பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

கேள்வியும்

நம்முடைய சூரியனைப்போலக் கோடானு கோடி சூரியன்கள் உள. அவற்றுக்கும் கிரகங்களும் சந்திரன்களும் உண்டு. அவற்றையே நாம் நட்சத்திரங்கள் என்று கூறுகிறோம். அங்கும் நம்முடைய சூரிய குடும்பத்தில் நடை பெறுவது போலயே நடைபெறுகின்றது. அதோடு நட்சத்திரங்கள் இரண்டு கூட்டங்களாக எதிர் எதிராக ஒடிக் கொண்டிருக்கின்றன. ஆயினும் இவ்விதம் ஒடுவதில் எள்ளளவும் பிழை ஏற்படக்காணுேம். அதற்குக் காானம் அறிஞர் கூறும் ஆகர்ஷ்ண சக்திதான்.

25 அப்பா! நட்சத்திரங்கள் ஒன்றுக்கொன்று ஒரே தூரத்தில் காணப்படுகின்றனவே, அப்படியானால், அவைகள் அசைவதில்லையோ?

ஆமாம் அவை ஒரே துரத்தில்தான் காணப்படுகின்றன. ஆனால் அதைக் கொண்டு அவை அசைவதில்லை என்று எண்ணாதே, நட்சத்திரங்கள் எல்லாம் இரண்டு கூட்டங்களாக ஒன்றுக்கொன்று எதிர்த்திசையை நோககி எப்போதும் ஒடிக்கொண்டிருப்பதாக அறிஞர்கள் கூறுகிறார்கள். அந்தக் கூட்டம் ஒன்றில் தான் நம்முடைய சூரியனும் அதன் கிரகங்களும் சந்திரன்களும் சேர்ந்திருக்கின்றன. இரண்டு கூட்டங்களும் மணிக்கு 50 ஆயிரம் மைல் வேகத்தில் ஒடுவதாக வானசாஸ்திரிகள் கணக்கிடுகிறார்கள். அவைகள் எல்லாம் ஒரே பாதையில் ஒரே வேகத்தில் ஒடிக் கொண்டிருப்பதால் நம்முடைய கண்களுக்கு அவை ஒன்றுக் கொன்று ஒரே தூரத்தில் அசையாமல் இருப்பது போலவே தோன்றுகிறது.

26 அப்பா! வானத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் தெரிகின்றனவே, அவை எத்தனை இருக்கும்?

தம்பி! நட்சத்திரங்கள் எத்தனை இருக்குமோ தெரியாது. ஆனால் சாதாரணமாக நாம் அவைகளை எண்ணிப் பார்த்தால் சுமார் ஆயிரம் இருப்பதாகத் தோன்றும். கண்