பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 9.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேளாண்மை நெல் வயல் வேளாண்மை : மக்களுக்கும் கால் நடைகளுக்கும் தேவைப்படும் உணவுப் பொருள்களைப் பெறப் பயிர்களைச் சாகுபடி செய்வது வேளாண்மை ஆகும். உழவுத் தொழில், கால்நடை வளர்ப்பு, பால் பண்ணைத் தொழில், கோழி வளர்ப்பு,பழச் சாகுபடி முதலிய பல நடவடிக்கைகளும் வேளாண்மையில் அடங்கும். மனிதன் 91 கியது. நாளடைவில் காட்டுமாடுகளைப் பிடித்துப் பழக்கக் கற்றுக்கொண்டனர். வளைந்த மரக்கொம்புகளால் கலப்பைகள் செய்து, மாடுகளால் நிலத்தை உழுதனர். கால்நடைகள் மலசலங்கழித்த இடங் களில் தாவரங்கள் செழிப்பாக வளர் வதைக் கண்டனர். இதனால், மாட்டுச் சாணத்தைச் சேகரித்துப் பயிர்களுக்கு எருவாக இடலாயினர். இவ்வாறு பயிர் களுக்கு உரம் இடும் முறை தோன்றியது. தானியப் பயிர்களுடன் தோன்றிய மற்றப் புல்லினங்களைப் பிடுங்கியபொழுது தானியப் பயிர்கள் வளமடைந்தன. இதிலிருந்து களைகளை (த.க.) நீக்கும் பழக்கம் உண்டாயிற்று. உற் முதலில் உணவுப்பொருள்களை பத்தி செய்யவே வேளாண்மை தொடங் கப்பட்டது. தேவைக்கு அதிகமாக உணவுப்பொருள்களை உற்பத்தி செய்யத் தெரிந்துகொண்ட பின், பருத்தி, புகை யிலை. எண்ணெய்வித்துகள், ஏலம், கிராம்பு, மிளகு முதலிய நறுமணப் பொருள்கள் போன்ற வாணிகப் பயிர் செய்ய சாகுபடி மனிதன் கற்றுக்கொண்டான். ஆடு, மாடு, பன்றி, கழுதை, முதலிய கால்நடைகளை அவன் பழக்கி வளர்க்கலானான். அவற்றின் மூலம் பால், இறைச்சி, தோல் முதலியவற்றைப் பெற்றான். களையும் கற்றுக்கொண்ட தொழில் களுள் மிகத் தொன்மையானது வேளாண்மை ஆகும். விலங்குகளைப் போலவே, ஆதிமனிதனும் இயற்கையாக உற்பத்தியான காய், கனி, கிழங்கு முதலியவற்றை உண்டுவந்தான். விலங்கு களை வேட்டையாடியும் மீன் பிடித்தும், அவற்றின் இறைச்சியை உண்டான். மற்றவர்களுடன் சேர்ந்து குகைகளிலும், பாறைக்குடைவுகளிலும் சிறுசிறு கூட்டங் கற்றுக்கொண்டான். களாக வாழக் இந்தக் கூட்டத்தினர் ஒரே இடத்தில் உணவுக்காக நிலையாகத் தங்காமல் நாடோடிகளாகத் திரிந்தனர். கண்டனர். தாம் வசித்த இடங்களில் விழுந்த விதைகள் முளைத்துப் புதிய பயிர் அவர்கள் உண்டாவதை விதையிலிருந்து தாவரங்களை முளைக்கச் செய்யலாம் என்பதை அதிலிருந்து அறிந்த னர். பின்னர் தானியங்களை விதைத்துப் பயிர்களை உற்பத்தி செய்யத் தொடங் கினர். இவ்வாறு, அவர்கள் ஓரிடத்தி லேயே தங்களுக்குத் தேவையான உணவை நிச்சயமாகப் பெற முடிந்தது. சிறுசிய கட்டாந்தரையைவிடப் பிராணிகளின் குளம்பு பட்டு நெகிழ்ந் திருக்கும் இடங்களில் தானியங்கள் நன்கு முளைத்துப் பயிராயின. அதனால், விளைநிலங்களைக் குச்சியால் கிளறி, விதை களை விதைத்தனர். நாளடைவில், கவட் டையான மரக்கிளைகளைக் கூர்மையாக்கி, இவற்றை நிலத்தில் இழுத்து, நிலத்தைக் கிளறினர். இவ்வாறு உழுதல் தொடங் உலகில் மக்கள்தொகை பெருகப் பெருக, உணவுத் தேவை அதிகமாகியது. நகரங் களில் பல்வேறு தொழில்கள் தோன்றிய தால், கிராமங்களில் வேளாண்மையில் ஈடுபடுவோர் தொகை குறைந்தது. இக்காரணங்களால், வேளாண்மை வேலை களைத் தீவிரமாக்கப் புதிய கருவி களும் எந்திரங்களும் கண்டுபிடிக்கப் பட்டன. விமானத்தின் மூலம் பயிர்களுக்குப் பூச்சிமருந்து தெளிக்கிறார்கள்