பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிலும்

97

தம்பி! விறகு எரிவதென்றால் விறகிலுள்ள கரியானது காற்றிலுள்ள பிராணவாயுவோடு சேர்ந்து உஷ்ணம் உண்டாக்குவது என்பதுதான் பொருள். அதனால் விறகு எரிய வேண்டுமானால் பிராண வாயு வேண்டும். சில சமயம் அடுப்புக்குள் போதுமான காற்று போகாமல் இருந்து விடும். சில சமயம் நெருப்பின்மீது நீறு படிந்து காற்றை, நெருப்புக்குக் கிடைக்காமல் செய்துவிடும். அந்தச் சமயங்களில் விறகு எரியாது. அப்பொழுது ஊதினால் சாம்பல் விலகி விடுகிறது. போதுமான காற்று கிடைத்து விடுகிறது. அதனால் நெருப்பு நன்றாக எரிய ஆரம்பித்து விடுகிறது.

விளக்கில் திரி எரியும்பொழுது அதுபோல் திரியின் நுனியில் நீறு கீழே விழாமல் தங்கி விடுவதுண்டு. அந்த நீறு கூடிவிட்டால் விளக்கு அனைத்து போகும். அதற்காகத்தான் வெளிச்சம் மங்குவதைப் பார்த்து அந்த நீற்றைத் தட்டி விடுவார்கள். அப்படித் தட்டிய பின் திரி நன்றாக எரியும். அதையும் நீ பார்த்திருப்பாய். ஆனால் திரியிலுண்டாகும் நீற்றை விறகில் உண்டாகும் நீற்றைப்போல ஊதி விலக்க முடியாது. விறகு நெருப்பு பெருநெருப்பு, அது ஊதுவதைத் தாங்கும். விளக்கு நெருப்பு சிறுநெருப்பு, தாங்காது. விளக்கில் எண்ணெய் ஆவியாக மாறித்தான் எரிகிறது. அதனால் நாம் ஊதினால் அந்த ஆவி விலகிவிடுகிறது. அதோடு குளிர்ந்த காற்று கிடைத்தாலும் எரியாமல் அணைந்துபோகிறது.

146 அப்பா! விளக்கு எரியும்போது சுடரின் உட்புறம் கறுப்பாகவும் வெளிப்புறம் மஞ்சளாகவும் தோன்றுகிறதே, அதற்குக் காரணம் என்ன?

தம்பி! பெரிய நகரங்களில் எரியும் விளக்குகள் மின்சார சக்தியால் எரியும். அந்த விளக்குகளில் சுடர் நீ கூறுகிற

கு—7