பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126

கேள்வியும்

சிவப்பை நீக்கினால் பச்சை தோன்றும். நீலத்தை நீக்கினால் மஞ்சள் தோன்றும். அதனால் அந்த இரண்டு ஜதைகளும் ஒன்றை ஒன்று பூர்த்தி செய்யும் நிறங்கள் என்று கூறுவார்கள்.

நாம் சிவப்பைக் கூர்மையாகப் பார்த்தால் நம் கண்கள் சிவப்பைப் பார்க்க முடியாதபடி களைத்துப் போகின்றன. அதனால் வெள்ளையைப் பார்த்தால் அதிலுள்ள சிவப்பு மறைந்து பச்சை மட்டுமே கண்ணுக்குத் தெரிகிறது. அதே போல் நீலத்தைப் பார்த்துவிட்டு வெள்ளையைப் பார்த்தால் மஞ்சளாகத் தெரிகிறது. வெள்ளைக் கடுதாசியிலுள்ள ஒரு கறுப்புப் புள்ளியைப் பார்த்துவிட்டு வேறு வெள்ளைக் கடுதாசியைப் பார்த்தால், கறுப்புக் கடுதாசியில் வெள்ளைப் புள்ளி இருப்பதுபோலத் தோன்றும்.

191 அப்பா! மலர்கள் நிறம் மங்கவில்லை, வஸ்திரங்கள் நிறம் மங்குகின்றன, அதற்குக் காரணம் என்ன?


தம்பி! வஸ்திரங்களை வெள்ளை நூலால் செய்து சாயம் தோய்க்கிறார்கள், அல்லது சாயந்தோய்த்த நூலால் நெய்கிறார்கள். அவை சிவப்புச் சாயம் தோய்த்திருந்தால் சிவப்பாகத் தெரியும். அதாவது அந்தச் சாய வஸ்து சிவப்பு ஒளிக்கதிர்களை நம்மிடம் அனுப்பி வைக்கிறது. ஆனால் சூரிய ஒளியானது நாளடைவில் அத்தச் சாய வஸ்துவில் மாறுதல்கள் உண்டாக்கலாம். அதன் பயனாக அந்தச் சாய வஸ்து சிவப்புக் கதிர்களைச் சாப்பிட ஆரம்பித்து விடலாம். அப்படியானால் அந்தச் சிவப்பு வஸ்திரம் நிறம் மங்க ஆரம்பித்து விடுகிறது.

ஆனால் சூரியஒளியால் மாறுதல் அடையாத சாயங்கள் உள. அந்தச் சாயங்களில் தோய்ந்த வஸ்திரங்கள் நிறம் மங்காமலே இருக்கும். மலர்களின் நிறங்கள் அத்தகைய சாயங்களால் உண்டாகின்றன. அதனால்தான் அவை