பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிலும்

151


228 அப்பா! கொத்தனார் தளம் போடும்பொழுது சமமாயிருக்கிறதே, அதற்குக் காரணம் என்ன?

ஆமாம், அதேபோல் தச்சனார் கட்டில் செய்யும் பொழுது பலகையும் சமமாகவே இருக்கிறது. அப்படித் தளமும் பலகையும் சமமாயிருப்பதை அவர்கள் "நீர்மட்டம்" என்னும் சாதனத்தைக்கொண்டு அறிந்து கொள்கிறார்கள்.

ஒரு கண்ணாடிக் குழாயில் ஒரே ஒரு சிறு குமிழிக் காற்று மட்டும் இருக்கும்படி சாராயத்தை நிறைத்து அடைத்து விடுவார்கள். அந்தக் கண்ணாடிக் குழாயை ஒரு மரக்கட்டையில் பதித்து வைப்பார்கள். அதை சமதளமாய் இருப்பதில் வைத்தால் அந்தக் காற்று குமிழி குழாயின் நடுமத்தியில் கீறியிருக்கும் கோட்டுக்கு நேரே நிற்கும். அந்தக் குமிழி நிற்பதைக் கொண்டு சமதளமா இல்லையா என்று அறிந்து கொள்வார்கள். இதைத்தான் நீர்மட்டம் என்று கூறுவார்கள்.

229 அப்பா! கொத்தனார் சுவரைச் செங்குத்தாகக் கட்டுகிறாரே அதற்குக் காரணம் என்ன?

தம்பி ! ஒரு சிறு கட்டையில் ஒரு பொடிக் கயிறு கட்டி, அதன் மறு நுனியில் கனமான ஈயக் குண்டு ஒன்றைக் கட்டுவார்கள். குண்டின் மத்திக்கும் ஓரத்துக்குமுள்ள தூரமும் கட்டையில் கயிறு கட்டியுள்ள இடத்துக்கும் ஓரத்திற்குமுள்ள தூரமும் ஒன்றாக இருக்குமாறு கவனித்துக் கயிற்றைக் கட்டுவார்கள், இதைத்தான் "தூக்கு" என்று கூறுவார்கள்.

கொத்தனார் அடிக்கடி தூக்கு விட்டுச் சுவர் செங்குத்தாய் இருக்கிறதா அல்லது சாய்ந்திருக்கிறதா என்று பார்த்துக் கொண்டே சுவரைக் கட்டுவார்