பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

கேள்வியும்

அதன் ஒளி வந்து சேர சுமார் நாலரை வருடிைங்கள் ஆகும். ஒளியானது ஒரு ஸெக்கண்டில் 1,83,500 மைல்கள் வருமானால் நாலரை வருஷத்தில் எத்தனை மைல்கள் வர வேண்டியிருக்கும்? 27 லட்சம் கோடி மைல்கள். இது பெரியதொகை, இதை அறிய முடியவில்லை அல்லவா? இதுவே இப்படியானல் ஆல்பா நட்சத்திரத்தைவிட அதக தூரத்திலுள்ள நட்சத்திரங்களின் தூரம் எவ்வளவு அதிகமாயிருக்கும்? அதனால் வான சாஸ்திரிகள் ஆல்பாவின் தூரம் என்ன என்று கேட்டால், 27 லட்சம் கோடி மைல்கள் என்று கூறாமல், நாலரை ஒளி வருஷங்கள் என்று கூறுவார்கள். அதே போல் இதர நட்சத்திரங்களின் துராத்தையும் ஒளி வருஷக் கணக்கில்தான் கூறுவார்கள்: ஆனால் வெகு தொலைவிலுள்ள நட்சத்திரங்கள் எவ்வளவு தூரத்தில் உள என்று கூறுவதற்கில்லை. அதிகத் தொலைவிலுள்ள நட்சத்திரம் 2,20,000 ஒளிவருஷத் துாரத்தில் இருப்பதாக அறிஞர்கள் எண்ணுகிறார்கள்.

28 அப்பா! நட்சத்திரங்கள் இரவில் தெரிகின்றனவே, பகலில் எங்கே போயிருக்கும்!

நட்சத்திரங்கள் இரவில் வானத்தில் இருப்பது போலவேதான் பகலிலும் வானத்தில் இருக்கின்றன. ஆனல் பகலில் சூரியனுடைய வெளிச்சம் அதிகப் பிரகாசமாகயிருப்பதால், நட்சத்திரங்கள் நம்முடைய கண்களுக்குத் தெரியாமல் இருக்கின்றன. பகலில் விளக்கு ஏற்றி வைத்திருந்தால் விளக்கு வைத்திருப்பதாக நாம் உணர்வதில்லை அல்லவா? அதுபோலத்தான்.

ஆயினும் சில நாட்களில் சந்திரன் பூமிக்கும் சூரியனுக்கும் இடையே வந்து சூரியன் முழுவதையும் நமக்குத் தெரியவொட்டாமல் மறைந்துவிடும். அதைத்தான் பூரண சூரிய கிரகணம் என்று கூறுவார்கள். அத்தகைய கிரகண சமயத்தில் நமக்குச் சூரியனுடைய ஒளி கொஞ்சங்கூட