பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிலும்

93

உஷ்ணம் அவ்வளவும் அதற்குக் கிடைப்பதற்காகத்தான் நாம் பால் பாத்திரத்தை விரைவாகச் சுழற்றுகிறோம்.

ஆயினும் பாலில் கொஞ்சம் உஷ்ணம் தங்கி பாலை ஐஸ் க்ரீம் ஆக விடாமல் செய்துகொண்டிருக்கும். அந்த உஷ்ணத்தையும் கிரகிப்ப தற்காகவே உப்பு சேர்க்கப்படுகிறது அது கரையும்பொழுது உஷ்ணம் முழுவதும் கிரகிக்கப்பட்டு போகிறது; பால் இறுகி ஐஸ்க்ரீம் ஆய் விடுகிறது. ஆகவே பாலுக்கு அதிகக் ஐஸ்க்ரீம் கருவி குளிர்ச்சி உண்டாக்குவதற்காகத்தான் ஐஸோடு உப்பைச் சேர்க்கிறார்கள்.

140 அப்பா! கிளாஸ் டம்ளரில் உள்ள ஜலத்தில் ஐஸ் போட்டால் அந்த டம்ளரின் வெளிப்புறம் ஜலம் கசிகிறதே, அதற்குக் காரணம் என்ன?

தம்பி! மண் பானையில் கசிவதுபோல க்ளாஸ் டம்ளரிலும் கசிகிறது என்று எண்ணுகிறாயா? ஆனால் அப்படியில்லை, தம்பி! மண்பானையில் தான் ஜலம் கசியும். அதில் தான் கண்ணுக்குத் தெரியாத துவாரங்கள் உள. அவற்றின் வழியாக ஜலம் வெளியே கசிந்து வருகிறது. அப்படி கசிவதும் புது மண் பானையில் தான். பழைய மண் பானையிலும் அடுப்பில வைத்த மண் பானையிலும் கசியாது. புது மண் பானையில் கசிந்துகொண்டே யிருப்பதால்,