பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிலும்

165

சாதாரணமாக ஒரு வஸ்து சிவப்பு என்றால் அது தன் மீது விழும் ஒளியிலுள்ள சிவப்பு நிறக் கிரணங்களைக் கிரகியாமல் நம் கண்களுக்கு அனுப்புகிறது என்பதே பொருள். அதேமாதிரி வெண்மையான வஸ்து தன்மீது விழும் ஒளியில் எதையுமே கிரகியாமல் நம் கண்களுக்கு அனுப்பிவிடுகிறது. ஆகவே வஸ்துக்களின் நிறம் அவற்றின்மீது விழுந்து வரும் ஒளியையே பொறுத்ததாகும். ஒளியில்லா விட்டால் ஒன்றுமே தெரியாது. ஆனால் காய வைத்துச் சிவந்த இரும்பும் வெண்மையான இரும்பும் இருட்டிலும் தெரியும். அவற்றின் நிறத்துக்கு வேறு ஒளி காரணமில்லை. அவைகளே அந்த நிறக் கதிர்களை உண்டாக்குகின்றன. அப்படி ஒளியை உண்டாக்குவதற்குக் காரணம் அவற்றிற்கு ஏற்பட்ட உஷ்ண மிகுதிதான். இதே காரணத்தினால்தான் மின்சார விளக்கிலுள்ள கம்பி நூலும் உஷ்ணம் அதிகரித்து ஒளி வீசுகிறது.

254 அப்பா! வாளி ஜலத்துக்குள் இருக்கும்பொழுது லேசாகவும், ஜலத்துக்கு மேலே வந்ததும் கனமாகவும் இருக்கிறதே, அதற்குக் காரணம் என்ன?

தம்பி! எந்த வஸ்துவும் ஜலத்துக்குள் சென்றதும் அதன் நிறை குறைந்து போகிறது. நிறை என்றால் என்ன? பூமி அதைத் தன்னிடம் இழுப்பதேயாகும். ஆனால் ஜலத்துக்குள் போனால், பூமி கீழே இழுக்கிறது. ஜலம் மேலே தள்ளுகிறது. அதனால்தான் நிறை குறைந்து தோன்றுகிறது. வாளி ஜலத்துக்குள் இருக்கும்பொழுது நாம் இழுப்பதோடு ஜலமும் மேலே தள்ளுவதால் வாளி மேலே லேசாகத் தெரிகிறது. ஆனால் வாளி ஜலத்துக்கு வந்ததும் நாம் மட்டுமே இழுக்கிறோம், அதனால் கனமாய்த் தெரிகிறது.