பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 9.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

வெப்பமானி


குடும்பத்தைச் சேர்ந்த மரங்களும் (Palms) வெப்பமண்டலத்திலேயே அதிகம். இங் குள்ள தாவரங்களின் இலைகள் பெரி தாகவும் கரும்பச்சை நிறமுள்ளதாகவும் இருக்கின்றன. மலர்கள் பெரிதாகவும் கவர்ச்சியான நிறம் கொண்டனவாகவும் உள்ளன. வாழை, அன்னாசி, பப்பாளி, கோக்கோ முதலிய பழங்களும், ரப்பர், பிசின், காப்பி, தேயிலை, எண்ணெய்வித்து, நார், வாசனைப்பொருள் முதலியனவும் வெப்பமண்டலத்தில் தான் மிகுதியாகக் கிடைக்கின்றன.

வெப்பமண்டலத்தில் வாழும் பல விலங்குகள் உருவில் பெரியவை; எண் ணிக்கையிலும் அதிகமாக உள்ளன. யானை, புலி, சிங்கம், காண்டா மிருகம், ஒட்டகச்சிவிங்கி, வரிக்குதிரை முதலியன முக்கியமான விலங்குகள். பறவைகளும் ஊர்வனவும் பூச்சியினங் களும் கூட வெப்பமண்டலத்தில் தான் அதிகம். பஞ்சவர்ணக்கிளி, பரதீசுப் பறவைகள் போன்ற பகட்டான நிறம் கொண்ட பறவைகள் இப்பகுதியில் தான் காணப்படுகின்றன. வெப்பமண்டலப் பகுதியிலுள்ள கடல்களில் வாழும் ஆமை, முதலை, மீன், நண்டு முதலியனவும் உரு வில் பெரியனவாக உள்ளன.

வெப்பமானி (Thermometer) : ஒரு பொருள் சூடாகவோ அல்லது குளிர்ச்சி யாகவோ இருக்கிறது என்பதை நாம் தொட்டுப் பார்த்து ஓரளவு தெரிந்து கொள்ளலாம். ஆனால் துல்லியமாகத் தெரிந்துகொள்ள முடியாது. அதிகச் சூடாக உள்ள பொருள்களைத் தொட்டுப் பார்க்கவும் முடியாது. மேலும், சில சமயங்களில் நம் ஊகம் தவறாகவும் இருக் கலாம். வெப்பநிலையைத் துல்லியமாக அளக்க உதவும் கருவியே வெப்பமானி.

மருத்துவ
வெப்பமானி

வெப்பத்தினால் பொருள்கள் பெருக்க மடைகின்றன என்பதன் அடிப்படையில் அமைந்தது வெப்பமானி. சாதாரண வெப்பமானி , இருபுறமும் மூடப்பட்ட ஒரு கண்ணாடிக் குழாய் ஆகும். ஆனால் இதன் அடிப்பகுதி ஒரு சிறு குமிழாக இருக்கும். பாதரசம் அல்லது ஆல்க ஹால் (த.க.) இதில் இருக்கும். குழாயி னுள் எஞ்சிய பகுதி வெற்றிடம் (த.க.) ஆகும். சூடாக உள்ள ஒரு பொருளில் குமிழ் தொட்டுக்கொண்டிருக்கும்படி வெப்பமானியை வைத்தால், வெப்பத் தினால் அதிலுள்ள பாதரசம் விரி வடைந்து, குழாயினுள் மேலேறும். கண்ணாடிக் குழாயில் வெப்பநிலை அளவு களைக் குறிக்கும் கோடுகளும் எண்களும் பொறிக்கப்பட்டிருக்கும். பாதரசம் விரிவடைந்து மேலேறி வெப்பநிலைக்கேற்ப ஒரு மட்டத்தில் நிற்கும். அங்குப் பொறிக்கப்பட்டுள்ள எண் அந்தப் பொருளின் வெப்பநிலையைக் குறிக்கும். வெப்பமானியை வெளியே எடுத்தால் பாதரசம் சுருங்கி, குழாயில் அதன் மட்டம் கீழிறங்கிவிடும்.

வெப்பநிலையை இவ்வளவு டிகிரி என்று, • இந்தக் குறியுடன் குறிப்பிடுவார்கள். வெப்பநிலைகளை அளக்க வெவ்வேறான அளவை முறைகள் உள்ளன. அவை பாரன்ஹீ ட் (த.க. ) , சென்டிகிரேடு, ரேயம்யுர் ( Reaumur) என்பன. பாரன் ஹீட் அளவை காலநிலை பற்றிய விவரங் களைக் குறிக்கப் பயன்படுகிறது. நம் உடல் வெப்பநிலையை அளக்க மருத்துவர் பயன்படுத்தும் வெப்பமானியும் இந்த அளவை முறையையே கொண்டிருக்கிறது. சென்டிகிரேடு அளவை எளிமையானதும் சுலபமானதும் ஆகும். விஞ்ஞானிகள் இதையே பின்பற்றுகின்றனர். ரேயம்யுர் அளவை இப்போது வழக்கில் இல்லை.

இந்த மூன்று அளவை முறைகளிலும் நீரின் உறைநிலையும் அதன் கொதிநிலையும் கீழுள்ளவாறு குறிக்கப்பட்டுள்ளன.

அளவை நீரின் உறைநிலை நீரின் கொதிநிலை
பாரன்ஹீட் 32 212
சென்டிகிரேடு 0 100
ரேயம்யுர் 0 80