பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிலும்

115

தீப்பிடித்துக் காடு முழுவதும் எரிவதுண்டு என்று கேட்டிருப்பாய். குதிரை ஓடும்பொழுது லாடம் ரோட்டிலுள்ள கற்களில் உராய்ந்து தீப்பொறி பறப்பதைப் பார்த்திருப்பாய். தீக்குச்சி செய்யுமுன் கற்களை ஒன்றோடொன்று தேய்த்துத்தான் நெருப்பு உண்டாக்கிக் கொண்டார்கள் என்றும் கேட்டிருப்பாய். அதெல்லாம் வேண்டாம்; கடுதாசியில் ரப்பர் கொண்டு அழிக்கிறாயே, அப்பொழுது கூட உஷ்ணம் உண்டாகவே செய்கிறது. உஷ்ணம் அளக்கும் கருவியை வைத்துப் பார்த்தால் தெரியும். ஆனால் வஸ்துக்கள் உராய்ந்தால் உஷ்ணம் உண்டாகக் காரணம் என்ன? உராய்வதற்காக உபயோகிக்கப்படும் சக்தி உஷண சக்தியாக மாறிவிடுகிறது. அவ்வளவுதான்.

ஊசி கூர்மையாக இருப்பதால் நன்றாக உரைக்க முடியும். அதோடு அது இரும்பு; உலோசங்களில் சீக்கிரமாக உஷ்ணம் ஏறும். உஷ்ணத்தைக் கையைவிடக் கன்னம் சீக்கிரத்தில் உணரும் அதனால்தான் ஊசியும் அதைத் தேய்ப்பதால் உண்டாகும் உஷ்ணமும் சிறிதாய் இருந்தாலும், நாம் உணரக்கூடியதாக இருக்கிறது.

177 அப்பா! தீப்பற்ற வைக்காமல் தீப்பற்றக்கூடிய வஸ்து உண்டா?

ஆமாம் உண்டு. அநேக ஊர்ப்புறங்களிலும் கடற்புறங்களிலும் காடுகளிலும் சேற்று நிலங்கள் இருக்கும். அவற்றில் ஒருவித வாயு குமிழியிட்டுக் கொண்டு மேலே வரும. அந்தக் குமிழிகள் தானாகவே நெருப்புப் பற்றி எரியும். அந்த வெளிச்கத்தை இரவில் கண்டு அநேகர் கொள்ளி வாய்ப் பிசாசு என்று பயப்படுவார்கள்.

பாஸ்பரஸ் என்று ஒரு வஸ்து இருக்கிறது. அதுவும் தானாகவே எரியும். அதனால் அதைக் கையில் எடுக்கமாட்டார்கள். காற்றுப் படும்படியும் வைத்திருக்க மாட்டார்கள். ஜலத்துக்குள்ளே போட்டிருப்பார்கள்.