பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 9.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

விண்வெளி வெளிக்கலத்தில் வைத்து விண்வெளிக்குச் செலுத்தினர். அவர் சென்ற கலம் பூமி யிலிருந்து சுமார் 300 கிலோமீட்டர் உயரம் சென்று பூமியை 108 நிமிடத் தில் ஒரு முறை சுற்றிவிட்டு மீண்டும் பத்திரமாகப் பூமிக்குத் திரும்பி வந்தது. இதன்பின் ஒரு மாதத்திற்குள் அமெரிக்கா வும் ஆலன் ஷெப்பர்டு ( Alan Shepard ) என்பவரை விண்வெளியில் அனுப்பி வெற்றி கண்டது. தொடர்ந்து ரஷ்யா வும் அமெரிக்காவும் பலமுறை விண் வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்பி வெற்றிகண்டன.

சந்திரனுக்கு மனிதனை அனுப்பும் முயற்சியில் ரஷ்யா, அமெரிக்கா இரண்டு நாடுகளும் தீவிரமாக ஈடுபட்டன. ரஷ்யர்கள் லூனா (Luna) என்ற விண்வெளிக் கலங்களைச் செலுத்திச் சந்திரனைப் பற்றிய பல அரிய தகவல் களைச் சேகரித்தனர். 'லூனாக்காட்' ( Lunakhod ) என்னும் தானே இயங்கும் ஊர்தியைச்ச ந்திரனுக்கு விண்வெளி வீரர்களின் உடை அவர்களுக்கு முழுப் பாதுகாப்பு அளிக்கக்கூடிய வகையில் அமைக்கப்படுகிறது. முக்கியமாக அதனுள் ஆக்சிஜன் வைக்கப்படும். விமானிகள் வாயு மண்டலமே இல்லாத சந்திரனில் இறங்கும் பொழுது அவர்களுடைய உடுப்புக்குள்ளிருக்கும் ஆக்சிஜன் பலூன் போல் ஊதி வெடிக்காதவாறு பாதுகாக்கப்பட்டிருக்கும். சந்திரனில் பகல் வெப்பநிலை 100' வரை உயர்ந்திருக்கும். இரவில் வெப்பநிலை -132° வரை தாழ்ந்து கடும் குளிராக இருக்கும். முற்றிலும் மாறு பாடான இந்தத் தட்பவெப்ப நிலையைத் தாங்கிக் கொள்வதற்கு ஏற்றவாறு விமானிகளின் உடை அமைக்கப்பட்டிருக்கும்.

அனுப்பி , இயங்கச் செய்து புதிய விவரங்களைப் பெற்றனர். மூன்று அமெ ரிக்க விண்வெளிவீரர்கள் சாட்டர்ன்-5 என்ற ராக்கெட்டுடன் இணைக்கப்பட் டிருந்த விண்வெளிக் கலத்தில் 1968 டிசம்பர் 21-ல் பூமியை விட்டுப் புறப் பட்டனர்; 24-ல் சந்திரனை நெருங்கி 111 கிலோமீட்டர் தொலைவில் சந்திரனைப் பத்து முறை சுற்றிவிட்டு, டிசம்பர் 27-ல் மீண்டும் பூமிக்குத் திரும்பினர்.

சந்திரனுக்கு மனிதனை அனுப்புவதில் முதல் வெற்றி 'அமெரிக்காவுக்குக் கிடைத்தது. 1969 ஜூலை 16-ல் நீல் ஆர்ம்ஸ்டிராங் ( Neil Armstrong ), எட்வின் ஆல்டிரின் ( Edwin Aldrin ), மைக்கேல் காலின்ஸ் ( Michael Collins ) ஆகிய மூன்று அமெரிக்க விண்வெளி வீரர் கள் அப்பாலோ-11 என்னும் விண்வெளிக் கலத்தில் சந்திரனுக்குப் புறப்பட்டனர். அக்கலம் சந்திரனின் சுற்றுப்பாதையை

ரிப் பயணம் சந்திரனை அடைந்த முதல் மனிதன் - நீல் ஆர்ம்ஸ்டிராங். இந்தப் படத்தை எடுத்த ஆல்டிரினின் உருவமும், சந்திரன் கூடும் ஆர்ம்ஸ்டிராங்கின் தலைக் கவசத்தில் பிரதிபலிப்பதைக் காணலாம். அடைந்ததும், காலின்ஸ் ஆணைக்கூட்டில் ( Command- Module ) இருந்துகொண்டு சுற்றுப் பாதையில் சுற்றிக்கொண்டிருந் தார். ஆர்ம்ஸ்டிராங், ஆல்டிரின் இரு வரும் சந்திரன் கூட்டினுள் ( Lunar Module ) இறங்கினர். அக்கூடு, ஆணைக் கூட்டி னின்றும் தன்னை விடுவித்துக்கொண்டு, சந்திரனில் இறங்கிய சந்திரன் கூடு. அருகில் நிற்பவர் ஆல்டிரின்.