பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 9.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

விமான நிலையம் - விமானப்படை

பாலம் விமான நிலையம், டெல்லி. இடதுபுறம் பயணிகளின் பெட்டிகள் எடுத்துச் செல்லப்படுவதையும், வலது புறம் விமானத்திற்கு எரிபொருள் நிரப்பப்படுவதையும் காணலாம். பயணிகள் விமானத்தில் ஏறுவதற்கான படிக்கட்டும் தயாராக உள்ளது.

விமானங்கள் தரையில் இறங்கி நிற்ப தற்கு முன்னும், தரையிலிருந்து உயரே பறப்பதற்கு முன்னும் சிறிது தூரம் ஓடுபாதையில் (Runway) ஓடுகின்றன. இந்த ஓடுபாதைகள் காற்றின் திசை யிலேயே அமைக்கப்படுகின்றன. இப் பாதை அகலமாகவும் மிக நீளமாகவும் கான்கிரீட்டினால் உறுதியாக அமைக்கப் பட்டிருக்கும்.விமானப் போக்கு வரத்தின் அளவையும், காற்றின் திசை யையும் பொறுத்து ஒரு விமான நிலை யத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஓடுபாதைகள் அமைப்பார்கள்.

விமானிகள் இரவில் ஓடுபாதையைக் கண்டுகொள்வதற்காக, அப் பாதையின் இருபுறங்களிலும் ஒளிமிகுந்த வண்ண விளக்குகளை அமைத்திருப்பார்கள். எந் தெந்த இடத்தில் எந்தெந்தவகை அடை யாளங்களும்,வண்ண விளக்குகளும் அமைக்கவேண்டுமெனச் சர்வதேச விதி முறைகள் உள்ளன. இரவில் விமான நிலையம் உள்ள இடத்தை விமானிக்கு உணர்த்துவதற்காக விமான நிலையத்தில் மிக உயரமான இடத்தில் சுழலும் விளக்கு ஒன்று நிறுவப்பட்டிருக்கும். இது விமா னங் கரை விளக்கு (Beacon light) எனப் படும். கப்பல் மாலுமிகளுக்குக் கலங்கரை விளக்கம்போல், விமானிகளுக்கு இந்த விளக்குப் பயன்படுகிறது.

விமான இயக்கத்திற்குக் காற்றின் திசையும் வானிலையும் இன்றியமையாதன. எனவே இவைபற்றி அறிவதற்காக ஒவ் வொரு விமான நிலையத்திலும், வானிலை ஆராய்ச்சி நிலையம் ஒன்றும் இயங்கி வருகிறது. விமான நிலையத்தில், போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது கட்டுப்பாட்டு நிலை யம் (Control tower) ஆகும். இறங்க வரும் விமானங்களுடன் இந் நிலைய அதிகாரிகள் வானொலி மூலம் தொடர்பு கொண்டு, எப்பொழுது தரையில் இறங்க வேண்டும் என்றும், எந்த ஓடுபாதையில் இறங்கவேண்டும் என்றும் கூறுவார்கள். ஓடுபாதைகளில் இடம் இல்லாவிடில், இடம் ஏற்படுத்திக்கொடுக்கும் வரை வானத்திலேயே வட்டமிட்டுக் கொண் டிருக்கும்படி ஆணையிடுவார்கள். அதே போல், புறப்படவிருக்கும் விமானங் களுடனும் தொடர்புகொண்டு தகவல் தெரிவிப்பார்கள். விமான நிலையத்தில் விமானங்களின் போக்குவரத்தைக் கவன மாக ஒழுங்குபடுத்துவது கட்டுப்பாட்டு நிலையத்தின் மிகப் பெரிய பொறுப்பாகும்.

இவை தவிர, விமான நிலையங்களில் தகவல் பிரிவு, நிருவாக அலுவலகங் கள், சுங்கவரி அலுவலகம், பயணிகள் தங்குமிடம், சிற்றுண்டிச்சாலை, அஞ்சல் தந்தி அலுவலகம், தொலைபேசி, சிறு கடைகள் முதலியனவும் இருக்கும். தீ யணைக்கும் படை, முதலுதவி, மருத்துவ வசதிகளும் இருக்கும்.

எல்லா நாடுகளிலும் விமானப்படை யைச் சேர்ந்த விமானங்கள் இயங்கு வதற்கான விமான நிலையங்கள் தனி யாகவே இருக்கும். இவை சிறந்த பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கொண்டி ருக்கும். இவற்றின் அமைப்பு, வடிவம் முதலிய விவரங்களை இரகசியமாகவே வைத்திருப்பார்கள்.

விமானப்படை (Air Force) : ஒரு நாட்டின் ராணுவத்தில் மூன்று பிரிவுகள் உண்டு. இவற்றுள் ஒன்று விமானப்படை. தரைப்படை (த.க.), கடற்படை (த.க.) இரண்டும் மற்ற இரு பிரிவுகள்.

இரு நாடுகளிடையே போர் மூண் டால் தரையில் போர் நடக்கும்; கடற் கரை உள்ள நாடுகளில் கடலில் போர்