பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 9.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

________________

48 விண்வெளிப் பயணம் 1966 மார்ச் மாதம் விண்வெளியில் ஏற்கெனவே ஆளின்றிப் பறந்துகொண்டிருந்த 'அஜினா' என்ற செயற்கைக் கிரகத்துடன் இரு விண்வெளி வீரர்கள் இயக்கிய 'ஜெமினி' என்ற விண்வெளிக் கலம் இணைந்துகொண்டது. இணைவதற்கு முன் எடுக்கப்பட்ட படம். கிரகம் ஒன்றை ரஷ்யா வானவெளியில் பறக்கவிட்டது. இது சந்திரனைப்போல் ஒரு துணைக் கிரகமாக பூமியைச் சுற்றி வந்தது. ஒரு முறை பூமியைச் சுற்றிவர 90 நிமிடங்கள் ஆயின. மீண்டும் 1957 நவம்பர் 3-ல் ரஷ்யர் பறக்கவிட்ட ஸ்புட்னிக் - 2 என்ற செயற்கைக் கிர கத்தில் 'லைக்கா' என்ற நாயை வைத்து அனுப்பினர்; அது பத்திரமாகப் பூமிக்குத் திரும்பியது. ஸ்புட்னிக்- 2 விண்வெளியைச் சுற்றிவரும்பொழுதே, நாயின் இதயத் துடிப்பையும். மூச்சையும் பதிவு செய் தார்கள். இச் சோதனைகளால் விண் வெளிப் பயணத்திற்கு மனித உடல் ஏற்றதுதான் என்பது தெரியவந்தது. ரஷ்யாவைத் தொடர்ந்து அமெரிக்காவும் 1958 ஜனவரி 31-ல் 'எக்ஸ்புளோரர்" (Explorer) என்ற தன் முதல் செயற்கைக் கோளை வானத்தில் பறக்கவிட்டது.

தளத்திலிருந்து புறப்படும் ராக்கெட்

அடுத்து, ராக்கெட்டில் விண்வெளிக் கலத்தைப் பொருத்தி, அதில் மனிதனை வைத்து விண்வெளிக்கு அனுப்புவதற்கு வழி காண விஞ்ஞானிகள் முயன்றனர். நாம் வாழும் பூமி, வினாடிக்கு 29.7 கிலோமீட்டர் வேகத்தில் சூரியனைச் சுற்றிவருகின்றது. இந்த வேகத்தை நமது உடல் தாங்கிக்கொள்கிறது. ஆனால் இந்த வேகத்தில் திடீரென மாறுதல்கள் ஏற்படும்பொழுது என்ன நேரும் என்பது தெரியாமலிருந்தது. பூமியிலிருந்து புறப் படும்பொழுது ஏற்படும் கடும் வேகத்தின் போதும், பூமியைச் சுற்றும்பொழுது ஏற்படும் எடையின்மையின்போதும். (Weightlessness) விண்வெளிப் பயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படாதவகையில்

விண்வெளிப் பயணத்திற்குப் பயன்பட்ட சாட்டர்ன்-5 ராக்கெட் மூன்று கட்டங்க ளாக இயங்கியது. அது மேலே ஏவப்பட்ட பிறகு 21 வினாடிகளில் அதன் முதல் கட்டப் பகுதி கீழே விழுந்துவிடும். இரண்டாம் கட்டப் பகுதியின் எஞ்சின்கள் இயங்கத் தொடங்கி 4,50,000 கிலோகிராம் உந்துவிசையை அளிக்கும். அடுத்து 6½ வினாடிகளுக்குப் பிறகு இரண்டாம் பகுதியும் விழுந்துவிடும். மூன்றாம் கட்டப்பகுதியாகிய அப்பாலோவின் வெளிக் கலம் 90,700 கிலோகிராம் உந்துவிசையுடன் விண்வெளியில் பறக்கும். இது தன் சுற்றோட்டப் பாதையைச் சேர்ந்தவுடன் ராக்கெட்டுகள் வேலை செய்யாமல் நின்றுவிடும். இப்பகுதி எடையற்ற நிலையில் பூமியைச் சுற்றி ஒடத் தொடங்கும். குறிப்பிட்ட நேரத்தில் மீண்டும் இதன் எஞ்சின் கள் இயங்கத் தொடங்கும். மணிக்கு 38,880 கிலோமீட்டர் வேகத்தை எட்டிப் பூமியின் கவர்ச்சி விசையிலிருந்து விடுபட்டு, இது சந்திரனை நோக்கிப் பறக்கத் தொடங்கும். சந்திரனை நெருங்கும்போது, இதன் வேகம் மணிக்கு 4,800 கிலோமீட்டராகக் குறையும். இந்த நிலையில் ராக்கெட்டுகள் மீண்டும் வேலை செய்யாமல் நின்றுவிடும்.

சாதனங்களை அமைப்பதில் பொறி யியல் வல்லுநர்கள் ஈடுபட்டார்கள். வேகம் அதிகரிக்கும்பொழுதும், வேகம் குறையும்பொழுதும் உடலின்மீது பெரு மளவு அழுத்தம் உண்டாகிறது என் பதைக் கண்டு, அதைச் சமாளிக்க வழிவகைகளை வகுத்தார்கள். விண்வெளிக் கலம் எத்துணை வேகத்தில் சென்றாலும், அதனால் மனித உடலுக்குப் பாதகம் ஏற்படாதெனக் கண்டார்கள். இதன்பின், விண்வெளிக் கலத்தில் மனி தனை வைத்து விண்வெளிக்கு அனுப்பி, மீண்டும் பூமிக்குப் பத்திரமாகக் கொண்டு வரும் வழிகளைக் காண்பதில் விஞ் ஞானிகள் ஈடுபட்டனர். இதில் முதலில் வெற்றிபெற்றவர்கள் ரஷ்யர்களே. அவர்கள் 1961 ஏப்ரல் 12-ல் யூரி ககாரின் (த.க.) என்பவரை விண்