பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 9.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

என்னும் உலோகக் கலவையால் தயாரிக்கப் படுகின்றன. இவை நூற்றுக்கணக்கில் மக்கள் செல்லக்கூடிய அளவு பெரியவை. ஆகாயவிமானம் காற்றைவிடக் கன மானது. எனினும், காற்றில் மிதந்து செல்கிறது. அவ்வாறு மிதப்பதற்குக் காற்றின் மேல்நோக்கிய அழுத்த விசை அதைத் தாங்கவேண்டும். அதற்கு ஏற்ற வாறு விமானத்தின் அமைப்பும் முக்கிய உறுப்புகளும் அமைக்கப்படுகின்றன. விமா னத்தின் உடல் அமைப்பைப் படத்தில் காணலாம். செலுத்தி (Propeller) என்பது விசிறிபோல இருக்கும்.அது அதி வேகத்தில் சுழன்று, பலமான காற்றை வால்பக்கமாக வீசச் செய்யும். இதனால் இக்காற்றின் விசைக்கு ஓர் எதிர்விசை தோன்றுகிறது. இந்த எதிர்விசை விமா னத்தை முன்னோக்கித் தள்ளுகிறது. விமானம் தரையிலிருந்து மேலே ஏறவும், காற்றில் மிதந்து பறக்கவும் உதவுபவை அதன் இறக்கைகளாகும் (Wings). விமானத்தைத் தரையிலிருந்து கிளப்பிப் பறக்க வைப்பதற்கும், மேலிருந்து கீழி றக்குவதற்கும் ஏலரான்கள் (Ailerons) பயன்படுகின்றன. நிலைப்படுத்தி (Stabiliser) என்ற சாதனத்தின் உதவியால், விமானம் சீராக, ஆடாமலும் சாயாமலும் பறக்க முடிகிறது. 'உயர்த்தி'யை (Elevator) இயக்கி விமானத்தை உயர்த்தலாம்; அல்லது இறக்கலாம்; சமமட்ட நிலையில் வைத்திருக்கலாம். சுக்கான் (Rudder) என்ற உறுப்பையும், ஏலரான்களையும் கொண்டு விமா னத்தை வேண்டிய திசையில் திருப்பலாம். விமானம் மேலே பறப்பதற்கு முன்னும், பறந்து வந்து தரையில் இறங்கியவுடனும் சிறிது தூரம் தரையில் ஓடுவதற்கு விமா னத்தின்கீழ் சக்கரங்கள் உள்ளன. இவற்றில் வலுவான பெரிய ரப்பர் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. செலுத்தி இல்லாத விமானங்களும் இப்பொழுது தயாரிக்கப்படுகின்றன. இவற்றில் தாரை எஞ்சின்கள் (த.க.) பயன்படுகின்றன. இவற்றை ஜெட் விமானங்கள் (Jet planes) என்பார்கள். இதன் எஞ்சினில் உள்ள எரிபொருள எரி வதால் உண்டாகும் வாயுக்கள், எஞ்சி னின் பின்பகுதியிலுள்ள ஒரு துவா ரத்தின் வழியாக அதிவேகமாக வெளி யேறும். அப்போது விமானம் முன் னுக்குத் தள்ளப்படும். ஒலியைவிட வேகமாகப் பறக்கும் ஜெட் விமானங் களும் (Supersonic planes) இன்று உள்ள ன.

ஜெட் விமானத்தைவிட வேகமாகச் செல்லக்கூடியது ராக்கெட் விமானம்.

1. செலுத்தி 2. எஞ்சின் அறை 3. விமான மேற்கட்டு 4. உடல் பகுதி
5. உயர்த்தி 6. துடுப்பு 7. சுக்கான் 8. நிலைப்படுத்தி
9. சறுக்குவால் 10. மேலும் கீழும் இயங்கும் இறக்கையின்
பகுதி 11. ஏலரான் 12. இறக்கைமுனை விளக்கு 13. இறக்கை
14. சக்கரம் 15. தாங்கும் கால்

இதன் விமான எஞ்சின், தாரை எஞ்சி னிலிருந்து வேறுபட்டது. தாரை எஞ்சின், எரிபொருள் எரிவதற்குக் காற்றிலுள்ள ஆக்சிஜனை எடுத்துக்கொள்கிறது. இவ் வாறு வெளியிலிருந்து ஆக்சிஜன் கிடைக் காவிட்டால், ஜெட் விமானம் வேலை செய்யாது. ராக்கெட் விமானத்தில், ஆக்சிஜன் அதனுள்ளேயே இருக்கிறது. இதனால் காற்று இல்லாத விண்வெளி யிலும் ராக்கெட் விமானம் பறக்க முடியும்.

தொடக்கத்தில் விமானங்களின் வேகம் மணிக்கு 75 கிலோமீட்டர் முதல் 200 கிலோமீட்டர் வரை இருந்தது. இன்று எல்லா நாடுகளிலும் ஒலியைவிட வேகமாகச் செல்லக்கூடிய விமானங்கள் உள்ளன.

தரையிலிருந்து நேராக மேலே செல்லவும், மேலிருந்து தரைக்கு நேராக இறங்கவும், நேராக முன்னோக்கியும், பின்னோக்கியும், பக்கவாட்டிலும் பறக்க வும், ஆகாயத்தில் நிற்கவும் கூடிய ஒரு வகை விமானம் ஹெலிக்காப்ட்டர். இதைப்பற்றித் தனிக் கட்டுரை உள்ளது.

இன்று, போக்குவரத்து விமானங்கள், பயணிகள் விமானங்கள், சரக்கு விமா னங்கள், போர் விமானங்கள், குண்டு வீசும் விமானங்கள், கடற்படை விமா னங்கள் என விமானங்களில் பலவகை உண்டு. எல்லா நாடுகளிலும் விமானப் படை (த.க.), ராணுவத்தின் ஓர் இன்றி யமையாத உறுப்பாக விளங்குகிறது.

உலக நாடுகள் பலவற்றிற்கும், உள் நாட்டில் முக்கிய நகரங்களுக்கும் நாம் எழுதும் கடிதங்கள் விமானத்தில் கொண்டு செல்லப்பட்டு விரைவில்