பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

கேள்வியும்

ஜலத்திலுள்ள அழுக்குகள் நாளடைவில் அந்தச் சிறு துவாரங்களை அடைத்துவிடும். அதுபோல் அடுப்பில் வைத்து உபயோகிக்கும் மண் பானையில் புகையானது அந்தச் சிறு துவாரங்களை அடைத்துவிடுகிறது. சில மண் பானைகளின் மேற்புறத்தில் வழவழப்பாக பூசி வைப்பதுண்டு. அப்படிப் பூசுவதாலும் துவாரங்கள் அடைபட்டுப் போகும். அந்த மண் பானைகளிலும் ஜலம் கசியாது. க்ளாஸ் டம்ளரில் சிறு துவாரங்கள் கிடையா. அதில் ஜலம் கசிந்து வரமுடியாது. காற்றில் எங்கும் நீராவி இருந்து கொண்டிருக்கிறது. அந்த ஐஸ் ஜலமுள்ள க்ளாஸ் தன்னருகிலுள்ள நீராவியைக் குளிரும்படி செய்கிறது. அவ்விதம் குளிரும் நீராவி சிறு நீர்த் துளிகளாக அந்த கிளாஸின் மேற்புறத்தில் தங்குகிறது. அதைப் பார்த்துத் தான் க்ளாஸில் ஜலம் கசிவதாகக் கூறுகிறாய்.

141 அப்பா! விளக்கு எரிவதற்குத் திரி போதாதா? எண்ணெய் எதற்காக?

தம்பி ! திரிமட்டும் இருந்தால் வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் திரி நிமிஷ நேரத்தில் எரிந்து சாம்பலாய் விடும். அதனால் திரியைத் தூண்டிக்கொண்டே இருக்க வேண்டியதுதான். அப்படிச் செய்தாலும் வெளிச்சம் பிரகாசமாயிராது, அதோடு திரி முழுவதும் ஐந்தாறு நிமிஷத்தில் எரிந்து தீர்ந்து போகும். வெளிச்சமிராது, இருட்டாய்விடும்.

ஆனால் விளக்கில் எண்ணெய் இருந்தால், எண்ணெய் திரியில் ஏறுகிறது. நாம் தீக்குச்சியைக் கிழித்து வைத்ததும் திரி எரிகிறது. அப்பொழுது அந்த உஷ்ணத்தால் திரியின் நுனியிலுள்ள எண்ணெய் ஆவியாக மாறி எரிய ஆரம்பிக்கிறது. இவ்விதமாக எண்ணெய் திரியில் ஏறி வந்துகொண்டும் ஆவியாக மாறி எரிந்து கொண்டும்