பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிலும்

11

எப்பொழுதும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. அதன் கிரணங்கள் ஒரே மாதிரியாகத்தான் பொழிந்து கொண்டிருக்கின்றன. ஆனால் பூமி சூரியனைச் சுற்றும் பொழுது செங்குத்தாக இருந்துகொண்டு போகவில்லை; சிறிது சாய்ந்துகொண்டேதான் போகிறது. அதனால் நாம் இருக்கும் பாகம் சில மாதங்களில் சூரியனைப் பார்த்துச் சாய்ந் திருக்கும். அப்பொழுது சூரிய கிரணங்கள் நம்மீது நேராக வந்து சேரும். காற்றுாடு அதிக தூரம் வரவேண்டியதில்லை. அதனால் அக்காலத்தில் அதிக உஷ்ணமாயிருக்கும். அந்தக் காலத்தைத்தான் வேனில் என்று கூறுகிறோம். சில மாதங்களில் நாம் இருக்கும் பாகம் சூரியனுக்கு அப்பால் சாய்ந்திருக்கும்; அப்பொழுது சூரிய கிரணங்கள் நம்மீது சாய்ந்தே வந்து சேரும். காற்றுாடு அதிக தூரம் வர வேண்டியிருக்கும். அதனால் அக்காலத்தில் உஷ்ணம் அதிகமாயிராது. அந்தக் காலத்தைத்தான் குளிர்காலமென்று கூறுகிறோம்.

சில நாட்களில் உஷ்ணமான காற்று வீசும். சில நாட்களில் குளிர்ந்த காற்று வீசும். அந்தக் காரணத்தாலும் உஷ்ணம் அதிகப் படுவதும் குறைவதும் உண்டு.

நம்முடைய உடம்பில் சதாகாலமும் வியர்வை உண்டாய்க் கொண்டும் ஆவியாக மாறிக்கொண்டும் இருக்கிறது. அப்படி வியர்வை ஆவியாக மாறும்பொழுது ஆவியாவதற்கு வேண்டிய உஷ்ணத்தை உடம்பிலிருந்து கிரகித்துக்கொள்கிறது. உடம்பு குளிர்ச்சி அடைகிறது. ஆனால் சில நாட்களில் காற்றில் அதிகமான நீராவி தேங்கி நிற்கும். அதனால் அது மேற்கொண்டும் நீராவியை ஏற்றுக் கொள்ளாது. அதனால் வியர்வை ஆவியாக மாறமுடியாமல் போகிறது. உஷ்ணம் உடம்பில் தங்கிவிடுகிறது. அதனால் அந்த நாட்கள் அதிக உஷ்ணமாகத் தோன்றும்.

16 அப்பா! சூரியன் சுற்றவில்லை, பூமிதான் சுற்றுகிறது என்று கூறுகிறார்களே, அப்படியானல் சூரியன் அசையாமல்தான் இருக்கிறதோ?