பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பதிலும்

131

விஷயம். அப்படி உற்பத்தியாகும் மின்சார சக்தியைச் சேகரித்துத் தான் மின்சார விளக்கு, மின்சார விசிறி முதலிய பல விதங்களில் உபயோகிக்கிறார்கள்.

197 அப்பா! தந்தி அடிக்கிறார்களே, அது அடுத்த ஊர்க்கு எப்படிப் போய்ச் சேருகிறது?

தம்பி ! தந்தி அடிப்பதில் வார்த்தைகளை எழுதி அனுப்புவதுமில்லை. பேசுவதுமில்லை. சென்னையிலிருந்து மதுரைக்குத் தத்தியடிப்பதாக வைத்துக்கொள், சென்னை ஆபீஸில் மின்சார சக்தி உண்டு பண்ணும் பாட்டரி ஒன்று இருக்கிறது. அதன் ஒரு தகட்டைத் தரையோடு சேர்ததிருக்கும். அடுத்த தகட்டைத் தொடும்படியாக ஒரு சாவி வைத்திருக்கும். மதுரையில் கம்பிச் சுருளுக்குள் காந்தம் ஒன்று வைக்கப்பட்டிருக்கும். அந்தச் சுருளின் ஒரு நுனியைத் தரையோடு சேர்ந்திருக்கும். மறு நுனியையும் சென்னையிலுள்ள சாவியையும் தந்திக் கம்பியால் இணைத்திருக் கிறார்கள்.

சென்னையிலுள்ளவர் சாவியை பாட்டரித் தகட்டைத் தொடச் செய்வார். உடனே மின்சார சக்தி தந்திமுலம் சென்று காந்தத்தில் பாயும். அதனால் அருகிலுள்ள கம்பியொன்று மற்றொரு கம்பியைத் தட்டும். அப்பொழுது ஒரு சப்தம் உண்டாகும் சென்னையிலுள்ளவர் சாவியைத் தொட்ட கையை எடுத்து விட்டால். மதுரையில் தட்டிய கம்பியும் தட்டாமல் எழுந்துவிடும். அப்பொழுது மேலே யுள்ள வேறு ஒரு கம்பியைத் தட்டும். அதனால் வேறு விதமான சப்தம் உண்டாகும். இந்த சப்தங்கள் சந்கேதமான சப்தங்கள். இவற்றைப் பலவிதமாகச் சேர்த்தும் மாற்றியும், பல எழுத்துக்களை அறிந்து வார்த்தைகளை எழுதிக்கொள்வார்கள். இதைத்தான் தந்தி பேசுவது என்று கூறுகிறார்கள்.