பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிலும்

121


மூலம் நாம் பார்க்க முடியவில்லை. கண்ணாடியின் அணுக்கள் விலகி விலகி இருப்பதால் அதன் மூலம் பார்க்க முடிகிறது.

ஆயினும் சமீபகாலத்தில் எக்ஸ்ரே என்னும் ஒளிக் கிரணங்கள் இருப்பதாகக் கண்டு பிடித்திருக்கிறார்கள். அந்தக் கிரணங்கள் அதிக மெல்லியதாக இருப்பதால் கட்டைகளிலுள்ள அணுக்களின் இடையிலுங்கூட நுழைந்து செல்லக்கூடியவைகளாக இருக்கின்றன.

186 அப்பா! நம்முடைய முகம் ஜன்னல் கண்ணாடியில் தெரியவில்லை. நிலைக் கண்ணாடியில் தெரிகிறது. அதற்குக் காரணம் என்ன?

தம்பி! நம் முகத்திலிருந்து போகும் ஒளியானது எந்த வஸ்துவில் நுழையாமலும் சிதறிப் போகாமலும் அப்படியே

திரும்பி நம் கண்களுக்கு வந்து சேருகிறதோ, அந்த வஸ்துவில்தான் நம் முகம் தெரியும். நாம் ஜன்னல் கண்ணாடியின் எதிரே நின்றால், நம் முகத்திலிருந்து போகும் ஒளி அதன் மீது பட்டு நமக்குத் திரும்பி வராமல் அதன் வழியாக சென்று விடுகிறது. அதனால்தான் அதில் நம் முகம் தெரிவதில்லை. அதற்குப் பதிலாக அந்தக் கண்ணாடிக்கு அப்பாலுள்ள வஸ்துக்களிலிருந்து ஒளியானது நம் கண்ணுக்கு வந்து சேர்கிறது. அதனால் ஜன்னல் கண்ணாடி மூலம் வெளியேயுள்ள வஸ்துக்கள் நமக்குத் தெரிகின்றன.

ஆனால் நிலைக் கண்ணாடியின் பின் புறத்தில் பலகை இருக்கிறது. அந்தப் பலகை நம் முகத்திலிருந்து போகும்