பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 9.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

வெப்ப ரத்தப் பிராணிகள் - வெயில்


இன்று ரசாயனப் பரிசோதனைகளுக் கும், தொழிற்சாலைகளில் பலவகையான வேலைகளுக்கும் பலவகை வெப்பமானிகள் இன்றியமையாதனவாக விளங்குகின்றன. மிகப் பக்குவமாகச் செய்யவேண்டிய ரொட்டி, பிஸ்கோத்து போன்ற உணவுப் பொருள்களின் தயாரிப்பிலும் வெப்ப மானிகள் உதவுகின்றன. பார்க்க : வெப்பநிலை.

வெப்ப ரத்தப் பிராணிகள் : நம் உடல் வெப்பநிலை எந்தச் சூழ்நிலையிலும் 98.4 பா. ஆக இருக்கிறது. சுற்றுப்புற வெப்பநிலைக்கு ஏற்ப மாறாமல், உடல் வெப்பநிலையை எப்போதும் ஒரே நிலையில் வைத்துக்கொள்ளும் சக்தி சில பிராணி களுக்கும் உண்டு. இப் பிராணிகள் 'வெப்ப ரத்தப் பிராணிகள்' எனப்படும். வேறு சில பிராணிகளின் உடல் வெப்ப நிலை, சுற்றுப்புற வெப்பநிலைக்குத் தக்க வாறு மாறிக்கொண்டிருக்கும். இவை 'குளிர் ரத்தப் பிராணிகள்' ஆகும். பார்க்க : குளிர் ரத்தப் பிராணிகளும், வெப்ப ரத்தப் பிராணிகளும்.

வெயில் : மிகுந்த வெப்பம் உடையது சூரியன். அதன் மேற்பரப்பு 12,000° பா.க்கும் அதிகமான வெப்ப நிலை கொண்டது. அது ஒளியைக் கதிர் வீச்சு (Radiation) மூலம் பரப்புகின்ற து. இவ்வாறு சூரியனிடமிருந்து கதிர்வீச்சு மூலம் வெளிவரும் ஒளியையே வெயில் என்கிறோம்.

நாம் வாழும் பூமியும், மற்றும் புதன், வெள்ளி (சுக்கிரன்), செவ்வாய், வியாழன் (குரு), சனி, யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ என்பனவும் சூரிய மண்டலத் தைச் சேர்ந்தவை. இம் மண்டலத்தில் சூரியன் மட்டுமே தானாக ஒளிரும் தன்மையுடையது. மற்றக் கோளங்கள் யாவும் சூரியனிடமிருந்தே ஒளியைப் (வெயிலை) பெற்றுக்கொள்கின்றன. பூமியில் வாழும் உயிர்கள் எல்லா வற்றின் உயிர் வாழ்க்கைக்கும் வெயில் இன்றியமையாதது. பசுந் தாவரங்கள் ஒளிச்சேர்க்கை (த.க.) மூலம் வெயிலை ரசாயன சக்தியாக மாற்றி, உணவு தயாரித்துக்கொள்கின்றன. இவ்விதம் தாவரங்களில் சேமித்து வைக்கப்படும் ரசாயன சக்தியிலிருந்து, மற்ற உயிர்கள் அனைத்தும் தங்கள் உணவைப் பெறு கின்றன. பண்டைக் காலத்தில் தாவ ரங்களில் சேமித்து வைக்கப்பட்ட வெயி லின் சக்திதான், நிலக்கரி, எண்ணெய், வாயு முதலிய எரிபொருள்களாக இன்று கிடைக்கின்றன. கடல்நீரை


பூமத்திய ரேகையிலிருந்து துருவங்களை நோக்கிச்
செல்லச் செல்ல வெயிலின் அடர்வு குறையும்

வெயில் ஆவியாக மாற்றி மேகமாக்கு கிறது. மேகம், நீரை மழையாகப் பொழிகிறது. மழைநீர், அருவியாக விழும்பொழுது எந்திரங்களை இயக்கி மின் சக்தியைத் தருகிறது. காற்றுக்குச் சக்தியளிப்பதும் வெயிலேயாகும். இவ் வாறு, நம்முடைய வேலைகளுக்குத் தேவையான சக்தி முழுவதற்கும் வெயிலே அடிப்படையாக உள்ளது.

பூமியின் மீது பூமத்தியரேகைப் பகுதியில் சூரியனின் கதிர் செங்குத்தாக விழுகிறது. அதனால், அங்கு வெயிலின் அடர்வு ( Intensity) அதிகம். பூமத்திய ரேகையிலிருந்து துருவங்களை நோக்கிச் செல்லச் செல்ல, சூரியனுடைய கதிர்கள் பூமியின் மீது சாய்வாக விழும். அதனால், துருவங்களை நெருங்க நெருங்க வெயிலின் அடர்வு குறையும்.

வெயிலால் தாவரங்களிடமும், விலங்கு களிடமும், மனிதர்களிடமும் பலவகை விளைவுகள் உண்டாகின்றன. வெயில் படும் பொருள்கள் சூடேறுகின்றன அல்லவா? இதற்கு வெயிலிலுள்ள அகச் சிவப்புக் கதிர்களே (த.க.) காரணம். வெயிலில் புற ஊதாக்கதிர்களும் (த.க.) நிரம்பியிருக்கின்றன. இக்கதிர்கள் பெரு மளவில் தாக்கினால் நம் உடலுக்குத் தீங்கு உண்டாகும். கதிர்களின் பெரும் பகுதியை பூமியைச் சுற்றியுள்ள வாயு மண்டலம் உறிஞ்சிக்கொள்வதால், நமக்குத் தீங்கு நேராதவாறு பாதுகாப்பு ஏற்படுகிறது. எனினும், வெப்ப நாடு களில் வெயிலில் வேலை செய்பவர்களின் நிறம் மஞ்சள் அல்லது கறுப்பு நிறமாக மாறிவிடுகின்றது. இமயமலைகளிலும், ஆல்ப்ஸ் மலைகளிலும் தென் சரிவுகளில் மட்டுமே வெயில் விழும். ஆதலால், அப் பகுதிகளில் மக்கள் விரும்பி வாழ்கி