பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140

கேள்வியும்

அந்தப் பட்டையைச் சக்கரத்தின் சுற்றளவுக்குக் கொஞ்சம் சிறிதாகவே செய்து, வைக்கோலை முறுக்கிச் சுற்றி வைக்கோலில் தீ வைப்பார்கள். அப்பொழுது இரும்புப் பட்டை உஷ்ணத்தால் அளவில் பெரிதாய் விடும். அதனால் சக்கரத்தை அதனுள் வைத்துப் பொருத்தி ஜலம் வார்ப்பார்கள். ஜலம் வார்த்ததும் இரும்புப் பட்டை சுருங்கி சக்கரத்தை இறுகிப் பிடித்துக் கொள்ளும். இந்த விதமாகத்தான் சக்கரத்துக்குப் பட்டைபோடுவார்கள்.

210 அப்பா! வண்டி குடை கவிழ்கிறதே, அதற்குக் காரணம் என்ன?

தம்பி! வண்டியில் குடை எதுவும் கிடையாது. வண்டி நேராக நிற்காமல், மாடோ குதிரையோ மாட்டும் முன் பாகம் உயர்ந்து பின் பாகம் தரையில் ஊன்றி நிற்கும் பொழுதுதான் வண்டி குடை கவிழ்ந்து விட்டதாகக் கூறுவார்கள். மாட்டு வண்டியில், நுகத்தை மாட்டின் கழுத்தின் மீது வைத்து, கழுத்தின் கீழாக ஒரு கயிறு மாட்டி நுகத்தைக் கழுத்தோடு பிணித்து வைப்பார்கள். அந்தக் கயிறு அறுந்து போனால் வண்டியின் பின்பாகம் கீழே சாய்நதுபோகும், முன் பாகம் வானத்தை நோக்கி உயர்ந்து விடும். வண்டியில் உள்ளவர்கள் பின்புறம் விழுந்து விடுவார்கள்.

அதே மாதிரி குதிரை வண்டியில் கழுத்துப் பட்டை கழன்று விட்டாலும் சரி, அந்தக் கழுத்துப் பட்டையில் வண்டியைச் சேர்த்துக் கட்டியுள்ள கயிறுகள் அறுந்து போனாலும் சரி, குதிரை வண்டியும குடை கவிழ்ந்துவிடும்.

211 அப்பா! மாடு மட்டும் வண்டியைக் கழுத்தின்மீது வைத்து இழுக்கிறது, அதற்குக் காரணம் என்ன? ஆமாம், மாடுதான் கழுத்தில் வைத்து இழுக்கிறது. குதிரை நெஞ்சில்தான் வைத்து இழுக்கிறது. அதற்கும் காரணம் கூறுகிறேன், கேள்.