பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124

கேள்வியும்

ஒளிதரும். ஆனால் நாம் படிக்கும் புத்தகம் தானாக ஒளி தராது. அதன்மீது படும் விளக்கு ஒளியைத்தான் தரும். தானாக ஒளிதரும் வஸ்துக்கள் எந்த நிற ஒளியை அனுப்புகின்றனவோ, அந்த நிறமாகத் தெரியும். இரும்பு நன்றாகக் காய்ந்தால் சிவப்பு நிற ஒளி அனுப்பும். சிவப்பாகத் தெரியும். இன்னும் அதிகமாகக் காய்ந்தால் வெண்ணிற ஒளி அனுப்பும் வெண்மையாகத் தோன்றும்.

தானாக ஒளி தராத வஸ்துக்கள் நிறமாகத் தெரிவது எப்படி? அவற்றின்மீது எந்த நிறமான ஒளி படுகிறதோ, அவை அந்த நிறமாகத் தோன்றும் என்று கூற முடியாது. சூரியனுடைய ஒளி வெள்ளையாக இருக்கிறது. இது இரண்டு வஸ்திரங்களின்மீது படுகிறது. ஆனால் ஒரு வஸ்திரம் வெள்ளையாகவும் ஒரு வஸ்திரம் சிவப்பாகவும் தெரிகிறது.அதற்குக் காரணம் என்ன?

சூரிய ஒளி வெள்ளைதான், ஆனால் அதில் ஏழு நிறங்கள் உள. அவையெல்லாம் சேர்ந்துதான் வெள்ளை நிறமாகத் தெரிகிறது. அந்த வெள்ளை ஒளி இரண்டு வஸ்திரங்களின்மீது படுகிறது. ஒரு வஸ்திரம் தன் மீது படும் ஒளியை அப்படியே நம் கண்களுக்கு அனுப்பி விடுகிறது. அதனால் அந்த வஸ்திரம் நமக்கு வெள்ளையாகத் தெரிகிறது. ஆனால் இரண்டாவது வஸ்திரம் அந்த வெள்ளை ஒளியிலுள்ள சிவப்புக் கிரணங்களை மட்டுமே நமக்கு அனுப்புகிறது. இதர கிரணங்களை அது சாப்பிட்டு விடுகிறது. அதனால் அந்த வஸ்திரம் சிவப்பாகத் தெரிகிறது. இதுபோல்தான் மற்ற நிறஙகளின் விஷயம். எந்த வஸ்து வேனும் வெள்ளை ஒளி முழுவதையும் சாப்பிட்டு விடுமானால் நம் கண்களுக்கு அதிலிருந்து ஒளி வந்து சேராது. அதனால் அந்த வஸ்துவை நாம் கறுப்பு என்று கூறுகிறோம். ஆனால் வஸ்துக்கள் தங்கள்மீது படும் ஒளியை அப்படியே திருப்பி அனுப்பாமல் இப்படிச் செய்வதற்குக் காரணம்