், ஜெர்மனியில் ஓ பெர்த் (Oberth ) என்பவரும், அமெரிக்காவில் கோடார்டு (Goddard) என்பவரும் கண்டுபிடித்தனர். கோடார்டு 1935-ல் வானத்தில் 2,300 கிலோ மீட்டர் உயரத்திற்கு ராக்கெட்டுகளைச் செலுத்தினார். அவை மணிக்கு 1,100 கிலோமீட்டர் வேகத்தில் சென்றன. இதன்பின் விஞ்ஞானிகள் வாயு மண்டலத்தில் ராக்கெட்டுகளை ஏவிப் பல புதிய விளக்கங்களைப் பெற்றனர். விண் வெளிக்குச் செல்லும் ராக்கெட்டை பூமி தன் கவர்ச்சி விசையால் மீண்டும் இழுத்துக்கொள்ளாத வகையில் அதிக வேகமாகச் செலுத்தவேண்டும். அதா வது, பூமியிலிருந்து செலுத்தப்படும் ராக்கெட்டு, பூமியின் கவர்ச்சி விசை யிலிருந்து விடுபட்டு, விண்வெளியில் செல்வதற்குத் தொடக்க நிலையில் மணிக்குக் குறைந்தது 40,000 கிலோ மீட்டர் வேகத்தில் செலுத்தப்பட வேண்டும். இவ்வாறு அதிவேகத்தில் செல்லும்போது வாயு மண்டலத்தில் உராய்வு (த.க.) உண்டாகும். உராய்வினால் வெப்பம் உண்டாகும். கைகளைத் தேய்த்தால் வெப்பம் உண்டா கிறதல்லவா, அதுபோல. உராய்வு ஓர் அளவுக்கு மேல் அதிகமாகிவிட்டால், வெப்பம் மிகுதியாக உண்டாகி, ராக் கெட் எரிந்துவிடும். அவ்வாறே, வான வெளியிலிருந்து திரும்பி வரும் ராக் கெட், வாயுமண்டலத்தில் நுழையும் பொழுதும் ஏற்படும் உராய்வினால் எரிந்து போகக் கூடும். உராய்வினால் எரிந்துபோகாத வகையில் ராக் கெட்டைத் தயாரிக்கவும், இயக்கவும் விஞ்ஞானிகள் வழி வகுத்தார்கள். இதையொட்டி, ராக்கெட்டின் மூலம் செயற்கைக் கிரகங்களை (த.க.) விண்வெளி யில் அனுப்ப முடிந்தது. ரஷ்யாவும், அமெரிக்காவும் செயற்கைக் கிரகங்களை அமைத்து, அவற்றுள் நுண் கருவிகளை வைத்து, பூமியைச் சுற்றி வருவதற்கு அனுப்பிச்சோதனைகள் நடத்தின. 1957 அக்டோபர் 4-ல் ஸ்புட்னிக்-1 என்னும் செயற்கைக்

1968 நவம்பர் மாதம் ஸாண்ட்-6 என்ற ரஷ்ய விண் போட்டோ படங்களை எடுத்து அனுப்பிவைத்து மீண்டும் பூமி கலத்தின் பயணத்தை விளக்கும் படத்தைக் கீழே காணலாம் பாதை திருத்தப்படுதல் 246 கி.மீ பூமியைச் சுற்றிப் பயணம் தொடங்குதல் சந்திரனை நோக்கிப் புறப்பாடு 231 1120 நுழைவு வழி 120 கி.மீ 3ur பூமியில் இறங்கும் கூடு பிரி வாயு மண்டலத்தில் கூடு இறங்குதல் ப் பயணம்

வெளிக்கலம் ஒன்று சந்திரனைச் சுற்றிவந்து பல தெளிவான பக்கு வந்து மெதுவாகத் தரையிறங்கிற்று. இந்த விண்வெளிக் சந்திரனைச் சுற்றி வருதல் சந்திரன் 6 கி.மீ உபாதை திருத்தப்படுதல் திருத்தம் செய்யப்படாமலிருந்தால் விண்வெளிக் கலம் சென்றிருக்கும் பாதை தை திருத்தப்படுதல் தல்