பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

168

கேள்வியும்

கொள்ளும்படி செய்கிறது. நாம் அந்தக் குண்டை அழுத்திப் புட்டியைத் திறந்ததும், ஜலத்தில் சேர்த்துள்ள கரியமிலவாயு வெளியேறுகிறது. குமிழிகள் உண்டாகின்றன.

260 அப்பா! மோரில் வெண்ணெய் எடுக்கிறார்களே, அதற்குக் காரணம் என்ன?

தம்பி! பாலில் பல வஸ்துக்கள் உள. அவற்றுள் கொழுப்பு ஒன்று. அது பாலில் கண்ணுக்குத் தெரியாதபடி மறைந்திருக்கிறது. ஆனால் பாலை அதிக நேரம் காய்ச்சினால் அப்பொழுது அதிலுள்ள கொழுப்பு ஆடையாகப் படரும். அதில் கொஞ்ச மோரை உறை ஊற்றினால் தயிராய் விடும். அதில் ஜலம் சேர்த்து மத்துக்கொண்டு கடைந்தால், ஆடையிலுள்ள கொழுப்பு மத்தில் வந்து ஒட்டிக்கொள்ளும். அது தான் வெண்ணெய். அது உடம்புக்கு அதிக நன்மையான உணவு. ஆனால் அது வைத்திருந்தால் கெட்டுப்போகும். ஆனால் வெண்ணெய்பை உருக்கி நெய் ஆக்குவார்கள். அப்பொழுது மோர்த்துளிகள் எல்லாம் ஆவியாக ஓடிவிடும். தனிக்கொழுப்பு மட்டும் மிஞ்சி நிற்கும். அதுதான் நெய்.

261 அப்பா! பாலும்மோரும் புளித்துப் போகின்றனவே, அதற்குக் காரணம் என்ன?

தம்பி! உலகில் எங்கும் எத்தனையோ விதமான நுண்ணுயிர்கள் உள. அவற்றுள் சில நமக்கு நன்மை செய்யும், சில தீமை செய்யும். பாலைப் புளிக்கச் செய்யும் நுண்ணுயிரும் ரொட்டியைப் பொங்கச் செய்யும் நுண்ணுயிரும் நன்மை செய்வன. க்ஷயம், காலரா உண்டாக்கும் நுண்ணுயிர்கள் தீமை செய்வன. எவ்வளவு சுத்தமான பாலாயிருந்தாலும் அதில் சில "பால் நுண்ணுயிர்கள்" காணப்படும். அவை நேரம்