பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 9.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

விமான எதிர்ப்புப் பீரங்கி - விமானந்தாங்கிக் கப்பல்

விமான எதிர்ப்புப் பீரங்கி

விமான எதிர்ப்புப் பீரங்கி (Anti aircraft Gun) : வானில் பறக்கும் பகை விமானங்களைத் தரையிலிருந்தே தாக்கப் பயன்படும் சாதனம் விமான எதிர்ப்புப் பீரங்கி ஆகும்.

முதல் உலக யுத்தத்தின்போது விமா னத் தாக்குதலால் ராணுவ தளங்கள், விமான நிலையங்கள், துறைமுகங்கள், கப் பல்கள், நகரங்கள் முதலியன பெரு மளவில் சேதமடைந்தன. இத்தகைய பகை விமானங்களைத் தரையிலிருந்து தாக்கி அழிக்கவேண்டியிருந்தது. இதற் காக, ஆகாயத்தை நோக்கிச் சுடுமாறு எந்திர சாதனம் அமைந்த பீரங்கிகளை அமைத்தனர். இவற்றை - 'விமான எதிர்ப்புப் பீரங்கிகள்' என அழைத்தனர். இவை நான்கு பக்கமும் சுழலும் வகை யிலும் மேல் நோக்கி உயர்த்தும் வகை யிலும் பொருத்தப்பட்டிருந்தன.

விமானங்கள் நீளவாக்கிலும், பக்க வாட்டிலும், உயரத்திலும் மிக வேக மாகச் செல்லக்கூடியவை. அதனால் அவற்றைச் சாதாரணக் குண்டுகளைக் கொண்டு தாக்குவது எளிதாக இல்லை. எனவே குண்டுகளுக்குப் பதிலாக தொலை வில் சென்று வெடிக்கும் வெடிகுண்டுகளை (Shells) இப்பீ ரங்கிகளில் பயன் படுத்தினர். இக்குண்டுகளில் குறித்த நேரத்தில் பற்றவைக்கும் வத்திகளும் இருந்தன. இக்குண்டுகள் வெடித்து நாலா பக்கமும் சில்லுகள் சிதறும். அச் சில்லுகள் வெகுவேகமாகச் சென்று, பகை விமானங் களின்மீது பட்டுச் சேதம் உண்டாக்கும். முதலில் இப் பீரங்கிகள் பெரிய நக ரங்களுக்கு அருகில் சில குறிப்பிட்ட இடங் களில் மட்டுமே பொருத்தி வைக்கப்பட்டி ருந்தன. இக்காலத்தில் சக்கரங்களின் மேல் நகரக்கூடிய விமான எதிர்ப்புப் பீரங்கிகளும், பீரங்கிகளைச் சுமந்து செல்லும் வண்டிகளும் உள்ளன. இவற்றை எவ்விடத்திற்கும் எளிதாகக் கொண்டு சென்று பகைவிமானங்களைத் தாக்கப் பயன்படுத்தலாம். ஒருவரே இயக்கக் கூடிய வகையில் விமான எதிர்ப்புப் பீரங்கிகள் தயாரிக்கப் பட்டுள்ளன. 15 கிலோமீட்டர் உயரத்தில் பறக்கும் விமானத்தைக்கூடத் தாக்கக் கூடிய விமான எதிர்ப்புப் பீரங்கிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இரவிலும், பக லிலும், அண்மையிலும், தொலைவிலும் பகை விமானங்கள் உள்ள இடத்தை ராடார்கள் (த.க.) என்னும் கருவியின் மூலம் விமான எதிர்ப்புப் பீரங்கி வீரர் கண்டுகொள்வார். உடனே அவர் அந்த விமானத்தை நோக்கிப் பீரங்கியை இயக்குவார். நாட்டிலுள்ள முக்கியமான இடங் களைப் பகை விமானங்களிடமிருந்து காப் பதற்குத் தரைப்படையினருக்கு மிகவும் உதவியாக உள்ளன விமான எதிர்ப்புப் பீரங்கிகள். கடற்படையிலுள்ள போர்க் கப்பல்களிலும் இவை பொருத்தப்பட் டுள்ளன. விமானந்தாங்கிக் கப்பல் (Aircraft Carrier) : கடற்ப டையில் (த.க.) பலவகைக் கப்பல்கள் உள்ளன. இன்றையக் கடற்படையில் மிக முக்கிய மாக விளங்குவது விமானந்தாங்கிக் கப்பல் ஆகும். சிறு விமானங்களுக்கு இது ஒரு 'மிதக்கும் விமான நிலைய மாகப் பயன்படுகிறது. விமானங்கள் வந்து இறங்க வும், மீண்டும் பறக்கவும் ஏற்றவாறு இதன் மேல் தளம் அகலமாகவும், சமதள மாகவும் அமைந்திருக்கும். போர்க்காலத் தில் இந்தக் கப்பலின் தளத்திலிருந்து விமானங்கள் பறந்து போய்க் குண்டு வீசி விட்டுத் திரும்பும்.

அமெரிக்க விமானந்தாங்கிக் கப்பல்