உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

166

கேள்வியும்


255 அப்பா! க்ஷவரக் கத்தியில் தேங்காய் நெய் தடவி வைக்கிறார்களே, அதற்குக் காரணம் என்ன?

தம்பி! கத்தி இரும்பால் செய்யப்படுகிறது. இரும்பானது ஜலமுள்ள காற்றுப்பட்டால் அதிலுள்ள பிராண

வாயுவோடு சேர்ந்து வேறு ஒரு வஸ்துவாக மாறுகிறது. அந்தப் புது வஸ்துவைத்தான் "துரு" என்று கூறுவார்கள். அவ்விதமாக இக்கத்தியில் துரு உண்டானால் கத்தி கெட்டுப் போகும். க்ஷவரம் செய்ய உபயோகப்படாது. அதனால் துருப்பிடியாமல் இருப்பதற்காக அதன்மீதுதேங்காய் நெய் தடவி வைக்கிறார்கள். அவ்விதம் நெய் தடவிவைத்தால் ஜலக் காற்றுடன் சேரமுடியாது, துருப்பிடியாமல் இருக்கும்.

256 அப்பா! அநேக வஸ்துக்கள் நாளாய்விட்டால் மஞ்சள் நிறமாகின்றனவே, அதற்குக் காரணம் என்ன?

ஆமாம்! பச்சை இலைகள் பழுத்து மஞ்சளாகின்றன. பழைய புஸ்தகங்களின் கடுதாசிகள் மஞ்சளாய்ப் போய் விடுகின்றன. வேஷ்டி துணிகள்கூட வெகுகாலமாக எடுக்காமல் வைத்து விட்டால், மஞ்சள் நிறம் அடைந்து விடுகின்றன. இதற்கெல்லாம் காரணம் அந்த வஸ்துக்களிலுள்ள சாயவஸ்துக்கள் க்ஷணித்து அவற்றிலுள்ள மஞ்சள் நிறம் மட்டும் எஞ்சி நிற்பதுதான். தாவர வஸ்துக்கள் தான் இப்படி மஞ்சள் நிறமாக மாறுகின்றன. பித்தளையும் தங்கமும் மஞ்சள் நிறம்தான். அவைகள் நாளானதும் அதிக மஞ்சள் நிறமாக ஆகிவிடுவதில்லை. அநேகமாக முதலில் இருந்த மஞ்சள் நிறங்கூட மங்கியே போகிறது.