பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 9.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

90 பழங்களைச் சேகரித்து ஊறவைத்து, சதைப்பற்றை நீக்கி விதைகளைப் பிரிப் பார்கள். பிறகு விதைகளை நெரித்து, உள்ளிருக்கும் பருப்பை எடுத்து, செக்கி லிட்டு ஆட்டி, எண்ணெய் எடுப்பார்கள். எண்ணெய் மஞ்சள் நிறத்துடன், மிகக் கசப்பாக இருக்கும்; அருவருப்பான நாற்ற எண்ணெய் பெரும்பாலும் முடையது. விளக்கு எரிப்பதற்கே பயன்படுகிறது. இதில் விளக்கு மிகப் பிரகாசமாக எரியும். இதை மருந்தாகவும், தேய்த்துக் குளிக்கும் எண்ணெயாகவும் பயன்படுத்துவது சுத்தப்படுத்தி சில பற் உண்டு. எண்ணெய் எண்ணெயைச் சோப்பும் தயாரிக்கிறார்கள். பசைகளிலும் இது சேர்க்கப்படுகிறது. எடுத்த பின் எஞ்சும் புண்ணாக்கு வயலுக்கு நல்ல உரமாகும். வேப்ப மரம் சுமார் 80 ஆண்டுகள் வரை வாழும். இதன் மரம் வீடு கட்டவும் பலகைகளாக அறுத்து மரச் சாமான்கள் செய்யவும் பயன்படுகிறது. வேர் : மரம், செடி, கொடி முதலிய தாவரங்களுக்குப் பொதுவாக இரு பகுதி கள் உண்டு. ஒன்று, தரை க் கு மேல் வளரும் அடிமரம், கிளைகள், தண்டு முத லியவை; மற்றொன்று, தரைக்குக் கீழே செல்லும் வேர். வேர்தான் தாவரங்களை நிலத்தில் ஊன்றி நிலையாக நிற்கச் செய் கிறது; நிலத்தினுள் உள்ள நீரையும் அதில் கரைந்துள்ள உப்புகளையும் உறிஞ் சித் தண்டு, இலை முதலிய பாகங்களுக்கு அனுப்புகிறது. அதனால் தாவரம் வளர் கிறது. வேரை வெட்டிவிட்டால் தாவரம் பட்டுப்போகும். சில விதைகளிலேயே வேர்ப் பகுதியைப் பார்க்கலாம். அவரை,புளி, வேர்க்கடலை வேர்த் துய்களும் வேர்க் கடலையும் வேர் போன்ற இரட்டை விதையிலைத் தாவ ரங்களில் இரு பருப்புகளுக்கிடையே வேரும் முளைக் குருத்தும் ஒடுங்கியிருக்கும். விதை முளைக்கும்போது முளைப்பாகம் மேல் நோக்கியும் வேர்ப்பாகம் கீழ் நோக்கியும் வளரும். முதலில் வளரும் கீழ் இந்த வேரை ஆணிவேர் என்பர். நோக்கி ஆழமாகச் செல்லும் இவ்வேரி லிருந்து எல்லாப் பக்கங்களிலும் பக்க வேர்கள் வளரும். இவற்றிலிருந்து மேலும் மேலும் பல கிளைவேர்கள் முளைத்து வளரும். நுனியிலும் நுண்ணிய சிறு வேர்கள் இருக்கும். இவை வேர்த் துய்கள் எனப்படும். இவையே மண்ணிடையே நுழைந்து அங்குள்ள நீரையும் அதில் கரைந்துள்ள உப்புகளையும் உறிஞ்சித் தண்டுப் பாகத்திற்கு அனுப்புகின்றன. கிளைவேர்களின் மிக நெல், சோளம் போன்ற ஒற்றை விதை யிலைத் தாவரங்களில் ஆணிவேர் ஆழமாகச் செல்வதில்லை. ஆணிவேரி லிருந்து பக்கவேர்கள் முளைப்பதும் இல்லை. நார்போலப் தண்டுப் பகுதியிலிருந்தே வேர்கள் வளர்கின்றன. இவற்றை நார்வேர்கள் (Fibrous roots) என்பர். பல பொதுவாக வேர்கள் தரைக்குக் கீழே இருந்தாலும் சில தாவரங்களில் தரைக்கு மேலும் வளர்வது உண்டு. ஆலமரத்தின் கிளைகளிலிருந்து இறங்கும் விழுது, அம் மரத்தின் ஒருவகை வேரேயாகும். விழுது சாதாரண பூமிக்குள் இறங்கியவுடன் வேர்போலவே மாறிவிடுகிறது. தரைக்கு மேல் உள்ள விழுது, தூண்போல நின்று கிளைகளைத் தாங்குகிறது. வெற்றிலை, தண்டி மிளகு முதலிய கொடிகளில் லிருந்து வேர் முளைக்கும். இவை படர்வதற்கு கொம்பைப் பற்றி ஏறிப் உதவியாக உள்ளன. ரணகள்ளி என்னும் செடியின் இலையைப் பறித்துத் தொங்க விட்டால் அதன் விளிம்பிலிருந்து வேர்கள் முளைக்கும். வாண்டா என்னும் தாவரத் தின் வேர்கள் பச்சை நிறமுடையவை. எனவே, அவை மாச் சத்தைத் (Starch) தயாரிக்கின்றன. ஜசீயா, ரைசோபோரா என்ற நீர்த் தாவரங்களின் வேர்கள், அந்தத் தாவரங்கள் சுவாசிக்கப் பயன் படுகின்றன. சில தாவரங்கள் உணவுப் பொருள் களைத் தம் வேரில் சேமித்து வைக் கின்றன. இதனால் வேர்கள் தடித்துக் கிழங்குகளாக உருவாகும். நாம் உண்ணும் முள்ளங்கி, வள்ளிக்கிழங்கு, பீட் கிழங்கு, காரட் முதலியன இத்தகைய வேர்களே யாகும். தன்னரி வெட்டிவேர் போன்றவை நல்ல மணமுள்ளவை. சில வேர்கள் மருந்தாகப் பயன்படுகின்றன.