பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110

கேள்வியும்

இருந்து விடுகிறது. அதனால்தான் காப்பியும் ஆறாமலிருக்கிறது. ஐஸும் உருகாமல் இருக்கிறது.

167 அப்பா! ஸ்டவ் ஏற்ற ஸ்பிரிட்ஸ் உபயோகிக்கிறார்களே அது அதிகக் குளிராக இருக்கிறதே, அதற்குக் காரணம் என்ன?

தம்பி! ஜலம் ஆவியாக மாறுவதற்கு அதிக உஷ்ணம் தேவை. அடுப்பில் வைத்துக் கொதித்தால் தான் ஆவி உண்டாகும். ஆனால் ஸ்பிரிட்ஸ் ஆவியாக மாறுவதற்கு சாதாரணமாகக் காற்றிலுள்ள உஷ்ணமே போதும். ஸ்பிரிட்ஸ் போத்தலைத் திறந்தால் உடனேயே அது ஆவியாக மாறிப் போகும், அதனால் அதைத் தொட்டால் அது ஆவியாக மாறுவதற்கு நம்முடைய கையிலுள்ள உஷ்ணத்தைக் கிரகித்துக் கொள்கிறது; நம்முடைய கை குளிர்ந்து விடுகிறது. அதனால்தான் ஸ்பிரிட்ஸ் குளிர்ந்திருப்பதாகக் கூறுகிறோம்.

168 அப்பா! போத்தலில் கார்க் வராவிட்டால் அதன் கழுத்தைச் சுட வைக்கிறார்களே, அதற்குக் காரணம் என்ன?

தம்பி! அப்படிச் சுட வைத்தால் அது உஷ்ணத்தால் விரிவடைகிறது. ஆனால் கொஞ்சமாகவே சுட வைப்பதால் அந்த உஷ்ணம் கார்க்கைப் போய் எட்டுவதில்லை. அப்படி எட்டினாலும் கண்ணாடியைவிடக் கார்க் குறைவாகவே உஷ்ணத்தைக் கிரகிக்கும் தன்மை உடையது. அதனால் கண்ணாடி விரியும்பொழுது கார்க் விரியாமல் இருந்துவிடுகிறது. ஆதலால் போத்தலின் வாய் மட்டும் பெரியதாய் விடுகிறது. அப்பொழுது நாம் கார்க்கைச் சுலபமாக எடுத்து விடலாம்.

169 அப்பா! மண்பானையில் வைத்தால் ஜலம் குளிர்ந்து விடுகிறதே அதற்குக் காரணம் என்ன?

தம்பி! மண்பானை பார்ப்பதற்குக் கட்டியாக தோன்றினாலும் அதில் கண்ணுக்குத் தெரியாத துவாரங்கள்