பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிலும்

87

மைல் தூரத்தில்தான் இருக்கிறது. ஆனால் அது தகதக வென்று எரிந்து கொண்டிருக்கும் ஒரு பிரமாண்டமான கோளமாகும். அதிலிருந்து உஷ்ணம் ஈதர் மூலமாகவும் காற்று மூலமாகவும் நமக்கு வந்து சேருகிறது. சூரியனுடைய உஷ்ணம் பதினாயிரம் டிகிரியிருப்பதால் எந்த வஸ்துவின்மீது வெயில் பட்டாலும், அந்த வஸ்து சூடாய் விடுகிறது;

130 அப்பா சட்டை அணிந்தால் சரீரம் உஷ்ணமாய்த் தோன்றுகிறதே. அதற்குக் காரணம் என்ன?

தம்பி சட்டைத் துணியை நன்றாய்க் கவனித்துப்பார். அதில் ஏராளமாக சிறு சிறு துவாரங்கள் இருக்கின்றன. அவைகளில் காற்று நிறைந்து நிற்கிறது. காற்றுக்கு உஷ்ணத்தைக் கிரகித்து வெளியே கொண்டு போகும் குணம் குறைவு. அதனால் உடம்பிலுள்ள உஷ்ணம் வெளியே போகாதபடி தடுக்கப்பட்டு விடுகிறது. அதனால் தான் சட்டை அணிந்தால் சரீரம் உஷ்ணமாகத் தோன்றுகிறது.

131 அப்பா வேனிற்காலத்தில் தந்திக் கம்பிகள் தொய்வாகத் தோன்றுகின்றனவே, அதற்குக் காரணம் என்ன?

தம்பி! தந்திக்கம்பிகளை அமைக்கும்பொழுது தூணுக்குத்தூண் இறுக்கமாகத்தான் கட்டி வைக்கிறார்கள். ஆனால், வேனிற்காலத்தில் அதிக உஷ்ணமாயிருக்கிறது. அல்லவா? அதனால் அந்தத் தந்திக் கம்பிகள் நீண்டு விடுகின்றன. அதனால்தான் அவை தொய்வாகத் தோன்றுகின்றன. அதன்பின் குளிர்காலத்தில் உஷ்ணம் குறைந்து போகும்; தந்திக் கம்பிகள் சுருங்கிவிடும்; அப்பொழுது தொய்வாகத்தோன்றா. இறுக்கமாகக் கட்டியதாகவே தோன்றும்.