பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

கேள்வியும்

யில் ஜலம் இறுகி ஐஸ் ஆகிவிடும். அதைப் பூஜ்யம் என்று குறித்து, ஜலம் கொதிக்கும் எல்லையை 100 என்று கூறி, இரண்டுக்குமுள்ள தூரத்தை 100 டிகிரிகளாகப் பிரிப்பார்கள்.

இப்பொழுது ஐஸ் ஆன பின்பும் உஷ்ணத்தைக் கிரகித்துக்கொண்டே போனால் ஐஸின் எல்லையிலிருந்து 273 டிகிரிகள் கீழே போய்விட்டால் அதன்பின் கிரகிக்க யாதொரு உஷ்ணமும் கிடையாது என்று அறிஞர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். உஷ்ணமாகிய அணு அசைவு சிறிதுமில்லாத இந்த எல்லையைப் 'பரிபூரண பூஜ்யம்' என்று கூறுகிறார்கள்.

128 அப்பா! நெருப்பருகே நின்றால் சூடாய்த் தெரிகிறதே; அதற்குக் காரணம் என்ன? தம்பி! எது எரிந்தாலும் அதிலுள்ள கரியும் காற்றிலுள்ள பிராணவாயுவும் சேர்வதால்தான் நெருப்பு உண்டாகிறது. அப்பொழுது அவற்றிலுள்ள சக்தி உஷ்ண சக்தியாக வெளிப்படுகிறது. அந்தச் சக்தி நம்மிடம் இரண்டு விதத்தில் வந்து சேர்கிறது. நெருப்பிலுள்ள உஷ்ணம் அருகிலுள்ள காற்றுக்குப் பரவுகிறது. அந்தக் காற்று நம்முடைய உடம்பில் பட்டதும் நமக்கு சூடு தெரிகிறது. அதோடு நெருப்பிலுள்ள உஷ்ணம் ஒளியைப்போல ஈதர் என்னும் வஸ்துவில் அலைகளை உண்டாக்கி அவை மூலமாகவும் நமக்கு வந்து எட்டுகிறது.

129 அப்பா வெயில் பட்டால் சூடாய் இருக்கிறதே, அதற்குக் காரணம் என்ன?

தம்பி! வெயில் என்பது என்ன? அது சூரியனுடைய ஒளியும் உஷ்ணமும்தான். சூரியன் கோடிக்கணக்கான